விவாகமும் விவாகரத்தும் Jeffersonville, Indiana, USA 65-0221M 1ஜெபத்திற்காக நாம் சிறிது நேரம் தலை வணங்குவோம். மிகவும் கிருபையுள்ள பிதாவே, இந்த நாளின் விளைவைச் சந்திப்பவர்களாய், இன்று காலை இவ்வரங்கத்தில் நாங்கள் கூடியுள்ள சிலாக்கியத்திற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். இந்த நாள் எங்களுக்கு என்ன வைத்துள்ளது என்பதை நாங்கள் அறியோம். ஆனால் இந்த நாளை தம் கரங்களில் கொண்டுள்ளது யார் என்பதை நாங்கள் அறிந்தவர்களாய் இருக்கிறோம். எனவே, இன்றைய தினத்தையும், நாளைய தினத்தையும், நித்தியம் முழுவதையும் தம் கரங்களில் கொண்டுள்ளவர் அவருடைய நாமத்தில் கூடி வந்திருக்கும் எங்களை ஆசீர்வதிக்கவும், அவருக்கென்று உழைக்க எவ்வாறு சிறந்த முறையில் வாழ வேண்டுமென்று நாங்கள் அறிந்து கொள்ளவேண்டுமென்றும் வேண்டிக்கொள்கிறோம். பிதாவே, இதுவே எங்கள் முழு நோக்கமாயுள்ளது. எங்கள் இருதயங்களை அறிந்திருக்கிற தேவன் இது உண்மையென்று அறிவார். எங்களை உமது கரங்களில் சமர்ப்பிக்கிறோம். இந்த நாளில் எஞ்சிய பாகத்தை உமது ஊழியத்திற் கென்று அர்ப்பணிக்கிறோம். இயேசுவின் நாமத்தில், ஆமென். நீங்கள் உட்காருங்கள் (சகோ. பிரன்ஹாம் மேடையின் மேலுள்ள ஒருவரிடம் பேசுகின்றார் - ஆசி) 2காணக்கூடிய இந்த கூட்டத்தினருக்கும், இன்று காலை தொலைபேசியின் மூலம் தேசத்தின் பல்வேறு பாகங்களில் இணைக்கப்பட்டுள்ள காணக்கூடாத கூட்டத்தினருக்கும் காலை வணக்கம். இந்த முக்கியமான பொருளின் பேரில் பேசுவதற்காக இங்கு வந்துள்ளதை பெரும் சிலாக்கியமாகக் கருதுகிறேன். காணக் கூடிய கூட்டத்தினரே, எனக்கு முன்னால் திரை தொங்கிக்கொண்டிருப்பதால், நான் வலது பக்கத்திலும் இடது பக்கத்திலும் பேச வேண்டியதாயுள்ளது. அது நிச்சயமாக சிறிது குழப்பமாயுள்ளது. காணக்கூடாத கூட்டத்தினரே, என் வலதுபக்கத்தில் அரங்கம் உள்ளது. என் இடது பக்கத்தில் உடற்பயிற்சி நிலையம் உள்ளது. திரைநடுவில் திறந்துவிடப்பட்டு. நான் தரையில் நின்று கொண்டு, என் வலதுபக்கம், இடது பக்கம் என்பதாக அமைந்துள்ளது. இன்று காலை அரங்கத்திலும் உடற்பயிற்சி நிலையத்திலும் ஜனங்கள் நிரம்பி வழிகின்றனர் - மற்றும் எய்த் அண்டு பென் தெருவிலுள்ள சபையிலும், ஜனங்கள் நிரம்பி வழியும் மற்ற இடங்களுக்கு தொலைபேசி அமைப்பு இதைகொண்டு செல்கிறது. 3எங்களுக்கு கர்த்தருக்குள் மிகவும் மகத்தான தருணம் உண்டாயிருந்தது. இந்த காலை ஆராதனையில் நாங்கள் பெரிய எதிர்நோக்குதலுடன் இருக்கிறோம். இன்றிரவு கூட்டம், இந்த நான்கு நாள் கூட்டங்களுக்கு முடிவாக இருக்கப் போவதால், இங்கு இருக்க முடியும் அனைவரையும் நாங்கள் நிச்சயமாக வரவேற்கிறோம். இன்றிரவு தேவன் மிகவும் சிறப்பான ஒன்றை செய்து, நோயாளிகள் அனைவரையும் சுகமாக்கி, அவர் வழக்கமாக செய்யும் அரிய பெரிய காரியங்களைச் செய்து நமக்கு உச்சகட்டத்தை அளிப்பாரென்று நம்புகிறோம். இன்று மாலைக்காக நாங்கள் பெரிய எதிர்நோக்குதலுடன் இருக்கிறோம். பொது ஜனங்களை அன்புடன் வரவேற்கிறோம். ஒவ்வொருவரையும், எல்லா ஸ்தாபனத்திலுள்ளவர்களையும். நீங்கள் கிறிஸ்தவர்களாக இருக்க வேண்டுமென்பதல்ல. எங்கள் மத்தியில் பாவிகளையும் வரும்படி அழைக்கிறோம். நாம் வாழ்வதற்கென்று கர்த்தர் நமக்கு வகுத்துள்ள வழி என்னவென்று எங்களால் இயன்றவரை அவர்களுக்கு சிறந்த முறையில் போதிப்போம். கூட்டத்தினர் நடுக்கம் கொண்டிருக்கவில்லை என்று நம்பு கிறேன். நானும் நடுக்கம் கொண்டிருக்கக் கூடாதென்று தேவனை நம்பிக் கொண்டிருக்கிறேன். இரவு எனக்கு அபாரமாக அமைந்திருந்தது. அது எனக்கு அதிக பிரயாசத்தை விளைவித்தது. ஏனெனில் இன்று காலை நான் கூறப்போகின்ற காரியங்கள் நியாயத்தீர்ப்பின் நாளில் எனக்கு எதிர் நேராக வைக்கப்படும் என்பதை நான் உணருகிறேன். என்னால் உறங்க முடியவில்லை. இவைகளை நான் கூறாமல் போனால், நியாயத்தீர்ப்பின் நாளில் அது எனக்கு விரோதமாக அமையுமென்று நானறிவேன். எனவே அது கடினமாயுள்ளது. அதை என்னால் சரியாக விவரிக்க முடியவில்லை. 4இன்று காலை விவாகமும் விவாகரத்தும் என்னும் மகத்தான பொருளின் பேரில் நாம் விவாதிக்கப் போகின்றோம். இதை நான் ஞாயிறு பள்ளியாகச் செய்த காரணம், நமது நேரத்தை நாம் எடுத்துக்கொண்டு அதைக் குறித்து நிதானமாக பேசலாம் என்பதற்காகவே, இதன் பேரில் ஒரு பிரசங்கத்தை நிகழ்த்துவதற்கு பதிலாக, இது வேதத்திலிருந்து ஒரு போதனையாக இருக்கும். இதை நான் கூற முற்படுகிறேன். இந்த ஒலிநாடா மற்றவிடங்களிலுள்ள போதகர்களின் கைகளில் கிடைக்குமானால் (நாம் இந்த ஒலி நாடாவை விநியோகித்தால்)... அதைக் குறித்து சபை என்ன செய்யப் போகிறதென்று எனக்குத் தெரியாது. இந்த ஒலி நாடாவை விநியோகம் செய்வதற்கு முன்பு சகோ. ஃபிரட் சபை குழுவை காண வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். இதை ஒலிப்பதிவு செய்யவிருக்கும் தேசத்தின் பல்வேறு பாகங்களிலுள்ளவர்களே, நீங்கள் சகோ. சாத்மனிடமிருந்து இதைக் குறித்து கேள்விப்படும் வரைக்கும், மற்றவர்களுக்கு விநியோகம் செய்யாதீர்கள். இது விநியோகம் செய்யப்படுமானால், இந்த பொருளின் பேரில் நான் கூறுவதை ஏற்றுக் கொள்ளாத போதகர் சகோதரர்களோ அல்லது கிறிஸ்தவர்களோ எங்காகிலும் இருந்தால், இதை குறை கூறமாட்டீர்கள் என்று நம்புகிறேன். நான் கற்பிப்பது உங்களுக்கு புரியாமலிருந்தால், மேய்ப்பர்கள், போதகர்கள் என்னும் முறையில் அதை நிராகரிக்க உங்களுக்கு உரிமையுண்டு. நீங்கள் விசுவாசிக்கும் எதற்கும் நான் மதிப்பு கொடுக்கிறேன். 5இதைக்குறித்து இரண்டு விதமான கருத்தை கொண்டிருக்கும் மகத்தான பிரிவினர் உள்ளனர். இரண்டு கேள்விகள் இருக்குமானால், இவையிரண்டில் ஏதாகிலும் ஒன்று சரியாயிருக்க வேண்டும், அல்லது இரண்டுமே தவறாயிருக்க வகையுண்டு.எனவே அந்த பிரச்சினையை தீர்த்து வைக்க நாம் இன்று காலை தேவனுடைய வார்த்தையை பார்க்கப்போகின்றோம். என்னைப் பொறுத்தவரையில், அது வேதப்பிரகாரமான கேள்வியாயிருக்குமானால், அதற்கு வேதாகமமே நிச்சயமாக பதிலளிக்க வேண்டும். நாம் இந்த பொருளின் பேரில் பேசுவதற்கு முன்பு, வார்த்தையின் பேரில் நான் ஜெபிப்பதற்கு முன்பு, உங்கள் ஒவ்வொருவருக்கும் இதை கூற விரும்புகிறேன். அதாவது நீங்கள் - முக்கியமாக கிறிஸ்தவர்கள் - இன்று காலை எனக்காக ஜெபிக்கும்படி விரும்புறேன். இன்று காலை இதைக் கேட்டுக் கொண்டிருக்கும் காணக்கூடாத கூட்டத்தினரே, எனக்காக ஜெபியுங்கள். ஏனெனில் நான் உத்தமமும் உண்மையுமுள்ளவனாக இருக்க விரும்புகிறேன். 6இப்படிப்பட்டவைகளை நான் கூறும் போது யாராகிலும் ஒருவர் - அது ஒரே நபராயிருப்பினும் - இது ஜீவனுக்கும் மரணத்துக்குமிடையேயுள்ள ஒன்றாக எண்ணி இறுகப் பற்றிக் கொள்வார். இங்குள்ள உங்களில் அநேகர் விசுவாசித்து இவ்விடம் விட்டுச்செல்வீர்கள். ஒருக்கால் உங்களில் பலர் விசுவாசிக்கமாட்டீர்கள். ஆனால் என் ஊழியத்தில், நான் கூறுவதைக் கேட்பதற்கென்று வருகின்ற மக்கள் உள்ளனர், நான் என்ன கூற வேண்டுமோ அதைக் கேட்பதற்காகவே; அப்படிப்பட்டவர்கள் இன்று காலை அமெரிக்க ஐக்கிய நாடுகளின் பல்வேறு பாகங்களிலும், கனடாவிலும் கடலின் மறுபுறத்திலும் உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருக்கின்றனர். ஒரு மனிதன் நித்தியத்தை எங்கு கழிப்பான் என்பது என் கரங்களில் உள்ளது என்பதை நினைத்துப்பார்க்கும் போது, அது எனக்கு அதிக இறுக்கத்தை விளைவிப்பதாயுள்ளது என்பதை நீங்கள் உணரலாம்; ஏனெனில் நான் கூறுவதை அவன் இறுகப் பற்றிக் கொள்ளப் போகின்றான். எனவே அதற்கு பதிலளிக்க தேவன் என்னைப் பொறுப்பாளியாக்குவார். இதை என்னால் இயன்றவரை உத்தமமாக அணுக விரும்புகிறேன். 7இப்பொழுது நமது சகோதரிகளைக் கேட்டுக் கொள்கிறேன். அவர்களுக்கு முன்னால் நான் பேசுவதற்காக என் வார்த்தைகள் சிலவற்றை மாற்றிக் கொண்டேன். ஆண்களும் பெண்களும் கலந்துள்ள இப்படிப்பட்ட கூட்டத்தில் பேசமுடியாத சில காரியங்களை பில்லி இன்று காலை தன் ஜேபியில் வைத்திருக்கிறான். நான் ஒருக்கால் சிலவற்றை கூறுவேன். நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அது உங்கள் சகோதரனிடத்திலிருந்து வந்ததாக பாவித்துக் கொள்ளுங்கள். எனக்குத் தெரிந்தமட்டில், நீங்கள் ஒரு மருத்துவரின் அலுவலகத்தில் உட்கார்ந்து கொண்டு அவர் சொல்வதைக் கேட்பீர்களானால், அவர் வெளிப்படையாக சில வார்த்தைகளை உங்களிடம் கூற நேரிடும். வாலிப ஆண்களும் பெண்களுமாகிய உங்களில் சிலர் தவறான அபிப்பிராயம் கொள்ள வேண்டாம். நீங்கள் விசுவாசித்து அமைதியாக அமர்ந்திருக்க விரும்புகிறேன். உண்மையை உண்மையாகவே எடுத்துக் கூற வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இப்பொழுது கூறப்படப் போவதுடன் உங்களில் பலர் இணங்கமாட்டீர்கள் என்பதில் ஐயமில்லை, ஆனால் வேதாகமத்தைக் கொண்டு அதை உங்களுக்கு நிரூபிக்க விரும்புகிறேன். நீங்கள் பயபக்தியுடன் கேட்பீர்களானால், நான் ஆணித்தரமாக வலியுறுத்திக் கொண்டு வருவதைக் குறித்து தெளிவான கருத்து உங்களுக்கு உண்டாகுமென்று நம்புகிறேன். அது விளக்கத்தை அளிக்குமென்று உறுதியாக நம்புகிறேன். 8இது சிறிது நீளமாக இருக்கும், ஒருக்கால் ஒன்றரை மணி நேரம், அல்லது அதற்கும் அதிகமாக. அது எவ்வளவு நேரம் எடுக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. நான் மறுபடியுமாக இந்நேரத்தில் இதைக் கூற விரும்புகிறேன். உங்களுடைய வார்த்தைகளை மக்கள் பற்றிக் கொள்ளப் போகின்றனர் என்பதை அறிந்தவர்களாக; தங்கள் போதகர் கூறும் வார்த்தையை பற்றிக் கொள்கின்றனர். ஆம், நானும் ஒரு போதகராக இருந்திருக்கிறேன். அவர்கள் ஒரு போதகரின் வார்த்தைகளை, அது மரணத்துக்கும் ஜீவனுக்குமிடையேயுள்ள ஒன்றாக எண்ணி, இறுகப்பற்றிக் கொள்கின்றனர். அவர்கள் தங்கள் ஸ்தாபனத்தை சேர்ந்த குருவானவரின் சொற்களை, அது மரணத்துக்கும் ஜீவனுக்குமிடையேயுள்ள ஒன்றாக எண்ணி, இறுகப்பற்றிக் கொள்கின்றனர். அந்த குருவானவரும், தான் வேத பள்ளியில் எவ்வாறு கற்பிக்கப்பட்டாரோ, அதேவிதமாக தனக்குத் தெரிந்த வரையில், தன் ஜனங்களுக்குப் போதிக்கிறார். வெவ்வேறு மார்க்கங்கள் தங்கள் குருவானவர்களைக் கொண்டுள்ளன. போதகர் உண்மையில் ஒரு ஆசாரியர்: அவர் மக்களுக்காக பரிந்து பேசுபவர், எனவே அப்படிப்பட்ட ஒருவர், வேதபள்ளியிலும் குருக்களின் மடத்திலும் கற்ற அனைத்தையும் ஆழ்ந்த உத்தமத்துடன் அவர் கற்ற விதமாகவே கற்பிக்கிறார்.... எனக்கு எந்த விதமான வேதபள்ளி அனுபவமோ அல்லது குருக்கள் மடத்தின் அனுபவமோ கிடையாது. அதற்கு விரோதமாக நான் எதையும் கூறவில்லை. ஆனால் நான் விசித்திரமான ஒரு வாழ்க்கையை கொண்டவனாயிருக்கிறேன். 9நான் சிறுவனாயிருந்த போதே அழைக்கப்பட்டேன். இந்த அழைப்பில், நான் காணக்கூடியதும் கேட்கக் கூடியதுமான ஒரு அடையாளம் எனக்கு அருளப்பட்டது - என் ஏழாம் வயதில், இங்குள்ள இதே ஊடிகா பைக்கில் ஒரு புதரில் அக்கினி ஸ்தம்பம் தொங்கினது. என் தகப்பனார் சமீபத்தில் மரித்த திரு. ஓ. எச். வாத்தன் என்பவரின் கீழ் வேலை செய்துகொண்டிருந்தார். என் வரலாற்றுப் புத்தகத்தை நீங்கள் படித்திருக்கின்றீர்கள்; அந்த வரலாறு உங்களுக்குத் தெரியும். அன்று முதல்... பிறகு ஆற்றில் ஜனங்களுக்கு முன்பாக அது காணத்தக்க விதமாக தோன்றினது. இப்போது... அநேக முறை அது புகைப்படமாக எடுக்கப்பட்டு புகைப்படமாக எடுக்கப்பட்ட ஒரே இயற்கைக்கு மேம்பட்ட ஒன்று என்று விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்ட இது இன்று வாஷிங்டன் டி.சியிலுள்ள மதசம்பந்தமான காட்சிகள் வைக்கப்பட்டுள்ள மண்டபத்தில் பதிப்புரிமை பெற்று தொங்கிக் கொண்டிருக்கிறது - இஸ்ரவேல் ஜனங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டு வந்த அதே அக்கினி ஸ்தம்பம், எல்லா வகையிலும் அதே போன்று காணப்படுகின்றது. அது இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரத்துவத்தில் ஆவியின் ரூபத்தில் இருத்தல் என்று நான் நம்புகிறேன். அவர் முதலில் வந்தபோது மனுஷகுமாரன் என்று அழைக்கப்பட்டார்; இப்பொழுது அவர் தேவனுடைய குமாரன் என்று அழைக்கப்படுகின்றார்; ஆயிர வருட அரசாட்சியின் போது அவர் தாவீதின் குமாரனாக இருப்பார். அவர் மனுஷகுமாரனாக, இயற்கைக்கு மேம்பட்டவராக இருக்கிறார்: வரப்போகும் அந்த மகத்தான ஆயிரவருட அரசாட்சியின் போது அவர் தாவீதின் குமாரனாக, தாவீதின் சிங்காசனத்தில் மேல் வீற்றிருப்பார். வேத வாசகர்கள் அனைவரும் அறிந்துள்ளபடி, அது தேவன் தாவீதுக்கு அளித்த தெய்வீக வாக்குத்தத்தம் - அதாவது அவர் அவனுடைய குமாரனை எழுப்பி அவன் சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கச் செய்வார் என்னும் வாக்குத்தத்தம். 10இப்பொழுது இந்த வினோதமான, விசித்திரமான ஊழியத்தில், நான் ''தேவன்'' முதல் ''பிசாசு'' முடிய எல்லா பெயர்களாலும் அழைக்கப்பட்டுவிட்டேன்... அது எப்பொழுதும் அவ்விதமாகவே உள்ளது. அப்படித்தான் கத்தோலிக்க சபையின் தலைமைப் பேராயர் அன்றிரவு என்னிடம் கூறினார் (அந்த விவாதம் நடந்த இடத்தில்) அவர், “சகோ. பிரன்ஹாமே, யோவான் ஸ்நானன் ஏசாயா தீர்க்கதரிசியினால் முன்னுரைக்கப்பட்டு வேதாகமத்தில் தன்னைத் தெளிவாக அடையாளம் காண்பித்தான். உங்கள் ஊழியமும் சபையில் தெளிவாக அடையாளப்படுத்தப்படுகிறது. லூத்தரன்கள் வேதாகமத்தில் கூறப்பட்டுள்ளனர். லூத்தரன்கள் லூத்தரை அறிந்திருந்தனர், வெஸ்லியன்கள் வெஸ்லியை அறிந்திருந்தனர். ஆனால் பெந்தெகொஸ்தேயினர் என்ன செய்கின்றனர்? அவர்கள் அலைந்து திரிகின்றனர்; எங்கே போவதென்று அவர்களுக்குத் தெரியவில்லை'' என்றார். நான் “ஐயா, அதை நான் பாராட்டுகிறேன்'' என்றேன். அந்த நேரத்தில் தானே ஆவியானவர் ஒரு ஸ்திரீயின் மீது இறங்கி (அவள் என்னை தன் வாழ்க்கையில் கண்டதேயில்லை) பேசி, அதையே அடையாளப்படுத்திக் காண்பித்தார். இன்று காலை நான் பேசப்போகும் செய்தியின் முன்னிலையில் உத்தமமாக இதை கூறுகிறேன். எனக்குத் தெரியாது. நான் அவரிடம் ''ஐயா, என்னால் அப்படி கூற இயலவில்லை. கூறுவதற்கு அது ஒரு பெரிய காரியம். அப்படித்தான் தென்படுகிறது'' என்றேன். ஒரு காரியம் மாத்திரம் எனக்குத் தெரியும், ஏதோ ஒன்று நிச்சயமாக சம்பவித்துவிட்டது. இவையனைத்தும் உலகம் முழுவதிலும் விஞ்ஞானரீதியாய் மறுபடியும் மறுபடியுமாக நிரூபிக்கப்பட்டுவிட்டது. எனவே அது கட்டுக்கதையாக இருக்க முடியாது; அது உண்மையான ஒன்று. அது என்ன? இன்று காலை உங்களிடம் பேசுவதற்கு முன்பு, இதை அறிக்கை செய்ய விரும்புகிறேன். எனக்குத் தெரியாது: முந்நாட்களில் என்னுடன் பேசி இவைகளை எனக்கு அறிவித்தவர் என்னிடம் கூறும்வரைக்கும், நான் எந்த ஒரு அசைவையும் செய்ய தைரியப்பட மாட்டேன். 11நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தம்மை தேவனுடைய குமாரனாக அடையாளம் காண்பிக்கவில்லை என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். அவர், ''நீர் அப்படி சொல்கிறீர்; இதற்காகவே இவ்வுலகத்திற்கு வந்தேன்'' என்றார். அவர் தம்மை அடையாளம் காண்பிக்கவில்லை. இஸ்ரவேல் ஜனங்களை வழி நடத்தின அந்த அக்கினி ஸ்தம்பம், ஆவியின் ரூபத்தில் இருந்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே . அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? தேவனிடத்திலிருந்து புறப்பட்டு சென்ற 'லோகாஸ்' (Logos). அவர் இவ்வுலகில் இருந்த போது, “நான் தேவனிடத்திலிருந்து புறப்பட்டு வந்தேன். மறுபடியும் தேவனிடத்திற்குப் போகிறேன்'' என்றார். அது நம்மெல்லாருக்கும் தெரியும். அவருடைய மரணம், அடக்கம் உயிர்த்தெழுதலுக்குப் பிறகு; கிறிஸ்தவர்களைத் துன்புறுத்துவதற்காக தர்சு பட்டினத்தானாகிய சவுல் தமஸ்குவுக்கு சென்று கொண்டிருந்தான். ஏனெனில் அவர்கள் கற்றதற்கு மாறாக கிறிஸ்தவர்கள் போதித்துக் கொண்டிருந்தனர். சவுல் கமாலியேலின் கீழ்ப்பயின்ற பெரும் மேதை. அவர்களுடைய பள்ளியில், குருக்கள் மடத்தில் அவன் தலைசிறந்த ஆசிரியனாக விளங்கினான். அவன் சபையில் ஒரு பெரிய அதிகாரி. நடுப்பகலில் இந்த மகத்தான ஒளி - அக்கினி ஸ்தம்பம் - அவனைத் தாக்கி கீழே தள்ளியது. அப்பொழுது ஒரு சத்தம். ''சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய்?'' என்று கேட்டது. 12நீங்கள் கவனிப்பீர்களானால், பவுல் - சவுல் தரையை விட்டு எழுந்த போது, 'ஆண்டவரே, நீர் யார்?' என்றான். அவன் யூதனாயிருந்தபடியால், அது தேவனுக்கு அடையாளமாக அமைந்திராமல் வேறே ஒன்றாக அது இருந்திருக்குமானால் அவன் அதை “ஆண்டவரே'' என்று அழைத்திருக்கமாட்டான், ஆகவே அது அந்த அதே அக்கினி ஸ்தம்பம் தான். இயேசு, ''நான் தேவனிடத்திற்குப் போகிறேன்... நான் தேவனிடத்திலிருந்து புறப்பட்டு வந்தேன். மறுபடியும் தேவனிடத்திற்குப் போகிறேன்'' என்றார். அவர் மறுபடியும் அக்கினி ஸ்தம்ப வடிவிற்கு திரும்பிச் சென்றார். அவர், ''நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே; முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம்'' என்றார். பேதுரு அப்போஸ்தலன் (சபையைக் கட்டுவதற்கென அவனிடம் திறவு கோல்கள் கொடுக்கப்பட்டன) சிறையிலிருந்த போது, இதே அக்கினி ஸ்தம்பம் சிறைக் கம்பிகளின் வழியாக வந்து, சிறைக் கதவுகளைத் திறந்து, சிறைக் காவலர்களை உறக்கத்தினின்று எழுப்பாமல், விசித்திர விதமாக பேதுருவை வெளியே கொண்டு வந்தது என்று நாம் காண்கிறோம். எனக்கு அது நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிற இயேசு கிறிஸ்துவே. நீங்கள் எதையும் அதன் சுபாவத்தினால் அறிந்து கொள்ளலாம். எதுவுமே அதன் சுபாவத்தினால், அது கொடுக்கும் கனியினால் அறிந்து கொள்ளப்படும். இந்த ஒளி எந்த விதமான கனியைக் கொடுக்கிறது என்பதை நீங்கள் கவனிக்க விரும்புகிறேன். அது தேவன், ஏனெனில் அது எப்பொழுதுமே தேவனுடைய வார்த்தைக்குச் சென்று, தேவனுடைய வார்த்தையை நிரூபித்து, தேவனுடைய வார்த்தையை பிரசங்கிக்கிறது. தேவனும் அந்த வார்த்தையை உங்கள் முன்னிலையில் உலகப் பிரகாரமாக நிரூபித்துக் காண்பிக்கிறார். அதில் ஏதோ ஒன்று அடங்கியிருக்கவேண்டும். 13ஜனங்கள் என்னை தீர்க்கதரிசியென்று அழைக்கின்றனர், நான் என்னை தீர்க்கதரிசியென்று அழைத்துக் கொள்வதில்லை. அவ்வாறு அழைத்துக் கொள்ள நான் தைரியப்படமாட்டேன். ஆனால் இதை நான் கூறமுடியும். காரியங்களை முன்கூட்டி காணவும், நடந்தவைகளையும், நடக்கப் போகின்றவைகளையும், நடந்து கொண்டிருப்பவைகளையும் நான் அறிவிக்கும்படி கர்த்தர் செய்திருக்கிறார்; அவ்வாறு நான் கூறின பல்லாயிரக்கணக்கான சமயங்களில், ஒரு முறையாகிலும் அது தவறாக இருந்ததில்லை. அவர் நடக்குமென்று கூறின் அனைத்துமே நடந்தேறின. அது நம்மெல்லாருக்கும் தெரியும். காணக்கூடிய இந்த கூட்டத்தினரின் மத்தியில் அல்லது வேறெங்காகிலும் உள்ள எவராகிலும் அது ஒருமுறை தவறினது என்று கூற முடியுமானால், நீங்கள் எழுந்து நின்று அதைக் கூற உங்களுக்கு உரிமையுண்டு. ஆனால் அவ்வாறு கூறின பல்லாயிரக் கணக்கான சமயங்களில், அது ஒவ்வொரு முறையும் சரியாக இருந்ததென்று நீங்கள் அறிந்திருப்பீர்களானால், 'ஆமென்' என்று சொல்லுங்கள் (சபையோர் 'ஆமென்' என்கின்றனர் - ஆசி). எனவே அதுவே உலகமெங்கும் நிகழந்திருக்கவேண்டும். ஏதோ ஒன்று நடக்கவிருக்கிறது. ஒரு நோக்கமில்லாமல், தேவன் இவைகளை அனுப்புவது கிடையாது. 14இன்று காலை நான் சட்டையின் முன் கை இணைப்பை (cuff links) அணிந்து கொண்டுள்ளதைக் குறித்து யோசித்துக் கொண்டிருந்தேன் (என் குறிப்புகளில் ஒன்றை நான் இங்கு வைத்தபோதும். உங்களில் பலர் ஜேன் ரசல் என்னும் சினிமா நட்சத்திரத்தைக் குறித்து கேள்விபட்டிருக்கிறீர்கள். அவளுடைய தாய் பெந்தெகொஸ்தே ஸ்தாபனத்தை சேர்ந்தவள்; டானி ஹென்றி அவளுடைய உறவினன், அவளுடைய தாயின் சகோதரியின் மகன். அவன் ஒரு பாப்டிஸ்ட். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவன் கலிபோர்னியாவிலுள்ள லாஸ் ஆஞ்சலிஸில் நடைபெற்ற வர்த்தகரின் கூட்டத்துக்கு வந்திருந்தான். அப்பொழுது தான் நான் பெரிய, வல்லமையான, சக்தி வாய்ந்த விஷயம் ஒன்றைக் கூறி முடித்திருந்தேன். அப்பொழுது கண்காணிப்பாளர் (அசெம்பிளீஸ் ஆப் காடின் பொதுவான கண்காணிப்பாளர்களில் ஒருவர். அவர் உட்கார்ந்து கொண்டிருந்த மாடியின் முன் பக்கத்திலுள்ள இடத்திலிருந்து கீழே இறங்கி வந்து மேடையின் மேலேறி, “சகோ. பிரன்ஹாம் அந்த அர்த்தத்தில் கூறவில்லையென்று நினைக்கிறேன்'' என்றார். நான், ''ஐயா, அந்த அர்த்தத்தில் தான் கூற வேண்டியதாயிருந்தது. அது கர்த்தர் உரைக்கிறதாவது'' என்றேன். பிறகு... அது இக்காலத்திலுள்ள சபையைக் குறித்த ஒன்று. 15அந்த சமயத்தில் வர்த்தகனான இந்த வாலிபன் (அவனுடைய சகோதரன் அங்கு...) அவர் அன்று காலை தொலைக் காட்சிக்காக படம் பிடித்துக் கொண்டிருந்தான். (அவனுடைய மற்ற சகோதரன் கலிபோர்னியா நாட்டின் சாலை மேற்பார்வையாளர்). கூட்டம் முடிந்த பின்பு டானி ஹென்றி மேடைக்கு வந்தான். அங்கு மனிதர்கள் உட்கார்ந்து கொண்டிருந்தனர். அவன் என்னிடம் நடந்து வந்து என் தோளின் மேல் கை போட்டு, “சகோ. பிரன்ஹாமே, நான் கூறப்போவது தேவ தூஷணமாக தொனிக்காது என்று நினைக்கிறேன். அது வெளிப்படுத்தின விசேஷம் 23-ம் அதிகாரமாக எழுதப்படலாம்'' என்றான். (வெளிப்படுத்தின விசேஷத்தில் 22 அதிகாரங்கள் மாத்திரமே உள்ளன). அவன் ”இது தேவதூஷணமாக தொனிக்காதென்று எண்ணுகிறேன்'' என்றான். அதை அவன் கூறின மாத்திரத்தில் - அந்த பையன் ஒரு பாப்டிஸ்டு. அவனுக்கு இயற்கைக்கு மேம்பட்டதைக் குறித்து ஒன்றுமே தெரியாது - அவனுடைய கைகளை என் தோளின் மேல் போட்டவாறு அந்நிய பாஷையில் பேசத் தொடங்கினான். அங்கு பருமனான, கறுப்பு நிறமுள்ள ஸ்திரீ எனக்கு முன்னால் உட்கார்ந்து கொண்டிருந்தாள். அவள் எழுந்து நின்று, இதற்கு அர்த்தம் உரைக்கத் தேவையில்லை. நான் லூயிசியினாவிலுள்ள பாடன் ரூசை சேர்ந்தவள். அது தெளிவான பிரெஞ்சு மொழி என்றாள். அங்கு உட்கார்ந்து கொண்டிருந்த பிரெஞ்சுக்காரனான விக்டர் லீடியோவும், ''நிச்சயமாக, நான் ஒரு பிரெஞ்சுக்காரன். அது பிழையற்ற பிரெஞ்சு மொழி'' என்றார். நான், “ஒரு நிமிடம் பொறுங்கள். நீ ஒன்றும் சொல்வதற்கு முன்பு அவன் கூறினதை நீ எழுது. அவன் கூறுவதை நீயும் எழுது. உங்கள் இருவரின் குறிப்புகளையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம்'' என்றேன். அவள் எழுதினாள், அவரும் எழுதினார். அவர்கள் எழுதின நிறுத்தக் குறியீடுகளும் (Punctuation) கூட ஒன்றாகவேயிருந்தன. அவர்கள் தாங்கள் எழுதின குறிப்புகளை மேலே கொண்டு வந்த அதே நேரத்தில் நல்ல தோற்றமுடைய கறுத்த தலைமயிர் கொண்ட ஒரு இளைஞன் பின்னாலிருந்து நடந்து வந்தான். அவனுக்கு உட்கார போதிய இடமில்லாத காரணத்தால் அவன் பின்னால் நின்று கொண்டிருந்தான். அவன் முன்னால் நடந்து வந்து, “ஒரு நிமிடம் பொறுங்கள்! நான் எழுதின குறிப்பையும் காண்பிக்க விரும்புகிறேன். நான் ஐ.நா. சபையில் பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளராக பணியாற்றுகிறேன்'' என்றான். 16அங்கு எழுதப்பட்ட மூன்று குறிப்புகளும் ஒன்றாகவே இருந்தன. பிரெஞ்சு மொழியில் அது இப்படித்தான் எழுதப்பட்டிருந்தது (இது மூலக் குறிப்பு - அந்நியபாஷை பேசப்பட்ட போது எழுதப்பட்டது. இது டானி எழுதின குறிப்பு. அவன் அதை ஜேபியில் வைத்திருந்தான். அது கிறிஸ்தவ வர்த்தகரின் பத்திரிகையில் வெளியானது). “நீ குறுகலான வழியையும், கடினமான வழியையும் தெரிந்து கொண்டாய். நீ சுயமாகவே தெரிந்து கொண்டு நடந்தாய்; நீ சரியான, பிழையற்ற தீர்மானம் செய்தாய். அது என் வழி. உன் அதி முக்கியமான இந்த தீர்மானத்தின் நிமித்தம், பரலோகத்தின் மிகப் பெரிய பங்கு உனக்காக காத்திருக்கும், நீ எத்தகைய மகிமையான தீர்மானம் செய்தாய்! இது தன்னில் தானே உனக்கு தெய்வீக அன்பில் பிரம்மாண்டமான வெற்றியை அளித்து அதை நிறைவேற்றும்'' அந்த மனிதன் இங்கு கையொப்பமிட்டிருக்கிறான். ”மேற்காணும் வாக்குமூலம் சகோ. பிரன்ஹாமைக் குறித்து டானி ஹென்றி தீர்க்கதரிசனம் உரைத்ததன் அர்த்தமாகும். இது கலிபோர்னியாவிலுள்ள லாஸ் ஆஞ்சலிஸிலுள்ள உணவு விடுதியில் மூன்று சாட்சிகளால் அளிக்கப்பட்ட ஒன்று'. 17இந்த தீர்க்கதரிசனம் உரைத்த அதே இளைஞன் - அவன் கூறினது என்னவென்று அறியாமலிருந்தான். ஒரு மாதத்துக்கு முன்பு எருசலேமுக்கு சென்றிருந்தான். இயேசு மரித்து அடக்கம் பண்ணப்பட்ட கல்லறைக்கு சென்று அங்கு படுக்கும் சிலாக்கியத்தை அவன் பெற்றான். அவன் அங்கு படுத்துக் கொண்டிருந்தபோது என்னைக் குறித்த நினைவு அவனுக்கு பலமாக வந்து அவன் அழத் தொடங்கினதாகக் கூறினான். அவன், ''உலகத்துக்கும், இந்த காரியங்களுக்கும், எல்லா சபைகளுக்கும் எதிராக நிற்பதென்பது சகோ. பிரன்ஹாமுக்கு மிகவும் கடினமான ஒன்றாய் இருந்து வந்துள்ளது' என்று எண்ணினானாம். பில்லி கிரகாமைச் சார்ந்த ஒருவர் ஒரு முறை இவ்வாறு கூறினாராம்: ''எல்லா சபைகளும் பில்லி கிரகாமுக்காக இணைந்துள்ளதால், அவரை எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது; அவ்வாறே பெந்தெகொஸ்தேயினர் மூலம் ஓரல்ராபர்ட்ஸை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் ஜனங்கள் போதிக்கப்பட்டதற்கு மாறான ஒன்றை நாங்கள் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்'', அது தேவன். டானி தன் பொழுதுபோக்கிற்காக, சிறு கற்களை உண்டாக்குவது வழக்கம். இயேசுவின் சிலுவை வைக்கப்பட்டதான் அவர்கள் கூறின அந்த கற்பாறைக்கு அவன் நடந்து சென்றான். அப்பொழுது யாருமே அங்கில்லை. எனவே அவன் அதிலிருந்து ஒரு சிறு கல்துண்டை உடைத்து, அதை ஞாபகச் சின்னமாக தன் ஜேபியில் போட்டு வீட்டுக்கு வந்து அதைக் கொண்டு ஒரு ஜதை சட்டையின் முன்கை இணைப்பை உண்டாக்கினான். அவன் உண்டாக்கின போது, அவைகளில் வினோதமாக இரத்தம் கறை படிந்துள்ளதாக காணப்பட்டது. அவை ஒவ்வொன்றிலும் தொடர்ச்சியாக மேலிருந்து கீழ்வரைக்கும் நேரான, குறுகலான பாதை காணப்படுகிறது. ஒருக்கால் அது .... நாங்கள், வேறு யாராகிலும் அதை கவனிக்காமலிருக்கலாம்; ஆனால் எனக்கோ, நான் விசுவாசிக்கும் காரியங்களுக்குப் பாராட்டுதலாக அது அமைந்துள்ளது. ஒவ்வொன்றுக்கும் ஒரு அர்த்தமுண்டு என்று நான் நம்புகிறேன். 18இந்த நேரத்தில், கர்த்தர் கூறியுள்ள யாவும்.... இது மல்கியா 4, லூக்கா இன்னும் இந்த கடைசி நாளில் சம்பவிக்க வேண்டிய வேதவாக்கியங்களில் அவர் உரைத்துள்ள தீர்க்கதரிசனத்தின் நிறைவேறுதலாய் இது இராமல் போனால் - இதை முடிவுரையாக கூற விரும்புகிறேன் - அந்த மனிதன் வரும் போது, அவனுக்கு அஸ்திபாரம் போடப்பட்டதாக இருக்கும். எனவே, அது அவ்வாறேயிருக்குமானால், என் கல்வியற்ற நிலையில் அவர் என் மீது வைத்துள்ள அன்புக்கும், நான் அவர் மீது வைத்துள்ள அன்புக்கும், நாம் ஜனங்களின் மீது வைத்துள்ள அன்புக்கும் பாராட்டுதலைத் தெரிவிக்கும் வகையில், சர்வ வல்லமையுள்ள தேவன் தாமே சிறிய சிலவற்றை நான் செய்ய அனுமதித்த காரணத்தால் அவருக்கு மிகவும் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். எனவே நான் மிகுந்த உத்தமத்தோடு விவாகமும், விவாகரத்தும் என்னும் பொருளை அணுகுகிறேன். தேவன் தாமே நம் எல்லார் மீதும் இரக்கமாயிருப்பாராக. இப்பொழுது, கூர்ந்து கவனியுங்கள். சகோதரிகளே, எழுந்து சென்றுவிடாதீர்கள். சிறிது நேரம் அமைதியாக உட்கார்ந்திருங்கள். சகோதரர்களே, அதையே செய்யுங்கள். இந்த இணைப்பின் மூலம் வந்து கொண்டிருக்கும் செய்தியை கேட்காமல் இயந்திரத்தை அணைத்து விடாதீர்கள். அப்படி செய்யாதீர்கள். அது முடியும் வரைக்கும் சில நிமிடங்கள் அமைதியாக உட்கார்ந்திருங்கள். கூர்ந்து கவனியுங்கள். நீங்கள் இணங்காமல் போனால், நான் உபயோகிக்கும் வேதவாக்கியங்களை குறித்து வைத்துக் கொண்டு நீங்கள் தீர்மானம் செய்வதற்கு முன்பு அவைகளை ஜெப சிந்தையுடன் ஆராய்ந்து பாருங்கள். அந்த பொருளை நாம் அணுக முயலும் போது, தேவன் தாமே நமக்குதவி செய்வாராராக. 19இது சிறிது நீளமாயிருக்கும். நீங்கள் துரிதப்பட நான் விரும்பவில்லை, நான்.... உங்கள் நேரத்தை எடுத்துக்கொண்டு (நாமனைவருமே), தேவனுடைய வார்த்தையை அதை எப்படி ஆராய வேண்டும் என்று அறிந்தவர்களாக நமக்குத் தெரிந்தமட்டில் உண்மையாகவும் பூரணமாகவும் ஆராய்வோம். நாம் பரி. மத்தேயு 19-ம் அதிகாரம் 8-ம் வசனத்திலிருந்து துவங்குவோம். நான் அந்த 19-ம் அதிகாரத்தில் முதலாம் வசனம் தொடங்கி 8-ம் வசனம் வரைக்கும் கூட படிக்கலாம். இப்பொழுது, ஞாபகம் கொள்ளுங்கள், நான் கூறும் இவை தேவனுடைய வார்த்தையிலிருந்து வர வேண்டியதாயுள்ளது. அது என் சொந்த கருத்தாக இருக்க முடியாது. ஏனெனில் என் கருத்து மற்றவரின் கருத்தைப் போலவே இருக்கும். எனவே இது தேவனுடைய வார்த்தையுடன் தொடர்ச்சியாக இருப்பது அவசியம். தேவன் எல்லாவற்றையும் தொடர்ச்சியாக வைத்திருக்கிறார் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். அவர் மாறுவதில்லை. அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார். அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அவர் மாறாதவர். இப்பொழுது நான் 19-ம் அதிகாரத்திலிருந்து படிக்கப் போகின்றேன். இயேசு இந்த வசனங்களைச் சொல்லி முடித்த பின்பு, அவர் கலிலேயாவை விட்டு யோர்தானுக்கு அக்கரையான யூதேயாவின் எல்லைகளில் வந்தார். திரளான ஜனங்கள் இவருக்குப் பின் சென்றார்கள்; அவ்விடத்தில் அவர்களைச் சொஸ்தமாக்கினார். அப்பொழுது பரிசேயர் அவரைச் சோதிக்க வேண்டுமென்று அவரிடத்தில் வந்து... அவரைச் சோதிப்பது யார் என்னும் முக்கியத்துவத்தை நீங்கள் உணர இங்கு சிறிது நிறுத்துகிறேன்... புருஷனானவன் தன் மனைவியை எந்த முகாந்தரத்தினாலாகிலும் தள்ளி விடுவது நியாயமா என்று கேட்டார்கள். அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக; ஆதியிலே மனுஷரை உண்டாக்கினவர் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார் என்பதையும். இதினிமித்தம் புருஷனானவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டுத் தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள் என்று அவர் சொன்னதையும் நீங்கள் வாசிக்கவில்லையா? இப்படி இருக்கிறபடியினால், அவர்கள் இருவராயிராமல், ஒரே மாம்சமாயிருக்கிறார்கள். ஆகையால் தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன் என்றார். அதற்கு அவர்கள், அப்படியானால் தள்ளுதற் சீட்டைக் கொடுத்து: அவளைத் தள்ளிவிடலாமென்று மோசே ஏன் கட்டளையிட்டார் என்றார்கள். அதற்கு அவர்: உங்கள் மனைவிகளைத் தள்ளிவிடலாமென்று உங்கள் இருதய கடினத்தினிமித்தம் மோசே உங்களுக்கு இடங்கொடுத்தார்: ஆதிமுதலாய் அப்படியிருக்கவில்லை. மத். 19: 1-8 இப்பொழுது,தேவன் நமக்குதவி செய்வாராக. 20இந்த வேத பாகம், இந்த கேள்வி, இயேசுவிடம் அவருடைய ஊழியத்தின் துவக்கத்திலே நேருக்கு நேர் நிறுத்தப்பட்டு கேட்கப்பட்டது. அது மோசே அவனுடைய ஊழியத்தின் துவக்கத்திலே நேருக்கு நேர் நிறுத்தப்பட்டு கேட்கப்பட்டது. விசுவாசிகளின் இருதயங்களில் இது முதன்மையான கேள்வியாய் அடைந்துள்ளது. பாவி இதைக் குறித்து கவலைப்படுவதில்லை, ஆனா விசுவாசிகளுக்கு இது முக்கியமானது, ஏனெனில் விசுவாசி எவனும் தேவனுக்கு முன்பாக நேர்மையாக நடக்க வேண்டுமென்று எண்ணங் கொண்டு, தன்னாலானவரை முயற்சி செய்கிறான். எனவே மார்க்க சம்பந்தமான ஒரு கேள்வி எழுமானால் விவாகமும் விவாகரத்தும் என்னும் விஷயமும் எழுகிறது. ஏன்? ஏனெனில் அது மூல பாவத்தின் விளைவாயுள்ளது அது ஒவ்வொரு முறையும் நேரிடுகிறது. ஏனெனில் அதுவே பாவத்தின் துவக்கமாயுள்ளது. இவையனைத்தையும் விவரிக்க எனக்கு நேரமிருக்காது. ஆனால் உங்கள் கடிதங்களுக்கு பதிலளிக்கவோ, அல்லது என்னால் முடிந்த வேறெதையும் செய்யவோ நான் மகிழ்ச்சி கொள்வேன். இதன் பேரில் எழுதப்பட்ட புத்தகங்கள் எங்கள் கைவசம் உள்ளன. இந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையிலும், இதை நிரூபிக்கவும் நாங்கள் செய்தித்தாள்களில் வரும் செய்திகளையும் கூட வெட்டி வைத்திருக்கிறோம். ஏவாள் தான் இதற்கு காரணமென்று நாமறிவோம்.... அவள் ஆப்பிள் பழத்தை புசித்ததாக கருதப்படுகிறது. (அது வேதப் பூர்வமான ஒன்றல்ல). அவள் ஏப்ரிக்காட் பழத்தை தின்றதாக இப்பொழுது அவர்கள் கூறுகின்றனர். அவள் இவையிரண்டில் எந்த பழத்தையும் புசிக்கவில்லை. அவள் விபச்சாரத்தில் ஈடுபட்டதன் விளைவாக முதல் குழந்தை காயீன் பிறந்தான். அவன் சாத்தானின் சொந்த புதல்வன். அவனுக்குள் பொல்லாங்கு குடிகொண்டிருந்தது. அது ஆபேலின் மூலம் வரவில்லை. காயீன் சாத்தானின் புதல்வன் ஆவான் 21ஏவாள், ''நான் கர்த்தரிடத்திலிருந்து ஒரு குமாரனைப் பெற்றேன்,'' என்று கூறினாள். இப்பொழுது உங்கள் கேள்வி என்ன வென்று நான் அறிந்து கொண்டேன். இந்த நகரத்திலுள்ள மிகவும் மோசமான ஒரு பெண்ணுக்கும், ஒரு மோசமான ஆணுக்கும் ஒரு பிள்ளை பிறப்பதாக நீங்கள் நினைத்துக் கொள்வீர்களானால், அது கர்த்தரிடத்திலிருந்து தான் வந்தாக வேண்டும். ஏனெனில் தேவன் பிரமாணங்களை ஒன்றுபடுத்தி வைத்துள்ளார். இந்த பிரமாணங்கள் சூரிய உதயத்தைப் போல; ஒரு ஊமச்சி முள்ளை நீங்கள் ஒரு நல்ல நிலத்தில் வைத்தால் அது வளரும். அது தேவனுடைய பிரமாணமாயிருப்பதால் அது வளர்ந்தாக வேண்டும். ஒரு வித்தானது நடப்படுமானால் அது வளர்ந்தாக வேண்டும். ஏனெனில் அது தேவனுடைய பிரமாணங்களில் இயங்குவதால் தேவனின்றி எந்த ஜீவனும் வளரமுடியாது. எனவே, ஏவாளின் கர்ப்பத்தில் பொல்லாத விதை விதைக்கப்பட்ட போது, அது குழந்தையை உற்பத்தி செய்ய வேண்டும். ஏனெனில் அது தேவனுடைய உற்பத்தி பிரமாணம். அதை உற்பத்தி செய்வதை தவிர அது வேறொன்றும் செய்ய முடியாது. அது தேவனிடத்திலிருந்து வரவேண்டும். அதன் காரணமாகத்தான்.... கிறிஸ்தவ பெற்றோர்களுக்குப் பிறக்காத சிறு குழந்தைகள் இழந்த நிலையிலுள்ளன என்று மக்கள் கூறுகின்றனர். இயேசுகிறிஸ்துவின் இரத்தம் அந்த குழந்தைக்கு பாவ நிவர்த்தி செய்கிறது. அந்த குழந்தை எவ்வளவு பொல்லாததாக பிறந்தாலும் எனக்குக் கவலையில்லை. அவர் உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி. அந்த சிறு குழந்தை மனந்திரும்ப முடியாது. மனந்திரும்புவதற்கென்று அதனிடம் ஒன்றுமேயில்லை. உலகத்தின் பாவத்தை கிறிஸ்துவின் இரத்தம் தீர்த்துவிட்டது. குழந்தைகள் பரலோகத்துக்கு செல்கின்றனர். 22அது மூல பாவம். அதன் காரணமாகத்தான் - அது ஒரு கேள்வி. தேவனிடத்திலிருந்து ஒரு பெரிய அற்புதக் காட்சி புறப்பட்டு வரும் போது, முதலாவது எழும் கேள்வி: “விவாகம் விவாகரத்தைக் குறித்தென்ன?'' என்பதே. அது எப்பொழுதும் போல் இப்பொழுதும் மக்களிடையே ஒரு கேள்வியாக அமைந்துள்ளது. அது இயேசுவின் காலத்திலும் மோசேயின் காலத்திலும் இருந்தது போல் இன்று வரைக்கும் மக்களிடையே கேள்வியாக அமைந்துள்ளது. ஏனெனில் மக்கள் சத்தியம் எதுவென்று அறிய விரும்புகின்றனர். ஒரு கேள்வி இருக்குமானால், அதற்கு ஒரு பதிலும் இருக்க வேண்டும். நான் முன்னர், இந்த வாரத்தில், கூறினது போல், சரியான பதில் ஒன்றிருக்க வேண்டும். ஒரு கேள்விக்கு சரியான பதில் நமக்கு கிடைக்காவிட்டால், அது தவறென்று நாம் அறிகிறோம்... ஆனால் அந்த கேள்விக்கு சரியான பதில் கிடைக்கும் வரைக்கும் நீங்கள் அந்த கேள்வியைக் கேட்டுக் கொண்டேயிருக்கிறீர்கள் - நீங்கள் சத்தியத்தை அறிய விரும்பினால். இது வேதப் பிரகாரமான கேள்வியாயிருப்பதால், பதிலும் வேதப் பிரகாரமாக இருக்க வேண்டும். நான் கூறினது போல், இன்று காலை நீங்கள் கிழக்கு நோக்கி செல்ல வேண்டுமென்றால், எனக்குத் தெரிந்தமட்டில்... நான் வயலில் நேராக கிழக்கு நோக்கியுள்ள ஒன்றைக் கண்டு பிடிக்க வேண்டுமென்றால் கிழக்கு திக்கில் செல்வேன். ''யாராகிலும் ஒருவர், 'சகோ. பிரன்ஹாமே, இது கிழக்கு'' என்று சொன்னால், அது ஒரு வகையில் கிழக்குதான், ஆனால் அது வடகிழக்கு. அப்படியானால் நான் தேடிக் கொண்டிருக்கும் பொருளைக் கடந்து சென்றுவிடுவேன். அது தவறென்று அறிந்து மீண்டும் புறப்பட்ட இடத்துக்கு வருவேன் மறுபடியும் வேறு யாராகிலும் “சகோ. பிரன்ஹாமே, உங்கள் வலது பக்கம் இந்த வழியாக செல்லுங்கள்'' என்று சொன்னால், அது ஒரு வகையில் கிழக்கு தான், ஆனால் அது தென்கிழக்கு. நான் தேடிக் கொண்டிருக்கும் பொருளை காணத் தவறி விடுவேன். ஏனெனில் நான் பிழையற்ற, நேரான வழியின் எல்லைகளை கடந்து சென்று விட்டேன். 23அது போன்று, விவாகமும் விவாகரத்தும் என்னும் பொருளைக் குறித்து இரண்டு விதமான கருத்துக்கள் நம்மிடையே நிலவி வருகின்றன. ஒரு மனிதன், தன் மனைவி மரித்துப் போனாலொழிய ஒரு முறை தான் விவாகம் செய்து கொள்ளலாம் என்பது ஒரு கருத்து. நீங்கள் அதை பின்பற்றி செல்வீர்களானால், புறம்பே சென்று விடுவீர்கள். மற்ற கருத்து, “ஓ,மனைவி அல்லது புருஷன் (இருவரில் யாராகிலும் ஒருவர்) விபச்சாரம் செய்தால் - விபச்சாரம் செய்தவரை மற்றவர் தள்ளிவிட்டு மறுபடியும் விவாகம் செய்து கொள்ளலாம்'' என்பதே. இதை பின்பற்றினாலும் நீங்கள் புறம்பே சென்று விடுவீர்கள். எனவே பாருங்கள், அது தென் கிழக்குமல்ல, வடகிழக்குமல்ல; நமக்கு நேர் கிழக்கே வேண்டும். இந்த வழியில் சென்றால் நீங்கள் வேதத்தை விட்டு அகன்றுவிடுவீர்கள், அந்த வழியே சென்றாலும் நீங்கள் வேதத்தை விட்டு அகன்று விடுவீர்கள். வேதம் வேதத்தை சந்தித்து சத்தியம் எதுவென்று நாம் அறிய விரும்புகிறோம், இரண்டும் வெவ்வேறு வழிகளில் சென்று சரியான பதிலை அளிக்க தவறி விடுகின்றன. ஆனால் அதற்கு சரியான பதில் இருந்தாக வேண்டும். 24இன்றைக்கு சபையில் இருவிதமான பெரிய உபதேசங்கள் இருப்பது போல், ஒன்று கால்வீனிஸம், மற்றது ஆர்மினியனிஸம். ஒன்று சட்ட பூர்வமானது. மற்றது கிருபை, கிருபையில் விசுவாசமுள்ள ஜனங்கள் (கால்வீனியர்கள்), “கர்த்தருக்கு ஸ்தோத்திரம், நான் புகைபிடிப்பதனால் ஒன்றுமில்லை; நான் மது அருந்துவதனால் ஒன்றுமில்லை. இவைகளை நான் செய்யலாம்; எனக்கு நித்திய பாதுகாப்பு உள்ளது'' என்று கூறுவதாக நாம் காண்கிறோம். மற்றைய சாரார் (சட்ட பூர்வமானவர்கள்), ”ஓ, அவனை நோக்கி கூச்சலிட எனக்குப் பிரியம், அவனைக் கடிந்து கொள்ள வேண்டுமென்று எனக்குத் தோன்றுகிறது. ஆனால் நான் ஒரு கிறிஸ்தவன். நான் அமைதியாயிருக்க வேண்டும்,'' என்கின்றனர். பாருங்கள், இரண்டு வெவ்வேறு பாதைகளில் நீங்கள் சென்று கொண்டிருப்பதைக் காண்கிறீர்கள். இரண்டுமே சரியல்ல, அது கூறுவதற்கு கடினமான ஒன்று, ஆனால் அது உண்மை. நாம் இரண்டு பாதைகளில் சென்று கொண்டிருப்பதை காண்கிறோம். ஒன்று ஒருவழியில் செல்கிறது. மற்றது வேறொரு வழியில் செல்கிறது. உண்மை எதுவென்பதை நாம் காண்போம். 25இப்பொழுது நான் கூறப்போவதைக் கேட்டு, அது உங்களுக்கு அர்த்தமுள்ளதாக தோன்றுகிறதா என்று பாருங்கள். என் சொந்த குடும்பத்தையே நான் உதாரணமாக எடுத்துக் கொள்கிறேன். என் மனைவியை நான் கூப்பிட்டு, ''அன்பே, நான் வெளிநாடு செல்கிறேன் (இது சட்ட பூர்வமானவரின் சார்பில்) ''என் மனைவியே, உனக்கு சில சட்டதிட்டங்களை விதிக்கப் போகின்றேன். நான் வெளிநாடு சென்றிருக்கும் நேரத்தில், நீ யாராகிலும் ஒருவனுடன் சல்லாபம் செய்திருந்தால், நான் திரும்பி வந்தவுடன் உன்னை விவாகரத்து செய்து விடுவேன். நீ யாரையும் பார்த்து கண்ணடிக்கவோ, யாரிடமும் சல்லாபமோ செய்யக் கூடாது. உனக்குப் புரிகிறதா? நான் உன் கணவன். அப்படி செய்தால், நான் திரும்பி வரும்போது உன்னை தள்ளி விடுவேன்'' என்கிறேன். அவள் கையை நீட்டி என் கழுத்தணியை பிடித்து, “என் நல்ல மனிதரே, உம்மிடம் ஒன்றைக் கூற விரும்புகிறேன்'' பாருங்கள்?பாருங்கள்? ''நீங்கள் எந்த பெண்ணையாவது பார்த்து கண்ணடித்தால், அல்லது எந்த பெண்ணோடும் வெளியே சென்றிருந்தால் அல்லது எந்த பெண்ணிடத்திலாவது சல்லாபம் செய்தால் நீர் திரும்பி வந்தவுடன் உம்மை விவாகரத்து செய்து விடுவேன்'' என்கிறாள். அது ஒரு மகிழ்ச்சியான குடும்பமாயிருக்குமா? அது சட்டபூர்வமானவர்கள். சரி, இப்பொழுது மற்றைய பாகம் என்னவெனில், நான் வெளிநாடு சென்று தவறு செய்ய நேரிட்டால், நான் அங்கு சென்று, “நல்லது, இந்த பெண்ணைக் கூட்டி செல்வேன். ஓ, என் மனைவிக்கு எந்த ஆட்சேபனையும் இருக்காது. அவள் அதைக் குறித்து கவலை கொள்ளமாட்டாள்'' என்கிறேன். என் மனைவியும், ''இந்த மனிதனுடன் நான் செல்லப் போகிறேன். பில் (Bill) அதற்கு ஆட்சேபனை தெரிவிக்கமாட்டார்'' என்கிறாள். நான் அவர் அதைக் குறித்து கவலை கொள்ளாமல் போனால், என்னிடம் ஏதோ தவறுண்டு. என் மனைவியை நான் நேசிக்கவில்லையென்று அர்த்தமாகிறது. அவள் அதைக் குறித்து கவலை கொள்ளாமல் போனால், அவளிடம் ஏதோ தவறுண்டு. அவள் என் மனைவி, வேறு எந்த மனிதனும் அவளுடன் சல்லாபம் செய்வதை நான் விரும்பமாட்டேன். அவள் என் மனைவி. 26சரியான வழி என்னவெனில், இரு சாராரிடமும் ஒரு சத்தியம் உள்ளது. ஆனால் அது சரியாக சத்தியமும் அல்ல. நான் வெளிநாடு செல்லும் போது என் சிறு குடும்பம் ஒன்று கூறுகின்றது. நாங்கள் ஒருவருக்கொருவர் ஜெபம் செய்கிறோம். நான் அவர்களைத் தேவனுடைய கரங்களில் சமர்ப்பிக்கிறேன். அவர்கள் என்னைத் தேவனுடைய கரங்களில் சமர்ப்பிக்கின்றனர். நாங்கள் அவ்வாறு செய்த பிறகு, நான் வெளிநாடு செல்கிறேன். அவள் என்னை நேசிக்கிறாள் என்று நான் அறிந்திருக்கிறேன். அவளிடம் எனக்கு திடநம்பிக்கை உள்ளது. நான் அவளை நேசிக்கிறேன். அவளுக்கு என்னிடம் திடநம்பிக்கை உள்ளது. நான் அவளை அவ்வாறு நேசிக்கும் வரைக்கும், வேறொரு பெண்ணை நான் கூட்டிச் செல்வேன் என்னும் கவலை அவளுக்கு இருக்கவேண்டிய அவசியமில்லை. அவளும் என்னை அதிகமாக நேசிக்கும் காரணத்தால், அவள் வேறொரு மனிதனுடன் செல்வாள் என்று நான் நினைக்க வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் அவள் என் மனைவி, அவளை நான் நம்புகிறேன். நான் ஏதோ ஒரு தவறு செய்ய நேர்ந்து, வேறொரு பெண்ணுடன் வெளியே சென்று, நான் திரும்பி வந்து அதை அவளிடம் அறிக்கையிட்டு, “மேடா, நான் அப்படி செய்ய நினைக்கவில்லை. நான் கண்ணியில் அகப்பட்டுக்கொண்டேன். இந்த பெண் என்னை அணுகி, என் கையைப் பிடித்து இழுத்து இன்னின்னதை செய்யத் தொடங்கினாள்'' என்று கூறுவேனானால். அவள் அதை புரிந்து கொண்டு, என்னை மன்னித்து விடுவாள் என்னும் நம்பிக்கை எனக்குண்டு. ஆனால் அப்படி நான் ஒன்றும் செய்ய மாட்டேன். ஏனெனில் அவளை நான் நேசிக்கிறேன். அவள் என்னை மன்னித்துவிடுவாள் என்றாலும், நான் அப்படி செய்ய மாட்டேன். அவளை நான் எக்காரணத்தை முன்னிட்டும் புண்படுத்த மாட்டேன். அவள் என்னை மன்னித்துவிடுவாள். என்றாலும், நான் அவளைப் புண்படுத்த விரும்பமாட்டேன். 27அப்படித்தான் நாம் தேவனிடத்தில் கொண்டுள்ள அன்பும். பிலியோ அன்பே (மனித அன்பு, ஐக்கிய அன்பு). ஒரு மனிதன் தன் மனைவிக்காக அவ்வாறு உணர்ச்சி பெற்றிருக்கச் செய்யுமானால், அகேபோ அன்பைக் குறித்தென்ன? (கிரேக்க மொழியில் அது தெய்வீக அன்பு என்னும் அர்த்தம் கொண்டுள்ளது). அது எத்தகைய அன்பை நான் இயேசு கிறிஸ்துவின் மேல் கொண்டிருக்கச் செய்யும்? எப்படி... நான் சென்று அதைச் செய்ய விரும்பினால், அதை செய்ய வேண்டுமெனும் விருப்பம் என் இருதயத்தில் குடி கொண்டுள்ளது. என் இருதயத்தில் அத்தகைய விருப்பம் இருக்குமானால், நான் சென்று அதைச் செய்கிறேன். சட்டபூர்வமானது நான் அதைச் செய்ய அனுமதிக்காது. ஏனெனில் அதை செய்ததற்காக நான் தண்டனை பெறுவேன் என்று அறிந்திருக்கிறேன். ஆனால் உண்மை என்னவெனில், தேவனுடைய அன்பு உங்கள் இருதயத்தில் வரும் போது அப்படி செய்ய வேண்டுமெனும் எண்ணம் உங்களுக்கிருக்காது. அதுதான் உண்மை. இதோ அந்த இரு கொள்கைகளைக் கொண்ட பிரிவுகள் சட்டபூர்வமோ, மற்றதோ, கால்வீனிஸமோ அல்ல; அது இரண்டுமே. 28அது மாத்திரமல்ல, இன்று வெவ்வேறு ஸ்தாபனங்கள் உள்ளதை நாம் காண்கிறோம். கத்தோலிக்க சபை, பிராடெஸ்டெண்டு சபை என்றுள்ளது. அவர்கள் ஒவ்வொருவரும் அவர்களே வழி என்று உரிமை கோருகின்றனர். ''பாருங்கள், நாங்கள் வழியைப் பெற்றுள்ளோம், எங்களுடையது மாத்திரமே சத்தியம்'' என்கின்றனர். மெதோடிஸ்டு சபை, “நாங்கள் சத்தியத்தை பெற்றிருக்கிறோம்” என்கின்றனர். பாப்டிஸ்டுகளும் ''நாங்கள் சத்தியத்தை பெற்றிருக்கிறோம்'' என்கின்றனர். என்னைப் பொறுத்தவரையில், அவர்கள் அவ்வாறு எண்ணங் கொண்டிருந்தாலும், அது அப்படியல்ல. ஏனெனில் இயேசு ''நானே சத்தியம்'' என்று உரைத்தார். பாருங்கள்?நேற்றிரவு நான் செய்த பிரசங்கத்தில் கூறினது போல் தேவன் தம்முடைய நாமத்தை வைத்திருக்கும் இடம் இயேசு கிறிஸ்துவே - நாம் தொழுது கொள்ளக்கூடிய ஒரே ஸ்தலம். நீ பிராடெஸ்டென்டு என்பதனால் கிறிஸ்தவன் அல்ல. நீ ஒரு கத்தோலிக்கன் என்பதனால் நீ ஒரு கிறிஸ்தவன் அல்ல. நீ மெதோடிஸ்டு, பாப்டிஸ்டு, பெந்தெகொஸ்தேயினன் என்பதனால் கிறிஸ்தவன் அல்ல. நீ பரிசுத்த ஆவியினால் இயேசு கிறிஸ்துவுக்குள் ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருப்பதால் கிறிஸ்தவனாயிருக்கிறாய் - தண்ணீரினால் அல்ல. ஒரே விசுவாசம், ஒரே கர்த்தர், ஒரே ஞானஸ்நானம் உண்டு அதுதான் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம். தண்ணீர் ஞானஸ்நானம் உங்களை ஐக்கியத்தில் சேர்க்கிறது; பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் உங்களை கிறிஸ்துவுக்குள் இணைக்கிறது. அதுவே உண்மை . 29விவாகமும் விவாகரத்தும் என்னும் பொருளின் பேரிலும் இருவகையான கருத்துக்கள் நம்மிடையேயுள்ளன. இந்த கடைசி நாட்களிலே நம்முடைய கர்த்தர் தாமே தம்முடைய வார்த்தையின் ஏழு முத்திரைகளின் இரகசியத்தை திறந்து வெளிப்படுத்திக் கொடுத்திருக்கிறபடியால்... உங்களில் அநேகருக்கு இது கிரேக்க மொழியைப் போன்று புரியாத ஒன்றாயிருக்கலாம், ஆனால் என் சபைக்கு இது புரியும். எதினால்? தரிசனங்களைக் குறித்தும் என்ன நடந்தது என்பதைக் குறித்தும் நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த கேள்வி வேதப் பிரகாரமான ஒரு கேள்வி. உலகத் தோற்றத்துக்கு முன்பிருந்து மறைக்கப்பட்டிருந்த எல்லா இரகசியங்களுக்கும் ஒரு உண்மையான பதில் இருக்க வேண்டும் என்று விசுவாசிக்க நாம் இங்கே அழைக்கப்படுகிறோம். இந்த நாளில் இந்த இரகசியங்கள் வெளிப்படுத்தப்படும் என்று வேதம் தீர்க்கதரிசனம் உரைத்துள்ளது. வெளிப்படுத்தல் 10: “ஏழாம் தூதனுடைய (லவோதிக்கேயா சபையின் செய்தியாளன்) சத்தத்தின் நாட்களில் தேவ ரகசியம் நிறைவேறும்”. இதுவே கடைசி காலமாகிய லவோதிக்கேயா சபையின் காலம். 30இந்த எழுப்புதல் பதினைந்து ஆண்டுகள் அல்லது அதற்கு அதிகமாக நீடித்து வந்த போதிலும், அதிலிருந்து ஒரு ஸ்தாபனமும் எழவில்லை என்பதை கவனியுங்கள். லூத்தரின் காலத்தில் எழுப்புதல் உண்டானது, ஒரு ஸ்தாபனம் தோன்றினது; வெஸ்லியின் காலத்தில் எழுப்புதல் உண்டானது. ஒரு ஸ்தாபனம் தோன்றினது; அலெக்ஸாண்டர் காம்ப்பெல், ஸ்தாபனங்கள் தோன்றின. மற்ற பெரிய... ஜான்ஸ்மித் போன்றவர்கள், ஸ்தாபனங்கள் தோன்றின; காலங்கள் தோறும், மூடி உட்பட. ஆனால் இந்த எழுப்புதல்... வழக்கமாக ஒரு எழுப்புதல் மூன்று ஆண்டுகள் மாத்திரமே நீடித்திருக்கும். ஆனால் இந்த எழுப்புதல் பதினைந்து ஆண்டுகளாக இருந்து வருகிறது. ஆனால் இதிலிருந்து ஒரு ஸ்தாபனமும் எழும்பவில்லை. ஏனெனில் இது விதையின் காலம். இனி பதர் கிடையாது. பதர் சென்று விட்ட பிறகு, விதை மாத்திரம் உள்ளது. தேவன் ஆயத்தமாயிருக்கிறார். அவர் தமது வார்த்தையாகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் சபையை இப்பொழுது பரிபூரணத்துக்கு அழைக்கவில்லையென்றால், இனிமேல் அழைப்பார். கவனியுங்கள், இதற்கு பதில் எங்காவது இருக்க வேண்டும். தேவனின் ஏழு முத்திரைகளிடப்பட்ட இரகசியம், ஏழு முத்திரைகள். எத்தனை பேர் அதை விளங்கிக் கொண்டுள்ளனர். கைகளை உயர்த்துங்கள் பார்க்கலாம். இங்குள்ளவர்களில் பெரும்பாலோர் சுற்றிலுமுள்ள நமது சபையைச் சேர்ந்தவர்களென்று எண்ணுகிறேன். கவனியுங்கள், இல்லையென்றால், அந்த பொருளின் பேரிலுள்ள புத்தகங்கள் விரைவில் வெளிவரும். அதைக் குறித்த புத்தகங்கள் {சில புத்தகங்கள்} எங்களிடம் இப்பொழுது உள்ளன. 31நமது பொருளின், உண்மையான வேதப்பிரகாரமான பதிலைப் பெற நாம் தொடக்கத்திற்கு செல்ல வேண்டுமென்று இயேசு கூறுகிறார். அவரிடம் இந்த கேள்வி நேருக்கு நேர் வைத்து கேட்கப்பட்டபோது, இரண்டு காரியங்கள் காட்சியில் இருந்தன. ஆசாரியர்கள் அவரிடம், ''புருஷனானவன் தன் மனைவியை ஏதாவது ஒரு (any) முகாந்தரத்தினாலாகிலும் தள்ளிவிட்டு வேறொருத்தியை விவாகம் செய்து கொள்ளலாமா?'' என்று கேட்கின்றனர். இயேசு, ''ஆதி முதலாய் அப்படி இருக்கவில்லை“ என்கிறார். அவர்கள், ''அப்படியானால் தள்ளுதற் சீட்டைக் கொடுத்து அவளை தாங்கள் விரும்புகின்ற எந்த ஒரு காரியத்தினிமித்தமும் தள்ளிவிடலாமென்று மோசே ஏன் எங்களுக்கு உத்தரவு கொடுத்தார்?'' என்று கேட்டார்கள் அதற்கு அவர் கூறினார் “மோசே ஏன் அவ்வாறு செய்தானென்றால்”, இதை நான் சற்று நேரம் அப்பால் வைத்து விடுகிறேன், அவர் “ஏனென்றால் உங்கள் இருதய கடினத்தினிமித்தம் தான்; ஆனால் ஆதியிலிருந்து அல்லது ஆதி முதலாய் அப்படி இருக்கவில்லை'' என்று இயேசு கூறினார். 32உலக சமாதானத்தைக் குறித்த கேள்வி போன்றே இதுவும். ''உலக சமாதானம் அரசியலின் மூலம், ஐக்கிய நாடுகளின் மூலம் வரப் போகின்றதா? இல்லையென்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். அது ஒவ்வொரு சமயமும் தவறிவிட்டது. அது மறுபடியும் தவறும். ஆனால் பூமியில் சமாதானம் உண்டாகுமா?'' என்னும் கேள்விக்கு உண்மையான ஒரு பதில் உண்டு. ஆம் பாவம் இப்பூமியை விட்டு எடுபட்ட பின்பு. சமாதானம் நிலவும். ஆனால் அது வரைக்கும் சமாதானம் இருக்காது. ''ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்“. தேவன் பாவத்துக்கு ஒரு பரிகாரம் அளித்திருக்கிறார். (இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள்). பூமியிலிருந்து பாவத்தைப் போக்க தேவன் ஒரு பரிகாரம் அளித்தார், ஆனால் இவ்வுலகிலுள்ள மனிதனோ தேவனுடைய பரிகாரத்தை ஏற்றுக் கொள்ள மறுக்கிறான். நமது மனைவிகளை மணந்து அவர்களுடன் வாழ தேவன் ஒரு வழியை வகுத்து கொடுத்திருக்கிறார். ஆனால் மனிதனோ அதைக் குறித்த அவருடைய வார்த்தையை ஏற்றுக் கொள்ள மறுக்கிறான். இயேசு இதை கூறியுள்ளார் “வானமும் பூமியும் ஒழிந்து போம், என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை'' என்று அவர் கூறியுள்ளதை இது நமக்கு நினைப்பூட்டுகிறது. 33இந்த கேள்விக்கு உண்மையான பதிலைப் பெற நாம் தொடக்கத்துக்கு செல்ல வேண்டுமென்று இயேசு விரும்புகிறார். அப்படியானால், அது ஆதியாகமமாகத்தான் இருக்க வேண்டும், ஏனெனில் ஆதியாகமம் என்கின்ற வார்த்தையானது வேதத்திலுள்ள ஒவ்வொரு கேள்விக்கும் மூல முதலான (seed) அதிகாரமாக இருக்கின்றது. உங்கள் செடிகள் என்னவாக இருக்கும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டுமானால், நிலத்தில் உள்ள ஆரம்ப விதை (seed) என்ன விதமானது என்பதை காண செடியின் மூல முதலான விதைக்கு செல்ல வேண்டியிருக்கின்றது. என்ன விதமான விதை விதைக்கப்பட்டுள்ளது? ஆதியாகமம், மூல முதலான (விதை) அதிகாரமாக இருப்பதால், நாம் ஆதியாகமத்திற்கு திரும்பிச் செல்வோம். ''ஆதியில்...'' என்கின்ற அந்த வேத வசனத்தை இயேசு நமக்கு கொண்டு வருகிறார். அப்பொழுது தான் காலம் என்று ஒன்று தொடங்கினது என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். அதற்கு முன்பு அது நித்தியம். இப்பொழுது, நமது கேள்வி... கவனியுங்கள், நாம் தொடக்கத்திற்கு செல்வோமானால்.... இதைக் காணத் தவற வேண்டாம். அதன் காரணமாகத்தான் நான் மெள்ள பேச விரும்புகிறேன். அப்பொழுது தொலைபேசியின் வழியாக இணைக்கப்பட்டவர்களும் கூட... ஒலிநாடாவில் அது தெளிவாயிருக்கும். இயேசு தொடக்கத்திற்கு செல்லுங்கள்'' என்று கூறினார். அப்பொழுது பூமியில் ஒவ்வொரு ஜோடி மாத்திரமேயிருந்தன - ஆதாம் ஒருவன் மாத்திரமும் ஏவாள் ஒருத்தி மாத்திரமே. அவர்கள் தேவனால் மாத்திரமே இணைக்கப்பட்டிருந்தனர். ஒரு பெண் குதிரை, ஒரு ஆண்குதிரை. ஒரு பெண் கிளி, ஒரு ஆண் கிளி. அவர் கூறினபடி நாம் தொடக்கத்திற்கு செல்வோமானால், அப்பொழுது எல்லாமே ஒரு ஜோடி மாத்திரமேயிருந்தன. அது சரியா? (சபையார் ''ஆமென்'' என்கின்றனர்-ஆசி) தொடக்கத்தில் எல்லாமே தேவனுடன் இசைவாய் இணைக்கப்பட்டு, பரிபூரண ஒழுங்கில் சென்று கொண்டிருந்ததாக நாம் காண்கிறோம்; எதுவுமே ஒழுங்கு தவறியிருக்கவில்லை. வானங்களிலுள்ள அனைத்துமே ஒழுங்கில் இருந்தன - நட்சத்திரக் கூட்டங்கள், சூரியனும் அதைச் சுற்றும் கிரகங்களும் எல்லாமே ஒழுங்கில் இருந்தன. அவைகளில் ஒன்று தன் சுழற் பாதையை விட்டுச் சென்றால், திட்டம் அனைத்தும் தடங்கலாகிவிடும். 34இப்பொழுது, கவனியுங்கள் உங்களால் காணமுடிகிறதா? ஒரு தடங்கல் முழு திட்டத்தையும் பாழாக்கிவிடுகிறது மானிடர், ஒரு ஆணும் ஒரு பெண்ணுமாக தேவனுடன் தொடர்ச்சியாக கொண்டிருந்தபோது, ஒரு பெண், இந்த பெண் பாவம் செய்தாள். அது பூமிக்கான திட்டம் அனைத்தையும் தேவனுடன் தொடர்ச்சியற்ற நிலைக்கு கொண்டு வந்துவிட்டது. எனவே, இந்த வேதாகமத்துடன் ஒரு வார்த்தை கூட்டினால், அல்லது அதிலிருந்து ஒரு வார்த்தை எடுத்துப் போட்டால், அது கிறிஸ்தவனை தேவனுடன் தொடர்ச்சியற்ற நிலைக்கு கொண்டு வந்து விடுகிறது, அது சபையை தேவனுடன் தொடர்ச்சியற்ற நிலைக்கு கொண்டு வந்துவிடுகிறது. அது குடும்பத்தை தேவனுடன் தொடர்ச்சியற்ற நிலைக்கு கொண்டு வந்துவிடுகிறது. தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையையும் ஏற்றுக்கொள்ளாத ஒவ்வொரு விசுவாசியும் அந்நிலையை யடைந்து விட முடியும். ஸ்திரீ தான் அழகான குடும்பத்தில் பிரிவினை உண்டாகக் காரணமாயிருந்தாள். கேரூபின் பூமியை தொல்லைபடுத்தவில்லை. ஆதாம் குடும்பத்தை உடைக்கவில்லை. வேறெதுவுமே குடும்பத்தையும் மற்ற அனைத்தையும் தொடர்ச்சியற்ற நிலைக்கு கொண்டு வரவில்லை. ஸ்திரீ மாத்திரமே அவ்விதம் செய்தாள் - ஏவாள் இயேசு குறிப்பிட்ட இந்த தொடக்கத்தில் தான் முறிவு ஏற்பட்டது. “ஆதியிலே தேவன் ஒவ்வொரு இனத்திலும் ஆணையும் பெண்ணையும் உண்டாக்கினார்'' என்று இயேசு கூறினார். இந்த ஸ்திரீ- பெண் குதிரையல்ல, பெண் நாய் அல்ல - ஆனால் ஸ்திரீ பூமியில் தேவன் நடத்தியவைகளின் தொடர்ச்சியை முழுவதுமாக முறித்துப் போட்டு, எல்லாவற்றையும் மரணத்துக்குள் ஆழ்த்தினாள், உடன்படிக்கையை முறித்தது ஸ்திரீ, மனிதன் அல்ல. அவள் எவ்வாறு உடன்படிக்கையை முறித்துப் போட்டாள்? அவள் தேவனுடைய வார்த்தையின் எல்லைகளைக் கடந்து அப்பால் தாண்டிவிட்டாள். அவள் தன் கணவனுடன் செய்த உடன்படிக்கையை முறித்தப் போட்டாள், அவள் தேவனுடன் செய்த உடன்படிக்கையை முறித்துப்போட்டாள்; அவள் தேவனுடன் செய்த உடன்படிக்கையை முறித்து போட்ட காரணத்தால், தன் கணவனுடன் செய்த உடன்படிக்கையை முறித்துப் போட்டாள். 35நீங்கள் உங்கள் வாக்குத்தத்தத்தையும், தேவனுடைய வார்த்தையுடன் செய்து கொண்ட உடன்படிக்கையையும் முறித்து போட்டதால், அது முறை தவறின பல சபை அங்கத்தினர்கள் உண்டாகக் காரணமாயிருந்தது. ஏனென்றால் ஒரு சில மனிதர்கள் ஒன்று கூடி “அதன் அர்த்தம் இதுவல்ல'' என்று கூறினர். அது முழு ஸ்தாபனத்தையுமே வார்த்தையுடன் கொண்டிருந்த தொடர்ச்சிக்கு அப்பால் கொண்டு சென்றுவிட்டது. ”ஓ, அதை நாங்கள் நம்புவது கிடையாது. டாக்டர் ஜோன்ஸ் அது அவ்வாறில்லையென்று கூறிவிட்டார்''. ஆனால் தேவன் அது அவ்வாறு தான் என்று கூறும் வரைக்கும். அவர், ''எந்த மனிதனின் வார்த்தை பொய்யாகவும், என்னுடையது சத்தியமாகவும் இருப்பதாக'' என்று கூறியுள்ளார். தொடர்ச்சி அங்கு முறிந்து போகின்றது. தொடர்ச்சி முறியும் போது, ஜீவ நாடி முறிந்து போகின்றது. காலக்கோடும் முறிந்து போகின்றது. உடன்படிக்கை முறிக்கப்படும்போது, எல்லாமே சிதறி விடுகின்றது. அதற்கு காரணம் யார்? ஒரு ஸ்திரீ, அவள் தான் உடன்படிக்கையை முறித்துப் போட்டாள். அதை நீங்கள் படிக்க விரும்பினால், ஆதியாகமம் 3ம் அதிகாரத்தில் படிக்கலாம். 36அப்பொழுது தான், மனிதன் ஸ்திரீயை ஆண்டு கொள்ளும் படிக்கு என்று தேவனுடைய வார்த்தை செய்தது. அவள் இனி ஒரு போதும் அவனுடன் சமமானவள் அல்ல. இயற்கையில் அவள் அவனுடன் சமமாயிருந்தாள் என்று உங்களுக்குத் தெரியும். ஆனால் அவள் தேவனுடைய வார்த்தையை மீறின போது, மனிதன் அவளை ஆளும்படி தேவன் செய்தார் (நீங்கள் குறித்துக் கொள்ள விரும்பினால் அது ஆதியாகமம் 3:16). அவள் அன்று முதல் மனிதனுக்கு சமமானவள் அல்ல. அவள் தேவனுடைய வார்த்தையை முறித்துப் போட்டவள். அவள் என்னும் போது, உங்களால் சபையைக் காணமுடியவில்லையா? தேவனுடைய வார்த்தையை அவள் முறித்து போட்டாள். அது அவளை தொடர்ச்சியிலிருந்து புறம்பாக்கியது. சபையும் அதையே செய்து எல்லாவற்றின் மேலும் ஆவிக்குரிய மரணத்தை வருவித்தது. நான் ஏன் இவைகளை ஆணித்தரமாக வலியுறுத்துகிறேன் என்பதை நீங்கள் விளங்கிக் கொள்வீர்கள். அது சத்தியம்! இவை வேதாகமம் உண்மை நிகழ்வுகள். கவனியுங்கள், அவள் ஏன் அப்படிப்பட்ட செயலைப் புரிந்தாள்? அந்த அழகான இனிய பரிபூரணமான பெண் எப்படி அவ்வாறு இருக்க முடிந்தது. ஒரு முறை ஒரு ஓவியன் தீட்டிய ஏவாளின் ஓவியத்தைக் கண்டேன் (அது கிரேக்க நாட்டில் என்று நினைக்கிறேன்). நான் அதுவரை கண்டதிலேயே அவள் மிகவும் பயங்கரமாகக் காட்சியளித்தாள். மாம்சப்பிரகாரமான சிந்தை எவ்வாறு காண்கிறது என்பதை அது காண்பிக்கின்றது. அவள் விகாரத் தோற்றம் கொண்டிருக்கவில்லை, அவள் அழகி, ஏனெனில், அவள் பரிபூரணமான ஸ்திரீ. 37கவனியுங்கள், அவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்த அவள் ஏன் அப்படிப்பட்ட ஒரு செயலைப் புரிந்தாள்? அவள் மனிதனுடன் சரி சமமானவளாயிருந்தாள். அவள் பாவம் செய்த போது மனிதனுடன் அவளுக்கிருந்த சமநிலையை அவள் இழந்துவிட்டாளென்று நாமனைவரும் அறிவோம். தேவன், ''இன்று முதல் மனிதன் உன் மேல் ஆளுகை செலுத்துவான்'' என்றார். அப்படித் தான் வேதம் கூறுகிறது. உங்களுக்கு விருப்பமானால், நாம் அதை படிக்கலாம். தேசம் முழுவதும் இந்த பெரிய இணைப்பினால் இணைக்கப்பட்டவர்களின் நேரத்தை சேமிக்கும் பொருட்டு, நீங்கள் பின்னர் படிக்கத்தக்கதாக அந்த வேதாக்கியம் எங்குள்ளது என்று மாத்திரம் குறிப்பிட்டேன். அவள் அதைச் செய்த காரணமென்ன என்பதைக் கவனியுங்கள். சாத்தான் அவளை எப்படி அணுக முடிந்தது? முன்பொரு காலத்தில் சாத்தான் தேவனுடன் சரி சமமாயிருந்தான் என்று உங்களுக்குத் தெரியுமா? அவன் நிச்சயமாக அப்படியிருந்தான். அவன் சிருஷ்டிகரைத் தவிர மற்றெல்லாமாக இருந்தான். அவன் எல்லாமாக இருந்து பரலோகத்தில் தேவனுடைய வலது பாரிசத்தில் நின்று, தலை சிறந்த கேரூபினாக விளங்கினான். கவனியுங்கள், அவள் இதைச் செய்த காரணம் என்னவெனில், அவள் மூல சிருஷ்டிப்பில் இருக்கவில்லை. அவள் தேவனுடைய மூல சிருஷ்டிப்பில் இருக்கவில்லை; அவள் ஒரு உபபொருள். எனவே இயேசு குறிப்பிட்ட அந்த ஆதியில், அவள் தேவனுடைய மூல சிருஷ்டியாக இருக்கவில்லை! இயேசு குறிப்பிட்ட அந்த ஆதியில், அவள் மனிதனின் உபபொருளாக உபசிருஷ்டியாக இருந்தாள். 38மூல சிருஷ்டிப்பில் ஆதாம் ஆணும் பெண்ணுமாக இருந்தான் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். அதன் பின்பு அவனுடைய விலா எலும்பு பிரித்தெடுக்கப்பட்டது. கவனியுங்கள்.... ஒரு உபபொருள்... கவனியுங்கள், தேவனுடைய சிருஷ்டிப்பு அனைத்திலும் - மிருகம் மற்றெல்லாவற்றிலும்? அவள் ஒருத்தி மாத்திரமே அவ்வாறு உருவமைக்கப்பட்டிருந்தாள் (designed). மற்றெல்லா பெண் இனங்களும் மூல சிருஷ்டிப்பில் இருந்தன. ஆனால் ஏவாள் மாத்திரமே மூல சிருஷ்டிப்பில் இல்லை. பாருங்கள். அது அவ்வாறு இருக்க வேண்டியிருந்தது. அதற்கு நாம் சற்று பின்பு வருவோம். கவனியுங்கள், சிருஷ்டிப்பின் போது அவள் மூல சிருஷ்டியில் இராமல் உபபொருளாக இருந்தாள். இந்த சிருஷ்டிப்பில் அது.... உங்கள் உணர்ச்சிகளை நான் புண்படுத்த விரும்பவில்லை. ஆனால் உங்களிடம் ஒரு சத்தியத்தை கூற விரும்புகிறேன். நீங்கள் அமைதியாக உட்கார்ந்து கொண்டிருங்கள். இதுவரைக்கும் நீங்கள் நன்றாகவே இதைக் கேட்டுக்கொண்டு வந்திருக்கிறீர்கள். 39வஞ்சகமான ஒரு ஸ்திரீயைப் போல் வஞ்சகமாக இருக்கும்படிக்கு வேறெதுவுமே அவ்வாறு உருவமைக்கப்படவில்லை. வேறெதுவுமே அவ்வாறிருக்க முடியாது. வேறெதுவுமே அவ்வாறு உண்டாக்கப்படவில்லை. மேலும் ஒரு ஸ்திரீயைப் போல் வேறெதுவுமே எளிதில் வஞ்சிக்கப்படமுடியாது. அவளுடைய வீழ்ச்சி - ஆதியில் உண்டான வீழ்ச்சி - அது உண்மையென்று நிரூபிக்கிறது. அவள் ஆதியின் மூல சிருஷ்டிப்பில் இல்லை. அவள் ஆதாமுக்குள் இருந்தாள். அவள் பெண் இனமாக தனிப்பட்ட விதத்தில் ஆதியில் உண்டாக்கப்படவில்லை. அவள் உபசிருஷ்டியாக உண்டாக்கப்பட்டாள். ஒரு ஸ்திரீயைப் போல் எளிதில் வஞ்சிக்கவும் வஞ்சிக்கப்படவும் தக்கதாக வேறெதுவுமே உருவமைக்கப்படவில்லை, கீழ்த்தரமான நிலையை அடைய ஒரு ஸ்திரீயை போல் வேறெதுவுமே உருவமைக்கப்படவில்லை. இப்பொழுது சிந்தியுங்கள். எல்லா சிருஷ்டிகளிலும், ஒரு ஸ்திரீயை போல கீழ்த்தரமான நிலையை அடையும்படிக்கு வேறெதுவுமே உருவமைக்கப்படவில்லை. இவ்வுலகில் ஒரு மனிதனின் இருதயத்தை மற்றெல்லாரைக் காட்டிலும் எளிதாக சுக்குநூறாக உடைக்கக் கூடியவள் அவனுடைய மனைவியே. அந்த மனைவி வேறொரு மனிதனுடன் கூட சென்று விட்டால், அவன் கண்ணீர் வடித்துக்கொண்டு தன் பிள்ளைகளுடன் உட்கார்ந்து கொண்டிருப்பதை நீங்கள் காணலாம். அவள் அந்த விதமான உருவமைக்கப்பட்டிருக்கிறாள். அதை செய்ய அவள் உருவமைக்கப்பட்டிருக்கிறாள். பன்றியோ நாயோ, வேறெந்த மிருகமும் அவளைப் போல் உருவமைக்கப்படவில்லை. அவளைப் போல் அவ்வளவு கீழ்த்தரமான நிலையை அடையவும் முடியாது. அது உண்மை. என் சகோதரிகளுக்கு நான் மதிப்பு கொண்டவனாய், இதை நீங்கள் கவனிக்க வேண்டுமென்று விரும்புகிறேன். 40எந்த மிருகமும் நடத்தை கெட்டதாக இருக்க முடியாது. நீங்கள் பெண் நாயை “ஸ்லட் (slut)” என்ற ஆங்கில பதத்திற்கு நடத்தை கெட்ட பெண் என்று பொருள்) என்றழைக்கிறீர்கள். ஆனால் பெண் மிருகத்தின் நடத்தை இந்த ஹாலிவுட் நடசத்திரங்களைக் காட்டிலும் பல கோடி மடங்கு சிறந்ததாயுள்ளது. அவள் அவ்வளவு கீழ்த்தரமான நிலையையடைய உருவமைக்கப்பட்டிருக்கிறாள். அவளால்... இதை இப்பொழுது சற்று சிந்தித்துப்பாருங்கள். இவ்வுலகில் காணும் தேவனுடைய சிருஷ்டிப்பில் வேறெதுவுமே நடத்தைக் கெட்டு அத்தகைய கீழ்த்தர நிலையை அடைய முடியாது. நீங்கள், ஒரு நிமிடம் பொறுங்கள் மனிதன் மாத்திரம் என்ன...'' எனலாம். அதற்கு நாம் வரப்போகிறோம். ஒரு பெண் 'ஆம்' என்று கூறி சம்மதம் தெரிவிக்கிறாள். கவனியுங்கள், ஒரு ஸ்திரீயைப் போன்று வேறெதுவுமே அவ்வளவு கீழ்த்தரமான நிலையையடையவோ, மோசமாக இருக்கவோ உருவமைக்கப்படவில்லை. ஒரு நாய் அப்படி செய்யமுடியாது, ஒரு பன்றி அப்படி செய்யமுடியாது, ஒரு பறவை அப்படி செய்ய முடியாது. எந்த மிருகமும் நடத்தை கெட்டதாக இல்லை. அது அவ்வாறிருக்கவும் முடியாது. ஏனெனில் அவ்வாறிருக்க அது உருவமைக்கப்படவில்லை. ஒரு பெண் பன்றி நடத்தை கெட்டதாக இருக்க முடியாது; ஒரு பெண் நாய் நடத்தை கெட்டதாக இருக்கமுடியாது; ஒரு பறவை நடத்தை கெட்டதாக இருக்க முடியாது. ஒரு பெண் மாத்திரமே அவ்வாறு இருக்க முடியும். 41சாத்தான் எங்கு சென்றான் பார்த்தீர்களா? பாருங்கள்? இருப்பினும் அவளுக்கு, அவள் ஒருத்திக்கு மாத்திரமே அதற்கு ''ஆம்“ என்று சம்மதம் தெரிவிக்கவோ, ”முடியாது'' என்று கூறி அதை மறுக்கவோ அதிகாரமுண்டு. பாருங்கள்? அவள் எந்நிலையை அடைய விரும்புகிறாள் என்பதை அது பொறுத்தது. பாருங்கள்? சர்ப்பத்தின் வித்து - அது எங்கு தோன்றினதென்று - இங்கு நாம் வெளிப்படையாய்க் காணலாம். அவன் செல்லக் கூடிய ஒரு இடம் மாத்திரமே, இருந்தது. இது ஆணித்தரமாக விளங்காமல் போனால், அப்படிப்பட்டவர் குருடராயிருக்கின்றனர். பாருங்கள், பாருங்கள்? அது அங்கு செல்ல வேண்டி யிருந்தது. கவனியுங்கள், மிருகங்கள் - பெண் மிருகங்கள் - அவ்வாறு செய்ய முடியாததன் காரணம், அவை மூல சிருஷ்டிப்பில் இடம் பெற்றன. ஆனால் ஸ்திரீயோ மூல சிருஷ்டிப்பில் இடம் பெற வில்லை. இப்பொழுது இதை தோண்டியெடுக்க பழைய ஏற்பாட்டின் காலத்துக்கு சென்று, அங்கிருந்து தொடங்கி, புதிய ஏற்பாட்டில் நவீன காலம் வரைக்கும் வருவோம். அவள் ஒருத்தி மாத்திரமே அசுத்தமான வாழ்க்கைக்கென்று உருவமைக்கப்பட்டிருந்தாள். நாய் அப்படி செய்ய முடியாது. வேறெந்த பெண் இனமும் அவ்வாறு செய்ய முடியாது. ஸ்திரீ மாத்திரமே அவ்வாறு செய்ய முடியும். ஒரு நாய் அல்லது எந்த மிருகமும் - ஆண்டுக்கு ஒரு முறை மாத்திரமே, அதுவும் குட்டிகளை ஈனுவதற்காக மாத்திரமேயன்றி, பாலுணர்ச்சி இன்பத்திற்காக அல்ல, அதன் குட்டிகளுக்காகவே. ஆண் பன்றி, பெண் நாய் - ஆண்டுக்கு ஒரு முறை, ஒரு நொடிப்பொழுது; அது அவைகளின் குட்டிகளுக்காக. ஆனால் ஒரு ஸ்திரீ அவள் விரும்பும் எந்த நேரத்திலும் அதில் ஈடுபட உருவமைக்கப்பட்டிருக்கிறாள் (சிலவற்றைக் கூறாமல் இங்கு விட்டுவிடுகிறேன். நீங்கள் அவைகளை ஊகித்துக் கொள்ளலாம்). நாயால் முடியாதது, ஸ்திரீயால் முடியும். (நான் குறிப்பு எழுதினவைகளை அடித்து கூறாமல் விட்டுவிட்டதை பரிசுத்த ஆவியானவர்தாமே உங்களுக்கு வெளிப்படுத்தித் தருவாரென நம்புகிறேன்). 42பெண் இனங்கள் அனைத்திலும் மானிடவர்க்கத்தை சேர்ந்த பெண் இனம் மாத்திரமே ஆணைக் காட்டிலும் அழகாக இருக்கிறாள். மற்றெந்த இனத்திலும் அவ்வாறில்லை. தேவனின் மற்ற சிருஷ்டிப்பு அனைத்திலும் மிருகங்கள், பறவைகள் போன்றவைகளில் - ஆண் இனமே அழகில் சிறந்து விளங்குகிறது. எப்பொழுதுமே ஆண் இனமே அழகாயுள்ளது. பெரிய ஆண் மானைப் பாருங்கள் - பெரிய அழகான கொம்புகள், பெரிய உடலமைப்பு. ஆனால் பெண் மான் சிறிய, எளிய தோற்றம் கொண்டுள்ளது. அழகான இறகுகளைக் கொண்ட பெரிய சேவலையும், சிறு தோற்றம் கொண்ட பழுப்பு நிற பெட்டைக் கோழியையும் பாருங்கள். பறவைகளில் ஆண் இனத்தையும் பெண் இனத்தையும் ஒப்பிட்டுப் பாருங்கள். ஏன்? தேவனுடைய சிருஷ்டிகள் அனைத்திலும் ஏன் இவ்வாறு உள்ளது? ஒவ்வொரு சிருஷ்டியிலும் ஆண் இனமே மிகவும் அழகாயுள்ளது. ஆடுகள், பன்றிகள், குதிரைகள், மற்றெல்லாவற்றிலும் பெரிய தோற்றம் கொண்ட ஆணே அழகாயுள்ளது - பறவை இனத்திலும் கூட. ஆனால் மானிட இனத்தில் மாத்திரம், பெண் அழகாயிருக்கிறாள், ஆண் அல்ல. அவன் அழகாயிருந்தால், அவனில் ஏதோ தவறுண்டு. அவன் எங்கோ குறுக்கு இனசேர்க்கையினால் விளைந்த வித்தாயிருக்கிறான். ஆனால் முதலில் பெண் தான் அழகாயிருந்தாள். ஏன்? ஏன் அவ்வாறு அமைக்கப்பட்டது? வஞ்சிப்பதற்காக. அவளை உருவமைத்த சாத்தான், இந்த கடைசி நாட்களிலும் அவள் மேல் கிரியை செய்து கொண்டிருக்கிறான். 43இங்கு நான் சிறிது நேரம் நிறுத்திக் கொள்ள விரும்புகிறேன். அழகு! முதன் முறையாக உலகம் முழுவதும் அழிக்கப்பட்டதற்கு அழகுள்ள பெண்களே காரணமென்று உங்களுக்குத் தெரியுமா? தேவகுமாரர் மனுஷ குமாரத்திகளை அதிக செளந்தரியமுள்ளவர்களென்று கண்டு, அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்து கொண்டார்கள். அதுசரியா?இந்நாளில் பெண்களின் அழகு அதிகரித்துள்ளதை நீங்கள் கவனித்தீர்களா? நான் பெர்ள் ஓ பிரையன் (Pearl O' Bryan) என்பவளின் படத்தைக் கண்டிருக்கிறேன். அவள் ஒரு காலத்தில் நாட்டிலேயே மிகச் சிறந்த அழகியாகக் கருதப்பட்டாள். ஆனால் இன்றைக்கு அழகு என்னும் விஷயத்தில் பள்ளிகூடத்திலுள்ள எந்த ஒரு வாலிப வயது பெண்ணும் அவளை அழகில் மிஞ்சிவிடுவாள். பெண்களுக்கிடையே அழகு அதிகரிப்பு, வஞ்சக காலத்தைக் குறிக்கிறது. அன்று காட்டிலும் இன்று சபை அதிக அழகாக விளங்கியுள்ளது? எல்லா சபைகளுமே பிரம்மாண்டமான, அழகிய கட்டிடங்களையும், இதற்கு லட்சக்கணக்கான டாலர்கள், அதற்கு லட்சக்கணக்கான டாலர்கள் என்று வெளிகாட்டுகின்றன நீங்கள் அதைக் காண்கிறீர்கள் அல்லவா? “அவள்'', வஞ்சகம். 44அவளைக் காட்டிலும் வேறெதுவும் அவ்வளவு கீழ்த்தரமாக அடைய முடியாது. அவள் வஞ்சிப்பதற்கென்றே அவ்வாறு உருவமைக்கப்பட்டிருக்கிறாள். இன்று (இந்த கடைசி நாட்களில் சாத்தான் அவள் மீது கிரியை செய்து கொண்டிருக்கிறாள். ஏனெனில் அவனே அவளுடைய உருவமைப்பாளி (designer). நான் தொடக்கத்திற்கு சென்று அதை இப்பொழுது நிரூபிக்க முடியும். அவள் மீது கிரியை செய்யத் தொடங்கியது யார், ஆதாமா அல்லது சாத்தானா? தேவனா அல்லது சாத்தானா? பாருங்கள்? அவன் தான் அவளுடைய உருவமைப்பாளி. மனிதனை அவளுடைய அசுத்தத்தில் ஆழ்த்த அதுவே அவளுடைய முக்கிய ஆயுதம். அவள் அழகுள்ள பெண்ணாயிருப்பதால், அவள் தன் விருப்பத்திற்கேற்ப ஒரு மனிதனை எந்த வகையிலும் ஆட்டி வைக்க முடியும். சகோதரரே, மனிதனை தன் பக்கம் இழுத்துக் கொள்வது இங்குள்ள மது அருந்தும் ஸ்தலம் அல்ல; தெருவில் உடலை நெளித்துக் கொண்டு, அரை நிர்வாணியாயுள்ள அழகுள்ள பெண்தான் அவ்வாறு செய்கிறாள். அதுதான்.... அங்குதான் வஞ்சகமாக இருக்கிறாள். அவள் அதைக் கொண்டு விஷம் நிறைந்தவளாயிருக்கிறாள். முற்றிலும் ஆபத்து நிறைந்தவள்; சாத்தானின் அவளுடைய உருவமைப்பாளி என்பதைக் குறித்து நீங்கள் என்னிடம் கேள்வி கேட்கலாம். ஆனால் அதுதான் உண்மை. சாத்தான் அவளை உருவமைத்தான். இப்பொழுதும் அவன் அதைச் செய்து கொண்டு வருகிறான். 45வேதத்திலிருந்து ஒன்றை நான் உங்களுக்கு காண்பிக்க விரும்புகிறேன். உங்களை நான் வேதத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டும்: அதன் பின்பு இன்றைய நிலையை நீங்கள் கண்டு, உங்கள் சொந்த கருத்தை அமைத்துக் கொள்ளலாம். சாத்தான் ஒருவன் மாத்திரமே அத்தகைய அழகை வெளிக் காட்டக் கூடியவனாயிருக்கிறான். நீங்கள் கவனிப்பீர்களானால், பரலோகத்திலிருந்த எல்லா தேவதூதர்களைக் காட்டிலும் அவன் அழகில் சிறந்தவனாயிருந்தான், அது சரியா? அவன் பரலோகத்தை மிகாவேலின் இராஜ்யத்தைக் காட்டிலும் மிகச் சிறந்த அழகுள்ள ஸ்தலமாக ஆக்க விரும்பினான். அது சரியா? மேலும் காயீன் சாத்தானின் குமாரன் என்று காண்பிக்க, அவன் மிக அழகான வழிபாட்டை தேவனுக்கு செலுத்தினான். அவன் தன் பீடங்களை பழங்களினாலும் பூக்களினாலும் அலங்கரித்தான். அது சரியா? அழகு! பாவம் அழகு வாய்ந்தது - இன்றைக்கு நாம் அழகு என்று அழைக்கிறோமே அது. பாவம் அழகினால் வஞ்சிக்கிறது. தெருவில் செல்லும் ஒரு பெண்ணை நீங்கள் கண்டு, அவள் இருதயத்தில் என்ன உள்ளதென்று உங்களால் கூறமுடியாது. பாருங்கள்? சாத்தான் அவளுடைய உருவமைப்பாளி என்று நீங்கள் காண வேண்டும் என்பதற்காகவே அவைகளை நான் கூற முற்பட்டேன், அது முற்றிலும் உண்மை. அவனுடைய சொந்த குமாரன் காயீன் அதை நிரூபித்தான். அவள் அழகுள்ளவள், எனவே அவளால் வஞ்சிக்க முடியும். 46உலகம் அழகாயுள்ளது. எனவே அதனால் வஞ்சிக்க முடியும். நான் காஸ்மாஸ், உலக அமைப்பை குறிப்பிடுகிறேன். அது வஞ்சிக்கத்தக்கதாக அழகாயுள்ளது - பிரம்மாண்டமான அழகிய இடங்கள் மற்றும் சுகபோகம். தீர்க்கதரிசிகளில் ஒருவனாகிய ஆமோஸ் சென்று நகரத்தைக் கண்டபோது, அது நவீன ஹாலிவுட்டாயிருக்கக் கண்டான். அவனுடைய வயோதிப கண்கள் அவனுடைய முகத்தின் மேல் விழுந்திருந்த நரைத்த மயிரின் கீழ் சுருங்கின. அவன் ஒரு செய்தியுடன் அங்கு நடந்து சென்று அந்த இடத்தில் உரக்க சத்தமிட்டான். அவன், “நீங்கள் சேவிப்பதாக உரிமை கோரும் அதே தேவன் உங்களை அழித்துப் போடுவார்'' என்றான் உண்மை. பாவம் அழகாயுள்ளது. அவர்கள் யூதாஸை தெருவில் விழுந்து, தொங்கிக் கொண்டிருக்கும் அவனுடைய வாயில் ஈக்கள் மொய்த்துக் கொண்டிருக்கும் ஒரு குடிகாரனாக சித்தரிக்கின்றனர். யூதாஸ் அழகுள்ளவன், திடகாத்திரமுள்ளவன், வஞ்சகன், உங்களை கவனித்துக் கொள்ளும் ஆள் அல்ல அவன். மேலாடையை உடுத்திக் கொண்டு உங்கள் மனைவியை கவனித்துக் கொள்ள வரும் வயோதிப விவசாயி அல்ல அவன்: அவன் தந்திரமுள்ளவன். அவன் அயோக்கியன். பாவம் உலகத்தின் கண்களுக்கு அழகாயுள்ளது. ஆனால் தேவன் அத்தகைய அழகில் தம்மை வெளிகாட்டுவதில்லை. அது உங்களுக்குத் தெரியுமா? தேவன் தம்மை நற்பண்பில் அழகான குணாதிசயத்தில் வெளிகாட்டுபவராயிருக்கிறார். 47வேதாகமத்தில், (நீங்கள் குறித்துக் கொள்ள விரும்பினால், அது ஏசாயா 53). நான் இந்த பக்கத்தில் வரிசையாக வேத வசனங்களைக் குறித்து வைத்துள்ளேன் (ஏசாயா 53)... நம்முடைய கர்த்தராகிய இயேசுவுக்கு நாம் விரும்பத்தக்க ரூபம் இல்லாதிருந்தது என்று வேதம் கூறுகின்றது. அவரை விட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக் கொண்டோம். அது சரியா? அவர் அழகாயில்லாதபடியினால் அவரை நாம் விரும்பவில்லை. அவர் ஒருக்கால் சிறு உருவம் படைத்த, தோள் தொங்கிய , சிவந்த மேனியுடையவராயிருந்திருப்பார். அவர் தலைவராயிருக்க விரும்பத்தக்க தோற்றமில்லாதவர். அவர் காண்பதற்கு தலைவரைப் போல் இல்லை; அவர் எளிய மக்கள் தெருக்களில் பேசும் எளிய மொழியைப் பேசினார். அவர் ஒரு பெரிய அறிவாளியாக, கல்வி கற்று, அங்கியைத் தரித்திருப்பவராக காணப்படவில்லை. அவர் ஒரு சாதாரண மனிதன். நாம் விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது. அவர் மனிதர்களிடையே நடந்துசென்றார். அவர் யாரென்று அவர்கள் அறிந்து கொள்ளவே இல்லை. அவர் நடந்து செல்லும் தேவனாக காணப்படவில்லை - அதாவது தேவன் எப்படியிருக்க வேண்டும் என்னும் நம்முடைய கருத்திற்கேற்ப, ஆனால் என்னவாயினும், அவர் தேவனாயிருந்தார். 48நீங்கள் கவனித்தீர்களா? தேவனாகிய கர்த்தர் சாமுவேலிடம் ''நீ ஈசாயின் வீட்டிற்குச் சென்று அவனுடைய குமாரர்களில் ஒருவனை சவுலின் ஸ்தானத்தில் ராஜாவாக அபிஷேகம் பண்ணு'' என்று சொல்லி அனுப்பினார். ஒரு ராஜாவைத் தெரிந்துக்கொள்ள வேண்டாமென்று சாமுவேல் அறிவுறுத்திய பிறகும், மக்கள் சவுலைத் தெரிந்து கொண்டனர். அவன், ''நீங்கள் ஒரு ராஜாவைக் கொண்டிருப்பது தேவனுக்கு விருப்பமற்ற செயல். அவரே உங்கள் ராஜா'' என்றான். அவன் மேலும், ''நான் கர்த்தருடைய நாமத்தில் உங்களிடம் உரைத்த ஏதாகிலும் ஒன்று இதுவரை நிறைவேறாமல் இருந்ததுண்டா? என் ஜீவனுத்துக்காக உங்களிடம் நான் எப்பொழுதாவது பணத்துக்கு யாசித்ததுண்டா?'' என்று கேட்டான். அவர்கள், ''இல்லை, நீர் எங்களிடம் பணத்துக்கு யாசித்தது கிடையாது. நீர் இதுவரை கர்த்தரின் நாமத்தில் உரைத்த எதுவும் நிறைவேறாமல் இருந்ததில்லை. என்னவாயினும், எங்களுக்கு ஒரு ராஜா வேண்டும்'' என்றனர். எனவே அவர்கள் சவுலைத் தெரிந்து கொண்டனர். உலகம் எதை தெரிந்து கொண்டதென்று பாருங்கள்! இஸ்ரவேல் ஜனங்கள் எதை தெரிந்து கொண்டனரென்று பாருங்கள் தேவனால் அபிஷேகம் பண்ணப்பட்ட இஸ்ரவேல் ஜனங்கள் தேசத்திலேயே எல்லாரைக்காட்டிலும் தலைக்கும் தோளுக்கும் உயரமாயிருந்த ஒரு மனிதனை தெரிந்து கொண்டனர் - திடகாத்திரமுள்ள, சவுந்தரியமுள்ள ஒருவன். அவன் எப்பொழுதுமே பரிமள தைலத்தில் ஈ போன்று பொருத்தமற்றவனாய் இருந்தான். ஆனால் தேவன், ''என் தெரிந்து கொள்ளுதலின்படியே உங்களுக்கு ஒரு ராஜாவை தெரிந்து கொள்ளப் போகிறேன்'' என்று சொல்லி, சாமுவேலிடம், ''அவன் யாரென்று உனக்கு இப்பொழுது அறிவிக்க மாட்டேன். அங்கு போ. அவன் ஈசாயின் குமாரர்களில் ஒருவன்'' என்றார். 49ஈசாயும், அவனுடைய மனைவியும், மற்ற அனைவரும், ''ஆம், எங்கள் மூத்த மகன் உயரமும் சவுந்தரியமுமுள்ளவன். அவன் ராஜாவின் கிரீடம் தரிக்க தகுதியுள்ளவன். அவன் கெட்டிக்காரன், கல்வி கற்றவன். அவன் அருமையானவன். அவன் அதற்கு தகுதியுள்ளவன் என்று எங்களுக்குத் தெரியும். அவன் சரியான சொற்களை சொற்பொழிவின்போது உபயோகிக்கிறான்'' என்றனர். அவனை அவர்கள் கொண்டு வந்த போது, சாமுவேல் தைலக் கொம்புடன் அவனருகில் சென்று, “இல்லை, கர்த்தர் இவனை புறக்கணித்துவிட்டார்'' என்றுரைத்தான். அவன் இப்படியாக ஆறு குமாரர்களையும் கடந்து வந்தான். கர்த்தர் அவர்கள் ஒவ்வொருவரையும் புறக்கணித்துவிட்டார். சாமுவேல், ''உன் பிள்ளைகள் இவ்வளவுதானா, வேறொருவனும் இல்லையா?'' என்று கேட்டான். ஈசாய், “ஓ, ஆம். இன்னும் ஒருவன் இருக்கிறான். அவன் வயலில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கிறான். அவன் அங்கு உட்கார்ந்து கொண்டு, பாடல்களை வாசித்துப் பாடி, உரக்க சத்தமிட்டு, இப்படியாக காலத்தைக் கழிக்கிறான். அவன் தோள் தொங்கியவனும், சிவந்த மேனியுமுள்ளவன். அவன் ராஜாவாக தகுதியுள்ளவன் அல்ல'' என்றான். சாமுவேல், ''அவனை அழைத்து வா'' என்றான். தாவீது தீர்க்கதரிசியின் பார்வைக்கு வந்த போது, தீர்க்கதரிசி தைலத்துடன் அவனிடம் ஓடி சென்று, அவன் தலையின் மேல் ஊற்றி அபிஷேகம் செய்து, ''இவனே தேவன் தெரிந்து கொண்டவன்'' என்றான். அவனுக்கு அழகில்லை, ஆனால் நற்பண்பு இருந்தது. தேவன் நற்பண்பைப் பார்க்கிறார். 50மனிதனோ இயற்கை அழகைப் பார்க்கிறான். அது வஞ்சகமுள்ளது. வஞ்சிப்பதற்காகவே ஒரு பெண்ணுக்கு அழகு அளிக்கப்பட்டுள்ளது. ஒரு அழகிய பெண், தன் அழகை சரியான வழியில் உபயோகிக்காமல் போனால், அது அவளுக்கு சாபமாக அமைந்துவிடும். அது அவளை மற்றெல்லாவற்றைக் காட்டிலும் வேகமாக நரகத்துக்கு அனுப்பிவிடும். அவள் மாத்திரம்.... அவள் அழகாயிருக்கக்கூடும், நிச்சயமாக; அவள் தன் கணவனுடன் தங்கியிருந்து சரியானதை செய்யும் வரைக்கும், அது நன்மையானதும் அழகாயும் இருக்கும், ஆனால் அவள் அந்த அழகையே எடுத்துக் கொண்டு அதைக் கொண்டு எவ்வளவாக வஞ்சிக்க முடியும்! ஏனெனில் அவ்வாறு செய்வதற்கென்று அது அவளுக்கு அளிக்கப்பட்டுள்ளது. கவனியுங்கள், தேவன் நற்பண்பில் நம்மை வெளிப்படுத்துகிறார். நாம் விரும்பத்தக்க ரூபம் இயேசுவுக்கு இல்லாதிருந்தது. ஆனால் இவ்வுலகில் அவரைப் போன்ற நற்பண்பு கொண்டவர் எவருமே இருந்ததில்லை. இன்று நாம் காண்பது என்னவெனில்? சபை நற்பண்பு சாத்தானும் அவனைச் சேர்ந்தவர்களும், பெரிய அழகான சபைகளை, அழகான காரியங்களை கவனித்துக் கொள்கின்றனர். அதை தான் உலகம் இன்று நோக்குகின்றது. ஓ, அத்தனை மடங்கு பெரியவரான போதகர் இன்னார் இன்னார் தேவ பக்தியுடன் நீண்ட அங்கி அணிந்து நடந்து வருவாரானால், அதை தான் அவர்களின் அழகு என்றழைக்கின்றனர். ஆனால் உண்மையான தேவனுடைய பரிசுத்தவான்கள் உறுதிபடுத்தப்பட்ட வார்த்தையின் நற்பண்பை எதிர்நோக்குகின்றனவர்க ளாயிருக்கின்றனர். அந்த காலத்தில் இயேசுவை பரிசுத்தவான்கள் கண்ட போது அதைத் தான் செய்தனர். அவர் காண்பதற்கு ஒன்றுமில்லாதவராயிருந்தார். ஆனால் தேவன் அவருக்குள் வாசம் செய்ததை அவர்கள் கண்டனர். தேவன் அவரோடு கூட இருந்ததை அவர்கள் கண்டு கொண்டனர். 51அப்படித்தான்.... தாவீதுடன் கூட இருந்த யோவாபும் மற்றவர்களும் தாவீதுக்குள் இருந்த ஆண்மைத்தனத்தைக் கண்டனர். அவனுக்குள் தேவன் இருந்தார் என்பதை அவர்கள் கண்டனர். என்றாவது ஒரு நாள் அவன் அதிகாரத்துக்கு வருவான் என்று அவர்கள் அறிந்திருந்தனர். அவர்களில் ஒருவன் கோலியாத்தின் ஐந்து சகோதரர்களை ஒற்றைக் கையால் கொன்று போட்டான்; மற்றொருவன் முன்னூறு பேர்களைக் கொன்றான். உணவுக்காக சில பெண்கள் பயிற்றைப் பொறுக்கிக் கொண்டிருக்கும் வேளையில், அவன் ஒரு ஈட்டியை கையிலெடுத்து முன்னூறு பெலிஸ்தியர்களைக் கொன்று போட்டான். குணாதிசயம்! ஏன்? அவர்கள் தாவீதுடன் கூட தங்கியிருந்தனர். அவன் மேல் அபிஷேகம் தங்கியுள்ளதென்றும் அவன் அதிகாரத்துக்கு வரப் போகிறான் என்றும் அவர்கள் அறிந்திருந்தனர். வார்த்தையுடன் கூட இன்று உறுதியாய் நிற்கும் சபையை அது தெளிவாக சித்தரிக்கிறது. அது உறுதிப்படப் போகிறதென்று நாம் அறிந்திருக்கிறோம். அது என்றாவது ஒரு நாள் அதிகாரத்துக்கு வரப்போகிறதென்று நாம் அறிந்திருக்கிறோம். சவுல் அவனை வெறுத்த போதிலும்... தாவீது ஆபத்திற்கு பயந்து நாட்டை விட்டு ஓடினவன். ஆயினும் அவன் அதிகாரத்துக்கு வருவானென்று அவர்கள் அறிந்திருந்தனர். அது போன்று, அவரும் அதிகாரத்துக்கு வரப் போகிறாரென்று நாம் அறிந்திருக்கிறோம். எனவே நாம் அந்த வார்த்தையை எடுத்துக் கொண்டு, என்ன கிரயத்தை செலுத்த வேண்டி வந்தாலும், அங்கேயே நிற்போம். நாம் பெலிஸ்தியரைக் கொல்ல வேண்டுமானால், அல்லது குழியில் குதித்து சிங்கத்தைக் கொல்ல வேண்டுமானால் (தாவீதுடன் கூட இருந்த ஒருவன் அப்படி செய்தான்), அதை எப்படியும் செய்வோம். ஏனெனில் அவ்வாறிருக்க வேண்டுமென்றே தேவன் தீர்மானித்திருக்கிறார். நாம் நற்பண்பை எதிர்பார்க்கிறோம். 52நீங்கள், ''அவள் அவ்வாறு உருவமைக்கப்பட அவர் ஏன் அனுமதித்தார்?'' என்று என்னைக் கேட்கலாம் (நான் அதிக நேரம் எடுத்துக் கொள்ள விரும்பவில்லை, இன்னும் அநேக காரியங்களை நான் கூற வேண்டும்). ஏன்? இந்த ஸ்திரீயை அவ்வாறு உண்டாக்கினார்? அவள் அவ்வாறிருக்க அவர் ஏன் அனுமதித்தார்? அது அவருடைய சொந்த அருமையான விருப்பம் காரணமாகவே. நிச்சயமாக. இப்பொழுது, உங்கள் வேதாகமத்தை திருப்ப நீங்கள் விரும்பினால், ரோமர் 9-ம் அதிகாரத்திற்கு ஒரு நிமிடம் நாம் திரும்புவோம். இவைகளை தேவன் எவ்வாறு செய்கிறார் (அதை படிக்க நீங்கள் விரும்பினால்) என்று உங்களுக்கு காண்பிக்க விரும்புகிறேன். தேவன் தமது சொந்த அருமை சித்தத்தின்படி என்ன செய்கிறார் என்று இங்கு நாம் காணலாம். ரோமர் 9:14 ஆகையால் நாம் என்ன சொல்லுவோம்? தேவனிடத்திலே அநீதி உண்டென்று சொல்லலாமா? அவர் ஏசாவைத் தெரிந்து கொண்டு அல்ல, இவ்விருவரும் தங்களுக்கென்று தெரிந்து கொள்ளும் ஒரு உரிமையைப் பெறுவதற்கு முன்பே அவர் யாக்கோபை தெரிந்து கொண்டு ஏசாவை புறக்கணித்தார். அவர்கள் பிறப்பதற்கு முன்பு, தங்கள் தாயின் கர்ப்பத்தில் இருந்த போதே, தேவன், ''நான் யாக்கோபை சிநேகித்து, ஏசாவை வெறுத்தேன்'' என்றார். பாருங்கள்? ஏன்?... அவர் மோசேயை நோக்கி: எவன் மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன் மேல் இரக்கமாயிருப்பேன், எவன் மேல் உருக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன் மேல் உருக்கமாயிருப்பேன் என்றார். ஆகையால் விரும்புகிறவனாலும் அல்ல, ஓடுகிறவனாலும் அல்ல, இரங்குகிற தேவனாலேயாம். மேலும் என்னுடைய வல்லமையை உன்னிடத்தில் காண்பிக்கும் படியாகவும், என்னுடைய நாமம் பூமியில் எங்கும் பிரஸ்தாபமாகும் படியாவும், உன்னை நிலை நிறுத்தினேன் என்று பார்வோனுடன் சொன்னதாக வேதத்தில் சொல்லியிருக்கிறது. ஆதலால்..... (இப்பொழுது இங்கு கவனியுங்கள்) ஆதலால் எவன் மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருக்கிறாரோ அவன் மேல் இரக்கமாயிருக்கிறார். எவனைக் கடினப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனைக் கடினப்படுத்துகிறார். இப்படியானால், அவர் இன்னும் ஏன் குற்றம் பிடிக்கிறார்? அவர் சித்தத்திற்கு எதிர்த்து நிற்பவன் யார்? என்று என்னுடனே சொல்லுவாய். அப்படியானால், மனுஷனே, தேவனோடு எதிர்த்துத் தர்க்கிக்கிற நீ யார்? உருவாக்கப்பட்ட வஸ்து உருவாக்கினவனை நோக்கி, நீ என்னை ஏன் இப்படி உண்டாக்கினாயென்று சொல்லலாமா? மிதியிட்ட ஒரே களிமண்ணினாலே குயவன் ஒரு பாத்திரத்தைக் கனமான காரியத்துக்கும், ஒரு பாத்திரத்தைக் கனவீனமான காரியத்துக்கும் பண்ணுகிறதற்கு மண்ணின் மேல் அவனுக்கு அதிகாரம் இல்லையோ? தேவன் தமது கோபத்தைக் காண்பிக்கவும், தமது வல்லமையைத் தெரிவிக்கவும், தாம் மகிமைக்காக எத்தனமாக்கின கிருபா பாத்திரங்கள் மேல் தம்முடைய மகிமையின் ஐசுவரியத்தைத் தெரியப்படுத்தவும் சித்தமாய், அழிவுக்கு எத்தனமாக்கப்பட்ட கோபாக்கினைப் பாத்திரங்கள் மேல் மிகவும் நீடிய சாந்தத்தோடே பொறுமையாயிருந்தாரானால் உனக்கென்ன? (ரோமர் 9 : 14-23) 53இதைப் பற்றி சிறிது நேரம் விவாதியுங்கள். தேவன் அதை செய்தார். அவர் அவ்வாறு செய்ய வேண்டியிருந்தது. அது அங்கு இருக்க வேண்டியதாயிருந்தது. இப்பொழுது கவனியுங்கள். ஐந்து நிமிடங்களுக்கு, ஒன்றைக் குறித்து உங்கள் கவனத்தைக் கோர விரும்புகிறேன். தேவன் யார்? தேவன் மகத்தான நித்தியமானவர். ஆதியில், தொடக்கம் என்று ஒன்று இருப்பதற்கு முன்பு, அவர் தேவனாக இருக்கவில்லை. அது உங்களுக்குத் தெரியுமா? தேவன் என்பதற்கு “தொழுது கொள்ளப்பட வேண்டிய ஒன்று” என்பதே. அப்பொழுது அவரைத் தொழுது கொள்ள யாருமேயில்லை. அவர் தனிமையாக வாழ்ந்தார். அவருக்குள் தன்மைகள் (attributes) இருந்தன. தன்மை என்பது என்ன? சிந்தனை. (இன்றிரவுக்கான பாடத்தையொட்டிய ஒன்றை நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள்). கவனியுங்கள், அவருக்குள் அவருடைய தன்மைகள் குடிகொண்டிருந்தன. அவர் பிதாவாக வேண்டுமென்று அவருக்குள் இருந்தது. அவர் தேவனாக வேண்டுமென்று அவருக்குள் இருந்தது; அவர் குமாரனாக வேண்டுமென்று அவருக்குள் இருந்தது, அவர் இரட்சகராக வேண்டுமென்று அவருக்குள் இருந்தது; அவர் சுகமளிப்பவராக ஆக வேண்டுமென்று அவருக்குள் இருந்தது. இங்குள்ள இவையனைத்தும் அவருடைய தன்மைகளை வெளிப்படுத்துபவைகளாய் உள்ளன. எதுவுமே ஒழுங்கிற்கு அப்பாற்பட்டதாக இல்லை. தேவன் தொடக்கத்திலிருந்து முடிவு வரை காணவில்லையென்று நீங்கள் நினைக்கிறீர்களா? நிச்சயமாக அவர் கண்டார். எதுவுமே ஒழுங்கிற்கு அப்பாற்பட்டதாயில்லை. அது அவருடைய தன்மைகளை வெளிப்படுத்துவாய் அமைந்துள்ளது. 54ஒரு மனிதனை விழும்படி செய்த அவர் நீதியுள்ளவராக இருக்கமுடியாது. அவன் சுய தீர்மானம் செய்வதற்கு, சுய சித்தம் என்னும் சம அடிப்படையில் அவனை அவர் வைக்க வேண்டியதாயிற்று. அதே சமயத்தில் அவன் விழுந்து போவான் என்று அவர் அறிந்திருந்தார். ஏதாவதொன்று இழக்கப்படாமல் அவர் இரட்சகராக இருக்க முடியாது. யாராவது ஒருவர் வியாதிப்படாமல், அவர் சுகமளிப்பவராக இருக்க முடியாது. இவை அவ்வாறு இருக்க வேண்டியதாயிருந்தது. அவருடைய மகத்தான தன்மைகள் வெளிப்பட வேண்டுமென்பதற்காக தேவன் இவைகளை இவ்வாறு செய்தார். யாருமே இல்லாமல் போனால், அவர் இரட்சகராக இருந்திருக்க முடியாது. அவர் இரட்சகராக இருந்தாரென்று நாமறிவோம். காலம் என்று ஒன்று இருப்பதற்கு முன்பே அவர் இரட்சகராயிருந்தார். அவர் இரட்சகர், எனவே ஒன்று இழந்த நிலையில் இருக்க வேண்டும். அது எப்படி இருக்கப்போகின்றது? ஒன்றை இரட்சிப்பதற்கென்று அவர் அது இழந்து போகச் செய்தல், அது அவருடைய நியாயத்தீர்ப்புக்கு நியாயமாயிருக்காது. அவர் ஒரு மனிதனை நரகத்துக்கு அனுப்பி, அவர் நியாயமுள்ளவராய் இருக்க முடியாது. அவர் தயவுள்ளவர் மென்மையானவர், உண்மையுள்ளவர், உத்தமமானவர், அவர் சிறந்த நியாயாதிபதி. பாருங்கள், அவர் தமக்கு எதிராகவே செயல் புரிந்து கொண்டிருப்பார். எனவே மனிதன் விழுந்து போவான் என்று அவர் அறிந்திருந்தும் கூட, சுய தீர்மானத்தை செய்யக்கூடிய நிலையில் அவனை வைத்தார். தமது சாயலில் உள்ள மனிதன் எப்படி விழுந்து போக முடியும்? உங்களுக்கு தெளிவாகின்றதா? எனவே அவர் மூல சிருஷ்டிப்பில் இல்லாத உபசிருஷ்டி, ஒன்றை உண்டாக்க வேண்டியிருந்தது. இப்பொழுது உங்களுக்கு விளங்கும். பாருங்கள்? அதுதான் விழுந்து போனது. அது விழுந்து போகுமென்று அறிந்து அவர் அதை உண்டாக்கினார். அது கனவீனமான பாத்திரமாக சாத்தானின் கரங்களில் அளிக்கப்பட்டது. இன்றைக்கு அதற்கு எங்கு கனம் அளிக்கப்படுகிறது? அதைக் குறித்து சிந்தித்து பாருங்கள். இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள். 55அவள் ஏன் மற்ற பெண் இனங்களைப் போல் இராமல் இவ்வாறு உருவமைக்கப்பட்டாள்? இவள் மாத்திரம் ஏன் அவ்வாறு உருவமைக்கப்பட வேண்டும்? மற்ற பெண் இனம் எதுவுமே அவ்வாறு உருவமைக்கப்படவில்லை. இன்று அவை அவ்வாறில்லை. அவைகளால் அவ்வாறிருக்க முடியாது, அந்த விதமாக உருவமைக்கப்படாத காரணத்தால், அது அவ்வாறு செய்ய முடியாது. அவர் ஏன் ஸ்திரீயை மற்ற பெண் இனங்களைப் போலவே உண்டாக்கி, குழந்தைகளைப் பெறச் செய்யவில்லை? அப்பொழுது குழந்தை பெறும் நேரம் வரும்போது அவளுடைய கணவனுடன் அவள் சேர்ந்திருப்பாளே. அவர் ஏன் அவளை அவ்விதமாக உண்டாக்கவில்லை. இந்த வார்த்தைகளை நான் வெளிப்படையாய் கூற இயலாது. நான் எதைக் குறித்து கூறுகிறேன் என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். அல்லவா? நீங்கள் புரிந்து கொண்டால், “ஆமென்'' என்று சொல்லுங்கள். (சபையோர் 'ஆமென்' என்கின்றனர் - ஆசி). ஆம், பாருங்கள்? (இங்கு இளம் பெண்களும், இளைஞர்களும் உட்கார்ந்து கொண்டிருக்கின்றனர். பாருங்கள்? உங்களுக்குத் தெரியுமா, ஒரு ஆண்டில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் மாத்திரமே மிருகங்கள் இனசேர்க்கையில் ஈடுபடுகின்றன; அவ்வளவுதான். ஆனால் ஸ்திரீயோ, எந்த நேரத்திலும். நீங்கள்.... அவர் ஏன் அவளை அவ்வாறு உண்டாக்கினார்? 56நான் தொடர்ந்து இதை கவனிக்கும் போது, அவருடைய மகத்தான திட்டம் பிழையற்ற விதத்தில் வெளியரங்கமாகுவதைப் பாருங்கள். அன்றொரு நாள் வரைக்கும் இதை நான் அறிந்திருக்கவில்லை. அவர் ஆதியில் மற்ற பெண் இனங்களைப் போல் இவளை ஏன் உண்டாக்கவில்லை? ஏனெனில் அது அவருக்கு பொருத்தமற்ற ஒன்றாயிருக்கும். அவர் தூய்மை அனைத்துக்கும் ஊற்றாயிருக்கிறார். அதன் காரணமாகத்தான் சாத்தான் அவளை அடையும்படி செய்தார் - அவன் நிலைகுலைதலில் புரிந்த செயல். தொடக்கத்தில்அதற்கென்று உருவமைக்கப்பட்ட அந்த சிருஷ்டி அவருக்கு பொருத்தமுள்ள ஒன்றாக இருக்காது. அவர் தொடக்கத்தில் உருவமைத்த அவருடைய கிரியைகள் அனைத்துமே தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. அவருடைய மூல கிரியைகள் அனைத்துமே தொடர்ந்து செயல்படுகின்றன - பெண் நாய், ஆண் நாய், அதைப் பார்த்தீர்கள்? பெண் பசு, ஆண் காளை, எல்லாமே தொடர்ச்சியாக இருந்து வருகின்றன. இயற்கை அனைத்துமே தொடர்ந்து செயல்பட்டு வருகின்றது. வித்து நிலத்தடியில் சென்று சாகின்றது - மரணம், அடக்கம், உயிர்த்தெழுதல் போன்று? சத்து மரத்தை விட்டு வேர்களுக்குச் சென்று, தன் இலைகளை உதிர்த்து, அடுத்த ஆண்டு மீண்டும் புதிய இலைகளுடன் உயிர்த்தெழுகிறது. நான் கூறுவது புரிகிறதா? எல்லாமே தேவனுடைய இயற்கையும் கூட ஒருமித்து, தொடர்ந்து செயல்படுகின்றது. ஆனால் இந்த ஒன்று மாத்திரம் தேவனுடைய தொடர்ச்சிக்கு அப்பாற்பட்டதாய் உருவமைக்கப்பட்டுள்ளது. பாவம் செய்ய முடியாதபடிக்கு இயற்கை உருவமைக்கப்பட்டுள்ளது. தேவனுடைய மூல சிருஷ்டி பாவம் செய்ய முடியாது. ஓ, சபையின் சீர்குலைதலை உங்களால் இங்கு காண முடிகின்றதா? தேவனுடைய வார்த்தை மூலமானது. தேவனில் பாவம் இல்லை, நான் கூறுவது புரிகிறதா? இங்கு ஒரு சிருஷ்டி நிலைகுலைதலின் மூலம் தோன்றுகிறது. தேவன் ஒரு சபையை பெறப்போகிறார், ஆனால் இவர்கள் கொண்டுள்ள அந்த தாறு மாறான நிலைகுலைந்த காரியத்தைப் பாருங்கள்! தேவனுக்கு ஆணும் பெண்ணும் உண்டு, ஆனால் இந்த ஸ்திரீயோ.... பாருங்கள். அதன் அறிகுறிகள் அனைத்துமே தொடக்கத்தில் தேவனுடைய சிந்தையில் என்ன இருந்தது என்பதைக் காண்பிக்கிறது. நாம் ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் எடுத்துக் கொண்டு இதை விவரிக்க முடியும். அவள்... இந்த சிருஷ்டியை அவர் அதற்கென்றே உண்டாக்கினார். அவர் இந்த சிருஷ்டியை உண்டாக்கி சாத்தான் அவளை அடைவதற்காக அவளை ஒப்புக்கொடுத்தார். அவன் அவளை அடைந்தான். அவன் இப்பொழுதும் அவளைக் கொண்டிருக்கிறான். அவள் சிலுவையண்டையில் ஓடிச்செல்வது நலம், மனிதனும் கூட. 57கவனியுங்கள், இயற்கை அனைத்தும் தொடர்ந்து செயல்படுகின்றது. அவர் ஸ்திரீயை அவ்விதமாகவே மூல சிருஷ்டிப்பில் உண்டாக்கியிருந்தால் பாவம் என்பது இருந்திருக்காது. ஏனெனில் அவள் அதை செய்திருக்க முடியாது! அவள் அதை செய்திருக்க முடியாது! அவள் மூல சிருஷ்டிப்பின் நிலைகுலைதல். அவ்வாறே பாவம் அனைத்துமே மூல சத்தியத்தின் தாறுமாறாக்கப்படுதலாக, நிலைகுலைதலாக அமைந்துள்ளது. பொய் என்பது என்ன? உண்மை தாறுமாறாக்கப்படுதல், விபச்சாரம் என்பது என்ன? சரியான செயல் தாறுமாறாக்கப்படுதல், எனவே தாறுமாறாக்கப்பட்ட சிருஷ்டி உள்ளது; தாறு மாறாக்கப்பட்ட எல்லாமே உள்ளது. முழுவதும் பா- வ - ம் என்று எழுத்துக் கூட்டப்பட்டு அங்கு கிடக்கிறது. அதனால் தான் இந்த கேள்வி மிகப் பெரியதாய் உள்ளது. மனிதனிலிருந்து எடுத்து உண்டாக்கப்பட்ட உதவாத ஒரு துண்டு, அவனை வஞ்சிக்கிறது. தேவன் அதை உண்டாக்கினார். அது இங்கு நிரூபிக்கப்பட்டுவிட்டது. அதற்காகவே அவள் உண்டாக்கப்பட்டாள். நடத்தை கெட்ட ஸ்திரீ இவ்வுலகில் மிகவும் தாழ்வானவள். இளம் பெண்களே, இதை மன்னித்துக் கொள்ளுங்கள். அவள் மானிடக் குப்பைத் தொட்டியேயன்றி வேறொன்றுமல்ல, தன் இனத்தை வெளிப்படையாகக் காண்பிப்பவள். அவ்வளவுதான் அவள் நடத்தை கெட்ட ஸ்திரீ பாலுணர்ச்சி தூண்டும் மானிட குப்பைத் தொட்டி. அவள் அழுக்கான, கீழ்த்தரமான, குப்பை அனைத்தையும் கொண்டவளாய் மாசுபட்டிருக்கிறாள். அவள் ஏன் அவ்வாறு உண்டாக்கப்பட்டிருக்கிறாள்? வஞ்சகத்திற்காக. இவ்வுலகில் காணப்படுகின்ற ஒவ்வொரு பாவத்துக்கும் ஸ்திரீயே காரணம். சிக்காகோவில் வெளியாகும் ஒரு பத்திரிக்கையில், காவல்படையைச் சேர்ந்த ஒரு பெண் கட்டுரை எழுதியிருக்கிறாள். அவர்கள் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் மாநகரங்களில் கணக்கிட்டுப் பார்த்தபோது, அமெரிக்க ஐக்கிய நாடுகளில் நேர்ந்த எல்லா வகையான குற்றங்களில் 98 சதவிகிதம் ஸ்திரீயின் காரணமாக உண்டானவையாம். அவள் அதில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஈடுபட்டிருக்கிறாள். முடிவில் ஒன்றை அடைவதற்கென்றே, இவையனைத்தையும் நான் கூறுகிறேன். அப்பொழுது விஷயம் என்னவென்று நீங்கள் புரிந்துகொள்வீர்கள். 58அவள் ஆதாமை தொடக்கத்தில் வஞ்சித்தது போல், அவள் வஞ்சிப்பதற்கென்றே உண்டாக்கப்பட்டவள். அவள் ஆதாமிடம் கனி இனிமையாயுள்ளதென்று கூறி அவனை வஞ்சித்து, அவனை வார்த்தையினின்று விலகச் செய்தது போல், சபையும் இன்று அதையே செய்து வருகிறது. ஆனால் அதன் பிறகு, அவன் அவளை ஆளுகை செய்தான். இந்நாளில் அவர்கள் கொண்டுள்ள கருத்து எவ்வளவு வித்தியாசமாயுள்ளது. அவன் அவளை ஆளுகை செய்வதற்கு பதிலாக, அவள், அவன் கடவுளாகிவிட்டாள் நிச்சயமாக, அவள்தான் அவனை ஆளுகை செய்கிறாள். நான் எதை வலியுறுத்துகிறேன் என்று நீங்கள் நன்கு புரிந்து கொள்வீர்கள். அவளுடைய அழகு, பாலுணர்ச்சி ஆதிக்கம், சாத்தானால் அவளுக்கு அளிக்கப்பட்ட உடலமைப்பு (சாத்தான் சேர்ந்த அந்த உபபொருள்) இவைகளைக் கொண்டு அவள் தேவ குமாரர்களை வஞ்சிக்கவும், சாத்தானின் மற்றெந்த கருவியைக் காட்டிலும் மிக அதிகமாக அவர்களை நரகத்துக்கு அனுப்பவும் அவள் அனுப்பப்பட்டிருக்கிறாள், அது முற்றிலும் உண்மை . நான் நடத்தைக் கெட்ட ஸ்திரீயைக் குறிப்பிடுகிறேன், சகோதரிகளாகிய உங்களை அல்ல. இன்னும் சில நிமிடங்களில் தேவனுடைய வார்த்தையில் உங்களுக்குரிய ஸ்தானத்தை, உரிமையான ஸ்தானத்தை அளிப்போம். அது தொடக்கத்திலிருந்து தேவனுடைய திட்டமாயிருந்தது. 59இன்று அதை செய்வது... அமெரிக்க ஐக்கிய நாடுகளின் கடவுள் யார்? சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த கூடாரத்தில் நவீன நாளின் தேவன் என்னும் பொருளின் பேரில் நான் பிரசங்கித்தது நினைவிருக்கிறதா? ஒரு பெண் அழகுபடுத்தும் பொருட்களை பூசிக்கொண்டு, உடையை முழங்காலுக்கு மேல் இழுத்துவிட்டு, உரைக்கப்பட்ட வார்த்தை அங்கு உட்கார்ந்து கொண்டிருந்தாள். நான் “இதோ, உங்கள் கடவுள்'' என்று கூறினேன். அது உண்மை! அவள் எல்லா விளம்பரங்களிலும் அரை நிர்வாணியாகக் காட்சியளிக்கிறாள். தெருக்களில் செல்லும் போதும் அவ்வாறே இருக்கிறாள். அவள் சாத்தானின் கருவி. ”ஆதி முதலாய்'' என்று இயேசு கூறினார். பாருங்கள் அது இப்பொழுது இவ்வாறுள்ளதை நாம் காண்கிறோம் - ஆதி முதலாய் என்று அவர் எதைக் குறித்து கூறினாரென்று. அஞ்ஞானிகள் பெண்ணை தெய்வமாக வழிபடுகின்றனர், அது உங்களுக்குத் தெரியுமா பெண் தெய்வம்? நிச்சயமாக அவர்கள் அதை செய்தனர், தங்கள் வழிபாட்டில் அவர்கள் இனசேர்க்கை செயல்களைக் கொண்டிருந்த காரணத்தால், அவர்கள் அவளை தெய்வமாக்கினர். அவள் சிருஷ்டிகர் என்று அவர்கள் உரிமை கோரினர். அவள் தன் கர்ப்பத்தில் வித்தை சுமந்து சிருஷ்டித்தாள் என்று அவர்கள் கூறுகின்றனர். அது பொய், சிருஷ்டிகர் ஒருவர் மாத்திரமே. அவர் தான் தேவன். பவுலின் காலத்தில் நடந்தது உங்களுக்கு நினைவிருக்கிறதா? எபேசுவிலிருந்த தியானாளின் சிலை. கற்பாறையில் செதுக்கப்பட்ட உருவம். அவள் வானத்திலிருந்து கீழே எறியப்பட்ட தெய்வம் என்று அவர்கள் கூறினர். அஞ்ஞான வழிபாடு எவ்வாறுள்ளதென்று உங்களால் காண முடிகின்றதா? நாம் அதை அறியாமலேயே, அஞ்ஞான வழிபாட்டிற்கு - பூமியிலேயே மிகவும் கீழ்த்தரமான சிருஷ்டியாகிய பெண்ணிடம் - மறுபடியும் திரும்பிவிட்டோம். பெண் வழிபாடு அவள் தன் விருப்பப்படி மனிதனை எந்த பக்கத்திலும் ஆட்டி வைப்பாள். அவளுடைய வெளிப்புற அழகின் உள்ளே நரகம் மறைந்துள்ளது என்பதை அறியாமலிருக்கின்றனர். அவள் வீடு பாதாளத்துக்குப் போகும் வழி என்று சாலொமோன் கூறியுள்ளான். 60வெளிப்படுத்தல் 2:15-ல், நிக்கொலாய் மதஸ்தருடைய போதகத்தைக் குறித்து இயேசு என்ன கூறினார் என்று நாம் தெளிவாகக் காண்கிறோம் - அந்த சபை தோன்றி, தன்னை வார்த்தைக்குப் புறம்பாக்கிக் கொண்டது. மேலும் நாம் இழிவான, தேவனற்ற, அசுத்தமான தொலைகாட்சி நிகழ்ச்சிகளை, ஹாலிவுட் செக்ஸ் ராணிகள் நடத்துவதை தொலைக்காட்சி தெளிவாகக் காண்கிறோம். இந்த சிறு பெண்கள் இறுக்கமான ஆடைகளை அணிந்து தெருக்களில் இங்கும் அங்கும் உடலை நெளித்து நடந்து, தங்களை மரணத்துக்கு உறையச் செய்யும் அளவுக்கு அது குளிராக அமைந்துள்ளது. இதன் மூலம் நாம் நகரத்தின் அசுத்தத்தை காண முடிகிறது. பிசாசு அப்படி செய்யத் தூண்டுகிறான் என்பதை அவர்கள் அறியாமலிருக்கின்றனர். அவர்கள் பிசாசினால் பீடிக்கப்பட்டு அதை அறியாமலிருக்கின்றனர். ஒரு பெண் நாய் அவ்வாறு செய்வதை நீங்கள் காண்பதில்லை, இல்லையா? எந்த பெண் இனமும் அவ்வாறு செய்வதை நீங்கள் காண்பதில்லை. எந்த ஆணும் அவளிடம் நடந்து செல்லாதிருப்பது நலம். 61பாருங்கள்? உங்களுக்கு காட்சி விளங்குகிறதா? கர்த்தருக்கு சித்தமானால், இன்னும் சிறிது நேரத்தில் வேறொன்றை நாம் அறிமுகம் செய்யப் போகின்றோம். நீங்கள் நிக்கொலாய் மதஸ்தினரையும் அவர்களுடைய போதகங்களையும் காண்கிறீர்கள்; நீங்கள், அவர்கள் இளம்பெண், டீன் - ஏஜ் ராணிகள் என்று அழைப்பவர்களை, ஆடைகளையும் பெண்களை தெருவில் காண் கிறீர்கள். ஆடைகள் களைந்து போடும் நடனங்களை (Striptease) காண்பதற்கு முன்பெல்லாம் அதற்கென்று நடத்தும் மோசமான காட்சிகளுக்கு செல்ல வேண்டியதாயிருந்தது. ஆனால் இப்பொழுதோ உங்கள் கண்களைத் திறந்து தெருவில் பார்த்தால் போதும். நீங்கள் இப்பொழுது செய்ய வேண்டியது அவ்வளவுதான். எல்லாமே ஆடை களைந்த பெண்களைக் கொண்டுள்ளது. நிச்சயமாக, அவர்கள் ஏன் அப்படி செய்கின்றனர்? உங்கள் ஆசையைத் தூண்ட, உங்களுக்கு மோகம் உண்டாக்க. அந்த ஒன்றிற்காகத் தான் அவள் அப்படி செய்கிறாள். அவள் அசுத்தமாயிருப்பதால் அப்படி செய்கிறாள். அவள் அவ்வாறு உண்டாக்கப்பட்டிருப்பதால் அப்படி செய்கிறாள். சாத்தானின் கரங்களில் அவள் ஒரு கருவியாக இருக்கிறாள் என்பதை உணராமலிருக்கிறாள். அப்படித்தான் அவள் இருக்கிறாள். இன்று நமது பள்ளிக்கூடங்களிலும் கூட அவர்கள் இன சேர்க்கை செயல்களை கற்றுத் தருகின்றனர். பெண்ணை வழிபடும் நமது அழுகின உலகம்! அவர்களுக்கு அதை நம்ப விருப்பமில்லையென்று எனக்குத் தெரியும். அவர்கள் ஒரு நாள் நின்று கிறிஸ்தவ பாடல்களைப் பாடிவிட்டு, இரவு முழுவதும் பெண்களுடன் சுற்றித் திரிகின்றனர். பாருங்கள்? சரி. வார்த்தையாகிய தேவனுடைய பார்வையில், தேவன் இவ்வுலகில் வைத்துள்ள மிருகங்கள் அனைத்திலும் அவள் கீழ்த்தரமாக இருக்கிறாள். கவனியுங்கள். 62அதனால்தான் அவளுக்கு, தம்முடைய வார்த்தையைப் போதிக்க தேவன் தடை விதித்திருக்கிறார். அது உண்மை. 1-தீமோ. 2:9-15. ''உபதேசம் பண்ணவும், புருஷன் மேல் அதிகாரஞ் செலுத்தவும், ஸ்திரீயானவளுக்கு நான் உத்தரவு கொடுக்கிற தில்லை ...'' பாருங்கள்? மறுபடியும் 1 கொரி. 14:34 “சபைகளில் உங்கள் ஸ்திரீகள் பேசாமலிருக்கக் கடவர்கள்; பேசும்படிக்கு அவர்களுக்கு உத்தரவில்லை: அவர்கள் அமர்ந்திருக்க வேண்டும்; வேதமும் அப்படியே சொல்லுகிறது. ஆனால் இன்று சபை என்ன செய்கிறது? வேதம் அதற்கு முற்றிலுமாக தடை விதித்திருக்கும் போது அவர்கள் அவளை போதகர்களாகவும், சுவிசேஷகர்களாகவும் நியமித்துள்ளனர். வேதமும் அப்படியே சொல்கிறது, முழுவதும் தொடர்ச்சியாக நடைபெறும்படி செய்கிறது. நேற்று இரவு நாம் பேசின தேவ ஆட்டுக் குட்டியைப் போன்று. சிந்தப்பட்ட தேவ ஆட்டுக்குட்டியின் இரத்தத்தின் கீழ் நாம் வழிபடக் கூடிய ஒரே ஸ்தலம். இன்று அந்த ஒரு ஸ்தலம் மாத்திரமேயுள்ளது - கிறிஸ்து. நாம் செய்யக் கூடிய ஒன்றே ஒன்று அவரிடத்தில் வருவதாகும். வழிபடக்கூடிய ஒரே இடம் அதுவே. அது எப்பொழுதும் அவ்வாறே இருந்து வந்துள்ளது - சிந்தப்பட்ட இரத்தத்தின் கீழ் வழிபடக்கூடிய ஒரே ஸ்தலம். 63எனவே, இப்பொழுது முழு காட்சியும் நமக்கு வெளிப்படையாவதை நாம் காண்கிறோம். அதோ அவள். அதனால் தான் அவள் உபதேசம் பண்ணவோ, அல்லது சபையில் வேறெதையும் செய்யவோ தேவன் அனுமதிக்கவில்லை. அவள் திரை மூடப்பட்ட முகத்துடன் அமைதலாக அமர்ந்திருக்கவேண்டும். நான் ஏன் இவைகளை கூறினேன். இவைகளை செய்தேன் . என்று இப்பொழுது புரிகிறதா? சகோதரர்களே, சகோதரிகளே, இவைகளை என் இருதயத்தில் அறிந்திருந்தேன். சகோதரிகளே, உங்களுக்கு ஒரு ஸ்தானம் உண்டு என்றறிவேன் (சிறிது நேரம்) தேவன் உங்களை நற்பண்பு கொண்ட அருமை பெண்மணிகளாக வரைய முடியுமென்று எனக்குத் தெரியும், ஆனால் நீங்கள் ஆதி முதற் கொண்டு எவ்வாறிருக்கிறீர்கள் என்பதைக் காண்பிக்கவே, பெண்ணின் மற்ற அம்சத்தை குறித்து பேசினேன். அது என்னவென்று காண நாம் தொடக்கத்திற்கு செல்லவேண்டுமென்று இயேசு நம்மிடம் கூறியுள்ளார். அதைத் தான் இப்பொழுது நாம் செய்து கொண்டிருக்கிறோம். இதன் பேரில் அநேக காரியங்களின் உச்ச கட்டத்தை நான் வலியுறுத்த வேண்டியதாயிருந்தது. நீங்கள் புரிந்து கொள்வீர்களென்று நினைக்கிறேன். இந்த ஒலிநாடாவைக் கேட்கப் போகும் ஜனங்களே, நீங்களும் புரிந்து கொள்வீர்களென்று நினைக்கிறேன். ''நீங்கள் தொடக்கத்திற்கு சென்று அதை கண்டுபிடியுங்கள்'', என்று இயேசு கூறினதால் மாத்திரமே, இவைகளை உங்களுக்கு காண்பித்தேன். 64நான் பெண்களை வெறுப்பவன் என்று இன்று ஜனங்கள் கூறுகின்றனர். அது உண்மைக்கு மிகவும் அப்பாற்பட்டது. அவர்கள் பவுலையும் அவ்வாறு அழைத்தனர் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். ஒரு பெண் பிரசங்கி அண்மையில் என்னிடம், “ஓ, நீங்களும் பவுலைப்போல் இருக்கின்றீர்கள். அவன் செய்த அனைத்தும் பெண்களாகிய எங்களைத் தாக்குவதே” என்றாள். வேதத்தை, புதிய ஏற்பாட்டை எழுத அனுமதி பெற்ற தேவனுடைய பரிசுத்தவானின் வார்த்தைகளை மறுக்கின்றீர்கள். அவன், “வானத்திலிருந்து வருகிற தூதனும் கூட நான் சொன்னதை அல்லாமல் வேறெதையாகிலும் சொன்னால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்'' என்றான் - ஒரு பெண் பிரசங்கி மாத்திரமல்ல. அவர்கள் எலியாவை பெண்களை வெறுப்பவன் என்றழைத்தனர். அவன் நற்பண்பு கொண்ட பெண்களை வெறுக்கவில்லை. அவனுக்கு யேசபேல்களை பிடிக்கவில்லை. அது அப்படியிருந்தால் - தேவன் அதே விதமாகத்தான் இருக்க வேண்டும். ஏனெனில் அவர் தீர்க்கதரிசிகளிடம் வருகின்ற வார்த்தையாயிருக்கிறார். எனவே தேவன் எக்காலத்தும் அதே விதமாகவே இருக்க வேண்டும். எனவே பாருங்கள், அவர் மூல சிருஷ்டிப்பை ஆதிமுதற்கொண்டு அறிந்திருக்கிறார். அவர் ''ஆதிமுதலாய்'' என்றார். அவர்கள் வார்த்தை தங்களிடம் வந்த தீர்க்கதரிசிகளாயிருந்தனர். 65அவர் அவளை மனிதனுக்காக உண்டாக்கினாரேயன்றி, மனிதனை அவளுக்காக உண்டாக்கவில்லை. அது உங்களுக்குத் தெரியுமா, ஸ்திரீ மனிதனுக்காக உண்டாக்கப்பட்டாள். மனிதன் ஸ்திரீக்காக உண்டாக்கப்படவில்லை. அது எத்தனை பேருக்குத் தெரியும்? வேதம் அதை போதிக்கிறது. வீழ்ச்சிக்கு முன்பு அவளுக்கு மனிதனில் ஒரு ஸ்தானம் அளிக்கப்பட்டு, அவள் எல்லா சிருஷ்டிப்பின் மேலும் மனிதனுக்கு சமமாக ஆளுகை செய்தாள். ஆனால் வீழ்ச்சிக்கு பிறகு - அந்த பொருளை இங்கு நாம் கொண்டு வருகிறோம் - வீழ்ச்சிக்கு பிறகு அவன் அவளை ஆண்டான். அவள் எல்லா விஷயங்களிலும் அமைதலாக இருக்கவேண்டும். மூல தொடக்கம் முடிவடைந்த பின்பு... “ஆதிமுதலாய் அப்படி இருக்கவில்லை'' என்று இயேசு கூறினார், (தேவன் தமது மூல சிருஷ்டிப்பில் முதலாவதாக அதை உண்டாக்கின் போது புரிந்து கொண்டவர்கள் அனைவரும் ''ஆமென்” என்று மறுபடியும் சொல்லுங்கள் (சபையோர் ''ஆமென்'' என்கின்றனர்- ஆசி). ஆதியில் தேவன் ஒரு ஆணையும் ஒரு பெண்ணையும் சிருஷ்டித்தார். ஆனால் ஸ்திரீயோ வஞ்சிப்பதற்காக மற்ற மிருகங்களைக் காட்டிலும் வித்தியாசமாக சிருஷ்டிக்கப்பட்டாள். இப்பொழுது கவனியுங்கள், ''ஆதிமுதலாய் அப்படி இருக்கவில்லை,'' அவள்... அவள் மூல நிலையில் தங்கியிருந்தால், அவளுக்கு வீழ்ச்சியே இருந்திருக்காது. ஆனால் அவளோ வீழ்ச்சிக்கு காரணமாயிருந்து, அதனால் ஏற்பட்ட தடங்கல் தேவனுடைய தொடர்ச்சியை முறித்து போட்டு, பூமியின் மேல் மரணத்தையும், துயரத்தையும், மற்றெல்லாவற்றையும் வருவித்தது. அவள் அவ்வாறு உண்டாக்கப்பட்டாள். 66இப்பொழுது கவனியுங்கள். தொடக்கத்திற்கு பிறகு, காலம் தொடங்கின பிறகு, காலம் தொடங்கின பிறகு (அதற்கு முன்பு நித்தியம் உண்டாயிருந்தது. அது முடிவு பெற்றது.) கவனியுங்கள், ஏவாள் வீழ்ச்சியை தோன்றப் பண்ணின பிறகு, வேறொரு உடன்படிக்கை செய்ய அவசியமிருந்தது. இது உங்களை இடறப் பண்ணும். ஆனால் அது உண்மையென்று நிரூபிக்க, நான் வேத வாக்கியத்தை உங்களுக்கு அளிக்கப் போகின்றேன். இப்பொழுது கவனிங்கள், வீழ்ச்சிக்குப் பிறகு. இயேசு “தேவன் ஆதியிலே ஒவ்வொரு இனத்திலும் ஒன்றை உண்டாக்கினார்'' என்றார். வீழ்ச்சிக்குப் பிறகு - நாம் இப்பொழுது அதை தாண்டி செல்கிறோம்; உடன்படிக்கை இருவருக்கும் ஒன்றாயிருந்தது” ஆனால் வீழ்ச்சிக்குப்பிறகு; வேறொரு உடன்படிக்கை செய்யப்பட்டது. அவள் அன்று முதல் அவனுடன் கூடஆளுகை செய்யவில்லை. ஒவ்வொருவரும் தனிப்பட்ட உடன்படிக்கை பெற வேண்டும். 67அது சரியாவென்று இப்பொழுது காண்போம். நாம் ஆதியாகமம், 3-ம் அதிகாரத்தை எடுத்துக்கொண்டு, அதை படித்து, அது சரியாவென்று இப்பொழுது காண்போம். ஏனெனில் போதிக்கப்படும் இக்காரியங்கள் உண்மையென்று நாம் உறுதியாக அறிந்திருக்க விரும்புகிறோம். அவைகள் சரியாக போதிக்கப்பட்டு, சரியாக அதே விதமாக அது வெளி கொண்டு வரப்படுகிறது. அந்த வேத பாகத்தை படிக்க நமக்கு சிறிது நேரம் இருக்கக்கூடும். ஏனெனில் இச்செய்தியின் முடிவுக்கு நாம் அதிக தூரம் இல்லை. விவாகரத்துக்களைக் குறித்த ஏன் அது, எதற்காக அது என்ற விஷயங்களை சிந்திக்கப் போகும் இப்பொருளின் முடிவு பாகத்துக்கு நாம் அதிக தூரம் இல்லை. இப்பொழுது ஆதியாகமம் 3-ம் அதிகாரம், நாம் 16ம் வசனத்திலிருந்து தொடங்குவோம். 14ம் வசனத்திலிருந்தே தொடங்குவோம். அப்பொழுது தேவனாகிய கர்த்தர் சர்ப்பத்தைப் பார்த்து ... (அவர் அதை சபிக்கப் போகின்றார்.... நீ இதைச் செய்தபடியால் சகல நாட்டு மிருகங்களிலும் சகல காட்டு மிருகங்களிலும் சபிக்கப்பட்டிருப்பாய். நீ உன் வயிற்றினால் நகர்ந்து, உயிரோடிருக்கும் நாளெல்லாம் மண்ணைத் தின்பாய். உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார். (வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட மேசியா மீட்பதற்காக ஸ்திரீயின் மூலம் வருதல்). அவர் ஸ்திரீயை நோக்கி... இப்பொழுது கவனியுங்கள் இதோ சர்ப்பத்தைக் குறித்த உடன்படிக்கை. அதற்கு முன்பு தொடக்கத்தில் அல்லது தொடக்கத்துக்கு முன்னர் அவர்கள் சரியாயிருந்தனர். அவர் ஸ்திரீயை நோக்கி: நீ கர்ப்பவதியாயிருக்கும்போது உன் வேதனையை மிகவும் பெருகப்பண்ணுவேன்; வேதனையோடே பிள்ளை பெறுவாய்; உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டு கொள்ளுவான் என்றார். (அவர்கள் இனி ஒருபோதும் ஒருவருக்கொருவர் சமமானவர் அல்ல. ஆனால் இப்பொழுதோ அவள் அந்நிலையை மாற்றி, அவள் ஆளுகை செய்கிறாள்). பின்பு அவர் ஆதாமை நோக்கி: நீ உன் மனைவியின் வார்த்தைக்குச் செவி கொடுத்து, புசிக்க வேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தபடியினாலே, பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும்... (ஆதாம் சபிக்கப்படவில்லை, பூமி சபிக்கப்பட்டது) ... நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் வருத்தத்தோடே அதன் பலனைப்புசிப்பாய். அது உனக்கு முள்ளும் குருக்கும் முளைப்பிக்கும்; வெளியின் பயிர் வகைகளையும் புசிப்பாய். நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்கு திரும்பு மட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்; நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய் என்றார். ஆதி. 3:14-19 68இரண்டு உடன்படிக்கைகள்! “ஆதிமுதலாய் அப்படியிருக்கவில்லை'' என்று இயேசு கூறினதை அது முடித்துவிடுகிறது. இப்பொழுது நமக்கு வேறொரு உடன்படிக்கை. கவனியுங்கள், அது வேறொரு உடன்படிக்கை. சிருஷ்டிக்கும் உப சிருஷ்டிக்கும் வெவ்வேறு உடன்படிக்கை, கவனியுங்கள், வீழ்ச்சி துன்பத்தையும், மரணத்தையும் சிருஷ்டிப்பிலுள்ள ஒவ்வொரு சிருஷ்டியின் மேலும் கொண்டு வந்து, இயற்கை அனைத்திலும் ஒரு வித்தியாசத்தை உண்டாக்கினது. ''ஆதிமுதலாய் அப்படியிருக்கவில்லை'' என்று இயேசு கூறினதை நாம் கவனிப்போம்''. ஆதியில் அவ்வாறில்லை, ஆனால் இப்பொழுது, தொடக்கத்திற்கு பிறகு'' இங்கு இரண்டு உடன்படிக்கைகள். முதலில் ஒரே உடன்படிக்கை, ஆதாமும் ஏவாளும் ஒருவருக்கொருவர் சமமானவர்களாயிருந்தனர்; ஒரு மனிதன், ஒரு ஸ்திரீ. ஸ்திரீ பாவம் செய்தாள். அவள் என்ன செய்தாள்? அது எல்லாரையும் மரணத்துக்குள் ஆழ்த்தியது. அப்பொழுது தேவன் வேறொரு உடன்படிக்கை செய்ய வேண்டியதாயிற்று. இதோ அது ஆதியாகமம் 3:16ல் உள்ளது. அவர் வேறொரு 69இப்பொழுது, உலகமானது, ஆதியில் தேவன் சிருஷ்டித்தது போல், அந்த விதமாக ஜனத்தொகையால் நிரப்பப்படாமல், இன சேர்க்கை விருப்பத்தின் மூலம் நிரப்பப்படும். அது “ஆதியில் எப்படியிருந்தது என்பதை விவரிக்கின்றது. இல்லையா? ஆதியில் ஒரே ஒரு மனிதனும், ஒரு ஸ்திரீயும் இருந்தனர் - ஒரு ஆண், ஒரு பெண், ஆனால் அவள் அந்த கோட்டை கடந்து, இந்த பாவத்தை வருவித்தபோது, இனி உலகத்தில் சிருஷ்டிப்பின் மூலம் அல்ல, இன சேர்க்கையின் மூலம் ஜனத்தொகை பெருக்கம் ஏற்படும். இப்பொழுது ஸ்திரீ எந்த நிலையை அடைந்துவிட்டாளென்று பாருங்கள். அந்த வகையில் தான் உலகத்தில் இன்று ஜனத்தொகை பெருகுகின்றது - ஸ்திரீகளின் மூலம். அதன் காரணமாகத் தான், இயேசுவும் ஒரு ஸ்திரீயின் மூலம் வர வேண்டியதாயிற்று. அதை தொடக்கத்திற்கு மீண்டும் கொண்டுசெல்ல, இன சேர்க்கை விருப்பமில்லாமல், அவர் கன்னியின் மூலம் பிறந்தார். ஆனால், அல்லேலூயா ஒரு காலம் வரும், அப்பொழுது இன சேர்க்கை ஒரு போதும் இருக்காது. தேவன் தம்முடைய பிள்ளைகளை அவர் ஆதியில் செய்ததுபோல், பூமியின் மண்ணிலிருந்து அழைப்பார். அந்த ஸ்திரீயின் மூலம் அல்ல, ஆனால் களி மண்ணையும், விண்வெளி ஒளியையும் பெட்ரோலியத்தையும் ஒன்றாக சேர்த்து, முதலில் அவர் ஆதாமை சிருஷ்டித்தது போலவே, மறுபடியும் சிருஷ்டிப்பார். தேவனே மரிப்பதற்காக மனித ரூபம் எடுத்து, இந்த ஸ்திரீயின் மூலம் இவ்வுலகில் வந்ததன் மூலம், இயேசு இதை சாத்தியமாக்கினார், இது பாவத்தால் நேரிடும் சோதனை காலமாயுள்ளது. 70இப்பொழுது பாருங்கள்; ஆதிக்குப் பிறகு வேறொன்று நுழைக்கப்பட்டது. இது உங்களுக்கு அதிர்ச்சியளிக்கப் போகின்றது (நீங்கள் களைப்பாயிருக்கிறீர்களா? இன்னும் சிறிது நேரம் அமைதியாய் உட்கார்ந்திருங்கள்). இனச்சேர்க்கையின் விளைவாக மனிதனுக்கும் ஸ்திரீக்கும் வெவ்வேறு உடன்படிக்கை அளிக்கப்பட்ட பிறகு (இது முற்றிலும் வேறொரு உடன்படிக்கை; முதலில் கொடுக்கப்பட்ட உடன்படிக்கையல்ல, வேறொரு உடன்படிக்கை). வேறென்ன நுழைக்கப்பட்டது? எல்லா இனங்களிலும், பல பெண்களை சேர்தல் (Polygamy) என்பது. ஆதிக்குப் பிறகு, மனிதனிலும், மிருகங்களிலும் பல பெண்களை சேர்தல் என்பது நுழைக்கப்பட்டது -ஆதிக்குப் பிறகு, வீழ்ச்சிக்குப் பிறகு. தேவன் இனச்சேர்க்கையின் மூலம் இரண்டாவதாக ஒரு புது இயற்கையை உண்டாக்குகிறார். அவர் முதலில் இனச்சேர்க்கை இல்லாமல் சிருஷ்டித்தார், அதை நீங்கள் நம்புகிறீர்களா? இது இயற்கையுடன் வேறொரு உடன்படிக்கை. இனச் சேர்க்கையின் மூலம் அவர் வேறொரு ஒழுங்கை ஏற்படுத்துகிறார். இரண்டாம் உடன்படிக்கை. ஒரு ஆண், பல பெண்கள்; ஒரு ஆண் மான், ஒரு மந்தை பெண் மான்கள் (அது சரியா?); ஒரு காளை, ஒரு மந்தை பசுக்கள். ஒரு சேவல், பண்ணை முழுவதிலுமுள்ள கோழிகள் (அது சரியா?). அவருடைய இருதயத்திற்கேற்ற ஒரு தாவீது, ஐந்நூறு மனைவிகள். வெவ்வேறு ஸ்திரீகளின் மூலம் ஒரே ஆண்டில் அவனுக்கு நூறு பிள்ளைகள் பிறக்கின்றன - தேவனுடைய இருதயத்திற்கேற்றவன்; ஒரு சாலொமோன், ஆயிரம் மனைவிகள். ஆனால் கவனியுங்கள், ஆதியில் அப்படியிருக்கவில்லை. இப்பொழுது, ஆதிக்குப் பிறகு ஸ்திரீ தான் இதை செய்தாள், அதன் பிறகு அவள் இப்பொழுதுள்ள நிலையையடைந்து விட்டாள். பாருங்கள்? 71கிறிஸ்துவுக்கு எடுத்துக் காட்டாயிருந்த தாவீது ராஜா - (இதை ஞாபகம் கொள்ளுங்கள்). தாவீது கிறிஸ்துவுக்கு எடுத்துக் காட்டாய் இருந்தான். அதை நீங்கள் நம்புகிறீர்களா? கிறிஸ்து அவனுடைய சிங்காசனத்தில் உட்காரப் போகின்றார். இந்த தாவீது, தேவனுடைய இருதயத்திற்கேற்றவன், ஐந்நூறு மனைவிகளைக் கொண்டிருந்தான். நான் கூறுவது விளங்குகின்றதா? ஐந்நூறு மனைவிகளையுடைய தாவீது, மாம்சப் பிரகாரமாக தாவீதின் குமாரனான சாலொமோன். அது ஆவிக்குரிய தாவீதின் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவுக்கு எடுத்துக்காட்டாயுள்ளது. அது மாம்சத்துக்குரிய இன சேர்க்கையினால் உண்டான ஜீவன். இது ஆவியினால் சிருஷ்டிக்கப்பட்ட ஜீவன். அப்படித்தான் அது ஆதியில் இருந்தது. நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த வாழ்க்கை போல் அல்ல. கவனியுங்கள் (இப்பொழுது இதைக் காணத் தவறாதீர்கள்; உங்கள் இருதயங்களில் இதை பதித்துக் கொள்ளுங்கள்). இந்த ஸ்திரீகளில் ஒருத்தி கூட மேலும் ஒரு கணவனை பெறக்கூடாது அவன் தான் மூல சிருஷ்டிப்பு. அவள் அல்ல. அந்த பெண்களில் ஒருத்திக்கு கூட இன்னொரு கணவன் இருக்கக்கூடாது. ஆனால் அந்த ஒரு கணவனுக்கு ஆயிரம் மனைவிகள் இருக்கலாம். அது கர்த்தர் உரைக்கிறதாவது. அப்படித்தான் வேதாகமம் கூறுகிறது. நாம் முன் காலத்துக்கு சென்று, என் நேரத்தை எடுத்துக் கொண்டு, இயேசு குறிப்பிட்டதை தொடங்கினது எதுவென்று காண்பித்தேன். அதை நீங்கள் தெளிவாக காண்கிறீர்களா? அவர்களுக்கு எத்தனை மனைவிகள் வேண்டுமானாலும்... 72“ஓ, அது இஸ்ரவேல் ஜனங்களுக்கு மாத்திரமே'' என்று நீங்கள் கூறலாம். அப்படியா? ஆபிரகாம் சாராளை பெலிஸ்தியர் தேசத்துக்கு கொண்டு சென்றபோது, அங்கு அபிமெலேக்கு என்னும் பெயர் கொண்ட ராஜா இருந்தான். சாராளுக்கு அப்பொழுது நூறு வயது (ஏறக்குறைய ). ஆனால் அவள் இளம் பெண்ணாக மாற்றப்பட்டு அழகாக ஆக்கப்பட்டாள். அது உங்களுக்குத் தெரியுமா? சரி. அபிமெலேக்கு அவளை மனைவியாக அடைய விரும்பினான். அதைக் குறித்த என் செய்தி ஞாபகமிருக்கிறதா? அபிமெலேக்கு சாராளை மனைவியாக்கிக் கொள்ள விரும்பினான். அவனுக்கு ஒருக்கால் அநேக மனைவிகள் இருந்திருக்கக் கூடும். ஆனால் சாராள் ஆபிரகாமை மணந்திருந்ததால், அவளை அவன் மனைவியாக்கிக் கொள்ள முடியாது. ஆபிரகாம் சாராளிடம் ”நீ என்... நான் உன் சகோதரன் என்று சொல்லிவிடு. இல்லையென்றால் உன்னை மனைவியாக அடைவதற்காக அவன் என்னைக் கொன்று போடுவான்'' என்றான். அவன் ஏன் ஆபிரகாமை தேசத்தை விட்டு துரத்திவிட்டு, அவளைத் தன் மனைவியாகக் கொள்ளவில்லை. அது விசுவாசிகளுக்கு மாத்திரம் அளிக்கப்பட்ட பிரமாணம் அல்ல, அது சிருஷ்டிப்பில் உள்ள எல்லா ஜனங்களுக்கும். மனிதனே, நீ பாவியாயிருந்தாலும் பரிசுத்தவானாயிருந்தாலும், இந்த செயல்களுக்கு நீ பொறுப்பாளியாயிருக்கிறாய். அபிமெலேக்கு ஒரு அஞ்ஞானி ராஜா. அந்த வரலாறு உண்மையென்று எத்தனை பேருக்குத் தெரியும்? அது வேதாகமத்தில் உள்ளது - ஆதியாகமம் 16ம் அதிகாரம் என்று நினைக்கிறேன். 73கவனித்தீர்களா, அபிமெலேக்கு அவளை மனைவியாக்கிக் கொண்டிருப்பான். இந்த புது எபிரேயப் பெண்ணை தனக்காக கொண்டிருப்பான். ஆபிரகாம், அவள் என் சகோதரி'' என்றான். அவள், ''அது என் சகோதரன்'' என்றாள். அவன், “அது என் சகோதரி'' என்றான். அபிமெலேக்கு, ''அப்படியானால் அவளை என் மனைவியாக்கிக் கொள்கிறேன்'' என்றான். ஒரு மனிதன் அப்படி செய்வான் என்று உங்களால் நினைத்துப் பார்க்க முடிகிறதா? ஆனால் அவன் அப்படித்தான் செய்தான். அன்றிரவு அவன் தூங்கச் சென்றபோது, கர்த்தர் அவனுக்கு சொப்பனத்தில் தோன்றி, ''அபிமெலேக்கே, நீ செத்தாய்'' என்றார். யூத இரத்தத்தின் தொடர்ச்சியை அவர் பாதுகாத்துக் கொண்டிருந்தார், பாருங்கள் “நீ செத்தாய். ஒருவனுடைய மனைவியை நீ மணந்து கொள்ள ஒழுங்கு செய்கின்றாய்'' என்றார். அவன், ''கர்த்தாவே , என் இருதயத்தின் உத்தமத்தை நீர் அறிந்திருக்கிறீர். அவன் தன்னுடைய சகோதரன் என்று அவள் கூறவில்லையா?'' அவனும் கூட, “அவள் என் சகோதரி என்றானே'' என்றான். அவர், ''உன் இருதயத்தின் உத்தமத்தை நான் அறிந்திருக்கிறேன். ஆகையால் தான் நீ எனக்கெதிராக பாவம் செய்யாதபடிக்குத் தடுத்தேன்'' என்றார். அது சரியா? “அவனுடைய மனைவியை திரும்ப அனுப்பி விடு. ஏனெனில் அந்த மனிதன் என்னுடைய தீர்க்கதரிசி ஆவான். அவனுடைய மனைவியைக் கொண்டு போய் விட்டுவிடும். அவன் உனக்காக ஜெபம் பண்ணுவான் - உன் ஆசாரியன் அல்ல. அவன் உனக்காக ஜெபம் பண்ணாவிட்டால், உன் தேசம் முழுவதுமே அழிந்துவிடும்'' என்றார். ஆமென். அங்கு ஆச்சரியமான கிருபை... 'உன் தேசம் முழுவதுமே அழிந்து விடும். அவள் அந்த மனிதனின் மனைவி, அவன் என் தீர்க்கதரிசி'' ஆமென்! அது கர்த்தர் உரைக்கிறதாவது. அது வேதத்தில் உள்ளது. சரி. 74ஸ்திரீயின் பாவத்தின் விளைவாக மரணம் உண்டானது என்று நாம் காண்கிறோம். அது ஸ்திரீயின் மூலம் வந்ததேயன்றி மனிதனின் மூலம் அல்ல. அவள் வாழ்ந்த வாழ்க்கையின் காரணமாக அவள் மூலம் மரணம் உண்டானது. அவள் அளிக்கும் ஜீவன் மரணமே. அது எத்தனை பேருக்குத் தெரியும்? நீங்கள் குறித்துக் கொள்ள விரும்பினால், அது யோபு 14ம் அதிகாரம்... இதன் மேல் நீங்கள் கேள்வி எழுப்பினால், நான் அது ஒவ்வொன்றுக்கும் வேதவசனத்தைக் குறித்து வைத்திருக்கிறேன். இப்பொழுது யோபு 14 ம் அதிகாரத்தில் படிக்க விரும்புகிறீர்களா? ''ஸ்திரீயினிடத்தில் பிறந்த மனுஷன் வாழ்நாள் குறுகினவனும் சஞ்சலம் நிறைந்தவனுமாயிருக்கிறான். அது சரியா?'' அவன் பூவைப் போல் பூத்து அறுப்புண்கிறான்; நிழலைப்போல் நிலை நிற்காமல் ஓடிப் போகிறான் பாருங்கள்? ஸ்திரீயினால் பிறந்த எவனும், அவன் தோன்றினவுடனே மரணத்துக்குள் பிறந்து விடுகிறான். ஆனால் தேவனுடைய சிருஷ்டிப்புக்குள் பிறக்கும்போது, அவன் மரிக்க முடியாது! அவன் ஏதேன் தோட்டத்திலிருந்து மற்ற விருட்சமாகிய கிறிஸ்துவிலிருந்து வந்தவன். அந்த விருட்சத்தின் மூலம் நித்திய ஜீவன் வருகிறது. நீங்கள், ''ஓ, அவள் என்ன விருட்சமாகவா இருந்தாள்?'' என்று நீங்கள் கேட்கலாம். நிச்சயமாக அவர் அப்படித்தான் கூறினார் அந்த விருட்சத்தின் கனியைப் புசிக்க வேண்டாம்'' என்று. தேவன் ஆதியாகமத்தில். “அந்த விருட்சத்தின் கனியைப் புசிக்க வேண்டாம்'' என்றார். ஸ்திரீ ஒரு விருட்சமாயிருக்கிறாள். அவள் கனி தரும் விருட்சம். நீங்கள் உங்கள் தாயின் கனி; நீங்கள் அவள் கர்ப்பத்தின் கனி. அது உண்மை. ஏதேன் தோட்டத்திலிருந்த ஜீவ விருட்சத்தின் கனிதான் கிறிஸ்து. ஸ்திரீயின் மூலம் மரணம் உண்டாகின்றது, ஸ்திரீயினால் பிறப்பது மரணம்; கிறிஸ்துவினால் பிறப்பது ஜீவன். அந்த கருத்து புரிகிறதா? அங்குதான் - பெண் தெய்வங்கள் எங்கு சென்று விட்டனர் என்று பார்த்தீர்களா? முதலாம் ஆதாமும் ஏவாளும் இரண்டாம் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் முன்னடையாளமாயிருந்தனர், பலுகிப் பெருகுதலைப் பாருங்கள். ஆதாமும் ஏவாளும் இனச்சேர்க்கையின் மூலம் பலுகிப் பெருகி பூமியை நிரப்பினார்கள். ஆனால் ஆதியில் அப்படியிருக்கவில்லை. தேவன் மற்ற சிருஷ்டிகளைப் போலவே இவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார். பாருங்கள்? சட்டபூர்வமாக. அவர் சபையைச் செய்தது போல். 75உறுதிபடுத்தப்பட்ட தேவனுடைய சத்தியங்களின் அடிப்படையில், நீங்கள் விரும்பினால், நாம் இன்னும் சிறிது ஆராய்வோம். (சபையார் “ஆமென்'' என்கின்றனர். சரி. நான் இதை ஆழமாக நோக்கும் போது. இது சிறிது வேதனை அளிக்கக்கூடியதாயிருக்கும். அதைக் குறித்த சத்தியம் என்னவென்பதை உங்களுக்குக் காண்பிக்கப் போகின்றேன். எந்த ஒரு போதகரும் விதவையை மணக்கக்கூடாது. உங்களுக்குத் தெரியுமா? அதை படிக்க விரும்புகிறீர்களா? சரி. அது லேவியராகமம் 21:7 மற்றும் எசேக்கியல் 44:22ல் உள்ளது. ஆசாரியர்கள் வேறொரு மனிதனால் தொடப்பட்ட ஒரு ஸ்திரீயை விவாகம் செய்யலாகாது என்று அது உங்களுக்குக் காண்பிக்கும். அது இயேசு கிறிஸ்துவின் கன்னிகை மணவாட்டிக்கு முன்னடையாளமாயுள்ளது. ஏனெனில் ஆசாரியர்கள் - ஆரோனின் குமாரர்கள் -தேவனுடைய அக்கினியைக் கையாண்டனர். (அதையெல்லாம் படித்து, பகலுக்குள் வெளியே செல்ல நமக்கு நேரமில்லை. நமக்கு இன்னும் இருபது நிமிடங்கள் உள்ளன). ஆரோனின் குமாரர் தேவனுடைய அக்கினியைக் கையாண்டனர். எனவே அவர்கள் வேறொரு மனிதனால் தொடப்பட்ட ஒரு ஸ்திரீயை விவாகம் செய்யக் கூடாது. மாறாத தேவன் அவ்வாறு கூறியுள்ளார். அவர்கள் வேறொரு மனிதன் தொட்ட ஸ்திரீயை விவாகம் செய்யக் கூடாது என்னும்போது, ஜீவனுள்ள தேவனுடைய சபையானது தூய்மையான கலப்படமற்ற தேவனுடைய வார்த்தையாகும். மனிதரால் கையாளப்பட்ட ஸ்தாபனங்களாக இருக்காது என்பதற்கு அது எடுத்துக்காட்டாயிருக்கிறது. 76இதை இங்கு படிக்கலாம். இதை உங்களிடம் கொண்டு வர விரும்புகிறேன். மத்தேயு 5ம் அதிகாரம். மிகவும் முக்கியமான ஒன்றைக் குறித்து இயேசு இங்கு கூறுகின்றார். அதை நாம் காண்போம். மத்தேயு 5ம்அதிகாரம். நான் மனிதர்களிடம் கூறுவதற்கென சிலவற்றை இங்கு குறித்து வைத்தேன். நம்முடைய சகோதரிகளிடம் பேசுவதற்கு முன்பு சிறிது நேரமாக மனிதர்களிடம் பேசினேன். அதற்கு முன்பு இதை ...சகோதரிகளே, தேவனுடைய வார்த்தை உங்களுக்கு வாக்களித்துள்ள இடத்தில் உங்களைப் பொருத்த விரும்புகிறேன். அப்பொழுது பாருங்கள் - அந்த இடத்தில் நிலைத்திருங்கள். மத்தேயு 5:32 ஒரு ஆண், அநேக பெண்கள் என்னும் அதே கருத்தை இது ஆதரிப்பதை நீங்கள் கவனிக்க விரும்புகிறேன். அது மத்தேயு 5:32 என்று நினைக்கிறேன் -31லிருந்து தொடங்குவோம். தன் மனைவியைத் தள்ளிவிடுகிற எவனும், தள்ளுதற்சீட்டை அவளுக்குக் கொடுக்கக்கடவன் என்று உரைக்கப்பட்டது. இயேசு இதைக் குறித்து பேசுகையில், ''ஆதிமுதலாய் என்றார். இப்பொழுது கவனியுங்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; வேசித்தன முகாந்தரத்தினாலொழிய தன் மனைவியைத் தள்ளிவிடுகிறவன், அவளை விபசாரஞ்செய்யப் பண்ணுகிறவனாயிருப்பான்... (பாருங்கள்)... வேசித்தன முகாந்தரத்தினாலொழிய தன் மனைவியைத் தள்ளி விடுகிறவன். அவளை விபசாரஞ் செய்யப்பண்ணுகிறவனாயிருப்பான்... (ஏன்? அவள் மறுபடியும் விவாகம் செய்து கொள்வாள்)... அப்படித் தள்ளிவிடப்பட்டவளை விவாகம் பண்ணுகிறவனும் விபசாரஞ் செய்கிறவனாயிருப்பான். மத். 5: 31-32 77பாருங்கள், உயிரோடுள்ள கணவன் அவளுக்கு இருக்கிறான். எனவே எந்த மனிதனும் அவளை விவாகம் செய்யக் கூடாது. அவள் என்ன செய்தாலும், அவள் யாராயிருந்தாலும் கவலையில்லை. அப்படி செய்ய அவளுக்கு எந்த ஆதாரமும் கிடையவே கிடையாது. ஆனால் அது மனிதனுக்கல்ல: ஏனெனில் அது அவள், அவன் அல்ல, புரிந்து கொண்டீர்களா? நீங்கள் வார்த்தை தொடர்ச்சியாக செல்லும்படி வைக்கவேண்டும். பாருங்கள்? அவன் செய்யக்கூடாது என்று எதுவும் சொல்லவில்லை. ஆனால் அவள் செய்யக் கூடாது. பாருங்கள்? அவளை விபச்சாரம் செய்யப் பண்ணுகிறது. அவனை அல்ல. அப்படித்தான் வேதம் கூறுகிறது “அவளை விபசாரஞ் செய்யப்பண்ணுகிறது...'' அவன் மறுவிவாகம் செய்யக் கூடாதென்று எங்கும் சொல்லப்படவில்லை, ஆனால் அவள் மறுவிவாகம் செய்து கொள்ளக் கூடாது. ஏன்? அது கிறிஸ்துவுக்கு எடுத்துக்காட்டாயுள்ளது. கவனியுங்கள், அவன் கன்னிகையைத் தவிர வேறு யாரையும் மறுவிவாகம் செய்து கொள்ளக்கூடாது. அவன் மறுபடியுமாக மறுவிவாகம் செய்து கொள்ளலாம் - அவள் கன்னிகையாயிருந்தால். ஆனால் அவன் வேறொருவனுடைய மனைவியை விவாகம் செய்து கொள்ளக் கூடாது. கூடவே கூடாது. அவன் விவாகரத்து செய்யப்பட்ட ஸ்திரீயை மணம் புரிந்து கொண்டால் அவன் விபச்சாரத்தில் வாழ்கிறவனாயிருப்பான். அவன் யாராயிருந்தாலும் எனக்குக் கவலையில்லை. ''அப்படித் தள்ளிவிடப்பட்டவளை விவாகம் பண்ணுகிறவன் விபசாரஞ் செய்கிறவனாயிருப்பான்“ என்று வேதம் கூறுகிறது. பார்த்தீர்களா? விவாகரத்து செய்யப்பட்ட எவளையும். தொடக்கத்திலிருந்து வருகின்ற இந்த செயலைப் பார்த்தீர்களா? மறுவிவாகம்- இப்பொழுது கவனியுங்கள். அவன் செய்து கொள்ளலாம், ஆனால் அவள் செய்து கொள்ளக்கூடாது. தாவீது, சாலொமோன் ஆகியோர் செய்தது போன்று. வேதாகமத்தில் இது தொடர்ந்து வருகிறது. தாவீதும் மற்றவர்களையும் போன்று . 78நீங்கள் 1 கொரிந்தியர் 7:10 ஐப் பாருங்கள். அதில் பவுல், கணவனைத் தள்ளிவிடுகிற எந்த ஸ்திரீயும் மறுபடியும் விவாகம் செய்து கொள்ளக் கூடாதென்றும், அவள் தனித்திருக்க வேண்டும், இல்லையென்றால் கணவனோடு ஒப்புரவாக வேண்டுமென்றும் கட்டளையிடுகிறான். அவள் மறுபடியும் விவாகம் செய்து கொள்ளக்கூடாது. அவள் தனித்திருக்க வேண்டும். ஆனால் கவனியுங்கள், மனிதனைக் குறித்து அவன் அவ்வாறு கூறவில்லை. பாருங்கள், வார்த்தை பொய்யுரைக்க நீங்கள் செய்ய முடியாது. ஆதிமுதல், இனசேர்க்கை பிரமாணம் பல பெண்களை விவாகம் செய்து கொள்ளுதல். தேவனுடைய வார்த்தை தேவனுடைய இயற்கையுடன் இணைந்து காணப்படுகின்றது. இதைக் குறித்து கருத்து கொண்டவர்களில், ஒரு சாரார் கிழக்கே செல்வதையும், மற்ற சாரார் மேற்கே சொல்வதையும் பாருங்கள். அது என்னவென்று கண்டு கொள்ள நீங்கள் சத்தியத்துக்கு திரும்பி வரவேண்டும். அது எப்பொழுதும் அவ்விதமாகவே இருந்து வருகிறது. ஆதிமுதற் கொண்டு அது தேவனுடன் செய்யப்பட்டுள்ள வழக்கமான உடன்படிக்கையாயுள்ளது. முதலாவதாக, தொடக்கத்திற்கு முன்பு, தொடக்கத்தில், ஒரு ஆணும் ஒரு பெண்ணும். ஆனால் பாவம் பிரவேசித்த பிறகு. ஒரு மனிதனும், ஒரு கூட்டம் ஸ்திரீகளும். இயற்கையில் அவ்விதமாகவே காணப்படுகின்றது - ஒவ்வொரு மிருகத்திலும்; மானிட வர்க்கமானது மாம்சத்தில் மிருகமே. நாம் குட்டி போட்டு பாலூட்டும் மிருக வம்சத்தை (mammals) சேர்ந்தவர்கள். அது நமக்குத் தெரியும். பாருங்கள்? தேவனுடைய இயற்கையில் அது தொடர்ச்சியாக வருகிறது. 79முத்திரைகள் இப்பொழுது திறக்கப்பட்டுவிட்டதால், சத்திய ஆவியானவர் நம்மை வார்த்தைக்கு நடத்துகிறார். காலங்கள் தோறும் தவறுகள் ஏன் இருந்து வந்தன என்பதை இது விவரிக்கின்றது. ஏனெனில் முத்திரைகள் திறக்கப்படாத காரணத்தால்தான் இது வெளிப்படுத்தப்படவில்லை. அது உண்மை . கவனியுங்கள், நீங்கள் நிழல்கள் தவறாயிருக்கச் செய்ய முடியாது (நேற்றிரவு நான் தரையில் காணும் நிழலைக் குறித்து உங்களுக்குப் பிரசங்கித்தேன்.) அது சரியாயிருக்க வேண்டும். ஒரு மெலிந்த மனிதனின் நிழல் யானையாகவோ, அல்லது யானையின் நிழல் மெலிந்த மனிதனாகவோ எப்படி இருக்க முடியும்? நீங்கள் கவனிப்பீர்களானால், அது பிழையற்ற எடுத்துக் காட்டாய் அமைந்துள்ளது. இப்பொழுது, ஒரு உண்மையுள்ள ஸ்திரீ. ஒரு புருஷன் மணந்து கொண்டு அவனுடன் வாழ்க்கை நடத்தும் ஒரு உண்மையுள்ள ஸ்திரீ, கன்னிப் பெண் ஒருத்தி மனிதனுக்கு ஆசீர்வாதமுள்ளவளாய் இருக்கிறாள். தேவன் தம் மகனுக்கு மனைவியைக் காட்டிலும் மேலான ஒன்றை தந்திருக்க முடிந்தால், அவர் அவனுக்கு தந்திருப்பார். இனச்சேர்க்கை செயலுக்காக அவள் உருவமைக்கப்பட்டிருக்கிறாள். எந்த ஒரு மிருகமும் அவ்விதமாக உருவமைக்கப்பட்டிருக்கவில்லை; பூமியில் உள்ள எந்த ஒரு சிருஷ்டியும் அவ்விதமாக உருவமைக்கப்பட்டிருக்கவில்லை, அதன் காரணமாகத்தான் நீங்கள் பல பெண்களை விவாகம் செய்து கொள்ளுதலைக் காண்கிறீர்கள். அதுதான் அதை கொண்டுவந்தது. 80இப்பொழுது, பாருங்கள், முடிவில் ஆராய்ந்து பார்க்கும் போது, ஒரு இயேசுகிறிஸ்து இருக்கிறார். அது சரியா? ஒரு மனிதர். இம்மானுவேலாகிய தேவன். அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? ஆனால் அவருடைய மனைவி, அநேக அங்கத்தினர்கள் கொண்டவள்- பல்லாயிரம், பல்லாயிரக்கணக்கானோர். அது சரியா? அவருடைய மனைவி, மணவாட்டி, சபை. இப்பொழுது உங்களுக்கு விளங்குகிறதா? அதன் காரணமாகத்தான், இனச்சேர்க்கை என்பது அளிக்கப்படுவதற்கு முன்பே, அவர் ஆதாமிடம் “நீங்கள் பலுகிப் பெருகி பூமியை நிரப்புங்கள்'' என்றார். ஆதியில் அவனே ஆணும் பெண்ணுமாக இருந்த போது, மணவாட்டி வார்த்தையின் மூலம், ஆவிக்குரிய பலுகிப் பெருகுதலினால் வரவேண்டும் என்பதை அது காண்பிக்கிறது. பாருங்கள்? பூமியை நிரப்புதல். 81இப்பொழுது இந்த இனச்சேர்க்கை செயலில்... பாருங்கள். இரு விதமான கருத்துக்களைக் கொண்டவர்களாய் அவர்கள் குழப்பமுற்றுள்ளார்கள். எனவே உண்மை அவர்களுக்கு புலப்படவில்லை. நீங்கள் தொடக்கத்திற்குச் சென்று, அவர்களை சத்தியத்துக்கு கொண்டு வரவேண்டும். முடிவில் ஒரு கர்த்தராகிய இயேசு, அவருடைய மணவாட்டி அநேகர், ஒருமை விளங்குகிறதா? சிங்காசனத்தில் ஒரு தாவீது - (தேவனுடைய இருதயத்துக்கேற்ற ராஜா) - அவனுக்கு ஐந்நூறு மனைவிகள் ஆயிரம் வருட அரசாட்சியில் இயேசு சிங்காசனத்தில் வீற்றிருந்து (அல்லேலூயா!) அவருக்கு தொடக்கத்தில் இருந்தது போன்ற ஒரு மனைவி; சர்வவல்லமையுள்ள தேவனுடைய கரங்களினால் உயிர்த்தெழுதலில் பூமியிலிருந்து சிருஷ்டிக்கப்பட்டு, அநேக அங்கத்தினர்களைக் கொண்டவளாயிருக்கிறாள். பார்த்தீர்களா? ஸ்திரீகளே, அவ்வாறிருக்க பிரயாசப்படுங்கள், கிறிஸ்துவுக்குள் வாருங்கள், அப்பொழுது நீங்கள் அங்கு காணப்படும் அசுத்தமான குழப்பத்திற்குள் இருக்கமாட்டீர்கள். நீங்கள் ஸ்தாபன சபை அங்கத்தினராக இருந்து கொண்டு, நன்னடைத்தையுள்ளவர்களாக வாழத் தலைப்பட்டால், நீங்கள் அதில் செல்ல முடியாது. கிறிஸ்துவுக்கு புறம்பாயுள்ள எந்த மனிதனும் கூட அதில் செல்ல முடியாது. “கிறிஸ்துவுக்குள் ஆணென்றும் பெண்ணென்றும் இல்லை'' என்று பவுல் கூறுகிறான்; அவர்களெல்லாரும் ஒன்று தான். 82எது சரி, எது தவறென்று நீங்கள் அறிந்து கொள்வதற்காக விவாகமும், விவாகரத்தும் என்னும் விஷயத்தை உங்களுக்கு விளக்கிக் காண்பித்தேன். இப்பொழுது, இந்த முன்னடையாளங்களின் மூலம், ஒரே கிறிஸ்து இருக்கிறார் என்றும், அவருக்கு அநேக அங்கத்தினர்கள் கொண்ட மனைவி இருக்கிறாள் என்றும் அவர் வெளிப்படையாய்க் காண்பிக்கிறார். கவனியுங்கள், ஆவிக்குரிய விபச்சாரம், கள்ளஉபதேசம் ஆகியவைகளின் நிமித்தம் அவர் எந்த நேரத்திலும் நம்மை தள்ளிவிடலாம், ஆனால் நீங்கள் அவரைத் தள்ளிவிட்டு, அதில் செல்ல முயல்வதற்கு உங்களுக்கு என்ன துணிச்சல்? ஒரு மனிதன் தன் மனைவியைத் தள்ளிவிட்டு வேறொருத்தியை விவாகம் செய்து கொள்ளலாம். ஆனால் ஒரு ஸ்திரீ தன் புருஷனை தள்ளிவிட்டு, வேறொருவனை விவாகம் செய்து கொள்ளக் கூடாது. எல்லா நிழல்களும் முன்னடையாளங்களும் பிழையின்றி பொருந்துவதைக் கண்டீர்களா? மூல சிருஷ்டிப்பு, உப சிருஷ்டி எங்கேயும் இல்லை; சபை அல்ல, வார்த்தையின் மூலம் தோன்றிய மணவாட்டி; ஸ்திரீ அல்ல, மனிதனே; ஒவ்வொரு முறையும், அது.... மனிதன் அவ்வாறு செய்யக் கூடாதென்று அது ஒருபோதும் கூறவில்லை; அது எப்பொழுதுமே ஸ்திரீ அவ்வாறு செய்யக் கூடாதென்று கூறுகிறது. அது முற்றிலும் உண்மை. ஆனால் அவள் கிறிஸ்துவின் மணவாட்டியாக... ஞாபகம் கொள்ளுங்கள், அவர் மனிதனின் ஒரு பாகமாக இருப்பதால், வேதாகமம்... 'உபதேசம் பண்ணவும், புருஷன் மேல் அதிகாரஞ் செலுத்தவும் ஸ்திரீயானவளுக்கு நான் உத்தரவு கொடுக்கிறதில்லை; அவள் அமைதலாயிருக்க வேண்டும். என்னத்தினாலெனில், முதலாவது ஆதாம் உருவாக்கப்பட்டான், பின்பு ஏவாள் உருவாக்கப்பட்டாள். மேலும், ஆதாம் வஞ்சிக்கப்படவில்லை, உபசிருஷ்டியான ஸ்திரீயானவளே வஞ்சிக்கப்பட்டு மீறுதலுக்கு உட்பட்டாள். அப்படியிருந்தும், தெளிந்த புத்தியோடு விசுவாசத்திலும் அன்பிலும் பரிசுத்தத்திலும் நிலைகொண்டிருந்தால் பிள்ளைப் பேற்றினாலே இரட்சிக்கப்படுவாள்'', ஏனெனில் அவள் அப்பொழுது இந்த மனிதனின் ஒரு பாகமாகி விடுகிறாள் அதுதான்.... 83ஏன் ஆபிரகாம்.... தேவன் ஒரு மானிட மனிதனாக உட்கார்ந்து கொண்டு, மாமிசமும் அப்பமும் புசித்து, பாலைக் குடித்த வேளையில், தேவனுடைய சமுகத்தில் மறுதலித்து மற்றும் பொய் சொன்ன சாராளை தேவன் ஏன் கொன்று போடவில்லை? அவர், ''அங்கே பின்புறத்தில் இருக்கின்ற சாராள் ஏன் நகைத்தாள்'', என்றார், அங்கே அவருக்கு பின்புறத்தில் கூடாரத்தில், அவர் அவளை பார்க்கவில்லை, “இது எப்படியாகும் என்று சொல்வானேன்” என்று கூறுகிறாள் என்றார். சாராள், ''நான் அப்படி சொல்லவில்லை'' என்று மறுத்தாள். ஓ! ஊ, என்னே! தேவனுடைய முகத்தை நோக்கி அவர் பொய்யர் என்று கூறுவதா? ஆனால் அவர் அவளைக் கொன்று போடவில்லை. ஏன்? அவள் ஆபிரகாமின் ஒரு பாகமாயிருந்தாள். ஆமென். அவர் ஆபிரகாமுக்கு வேதனையை உண்டாக்காமல் அவளைக் கொன்று போட முடியாது. ஸ்திரீகளே, உங்கள் இடம் எதுவென்று காண்கிறீர்களா? வேதாகமம், “ஸ்திரீகளே, நீங்கள் சாராளைப் போல் இருங்கள்? அவள் சாதாராண வஸ்திரங்களை உடுத்திக்கொண்டு, தன் புருஷனுக்கு உண்மையும் உத்தமமுமாக வாழ்ந்தாள். அவள் அவனை மிகவுமாக நேசித்து அவனை ஆண்டவன் - சொந்தக்காரன் - என்று அழைத்தாள்'' என்கிறது. 84ஸ்திரீகளாகிய உங்களில் சிலர் மோசமான ஆடைகளை அணிந்து, மனிதருக்கு முன்பாக உங்களை காண்பிக்கின்றீர்கள். ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ் செய்தாயிற்று'' என்று இயேசு கூறினார். அப்படியானால் யார் குற்றவாளி? மனிதனா அல்லது நீயா? அவன் ஒரு ஆண், இந்த செயலைப் புரிய அவன் உண்டாக்கப்பட்டிருக்கிறான். பாருங்கள்? அதை மறுக்க வேண்டியது பெண்ணாகிய நீயே.... நீ ஏன் உன்னை அந்த விதமாக வெளியே காண்பிக்கிறாய் - அது செளகரியத்திற்காக அல்ல. அதற்காக அல்ல என்பதை நீ அறிவாய். ஏனெனில் அந்த குட்டைக்கால் சட்டையை நீ அணிந்து, குளிரில் பாதி உறைந்து விடுகிறாய். எனவே அது செளகரியத்திற்காக இருக்க முடியாது. அப்படியானால் அது எதற்காக? அசுத்தத்திற்காக. அதை நீ ஒப்புக் கொள்ளமாட்டாய். ஆனால் அது - வேதம் அவ்வாறு கூறுகின்றது. அதுதான் சத்தியம் அது உனக்குள் இருக்கும் அசுத்த ஆவி. நீ அசுத்தமாயிருக்க நினைக்கவில்லை. ஆனால் நீ ஆவிக்குரிய விதமாய் அசுத்தமாயிருக்கிறாய் என்பதை உணருவதில்லை. ஏனெனில் நீ உன்னை அசுத்தமுள்ளவளாய் காண்பிக்கிறாய். ஒரு மனிதன், முடிச்சுகளுடைய தன் அழுக்கான முழங்கால்களுடன், ஆடைகளே அணியாமல் இருந்தாலும், அதனால் ஒரு வித்தியாசமும் இருக்காது; அவனுடைய உடலமைப்பு கவர்ச்சியாக ஆசையைத் தூண்டுவதாக இல்லை. ஏன்? அவன் மூல சிருஷ்டிப்பில் தோன்றின் ஒருவன். எனவே அது அப்படித்தான் இருக்க வேண்டும். ஆனால் கவர்ச்சியான ஆசையைத் தூண்டுவதாக உடலமைப்பைப் பெற்றிருப்பவள் உபசிருஷ்டியாகிய நீயே. தேவன் இரக்கம் பாராட்டுவாராக! ஓ, என்னே பாவம் நிறைந்த இவ்வுலகம்! அது முடியும் போது, நான் மகிழ்ச்சி கொள்வேன். 85கவனியுங்கள், அவனுக்கு விருப்பமான எந்த நேரத்திலும் அவன் தன் மனைவியைத் தள்ளிவிடலாம். ஆனால் அவள் அவனைத் தள்ளி விடக்கூடாது. அது போன்று அவருக்கு விருப்பமான போது அவர் என்னை குப்பையில் எறிந்துவிடலாம். ஆனால், ஓ, சகோதரனே, நான் அவரை அங்கு எறியாமலிருப்பது நலம்; அத்துடன் நான் முடிந்துவிடுவேன். சாலொமோன் விவாகமாகாத எந்த பெண்ணையும் விவாகம் செய்து கொள்ளலாம். அவனுக்கு விருப்பமுள்ள எந்த பெண்ணையும் அவன் விவாகம் செய்து கொள்ளலாம். ஒரு ஆசாரியன் கன்னிப் பெண்ணை மாத்திரமே விவாகம் செய்து கொள்ள வேண்டும். தாவீது போல, அவன் விவாகம் செய்த (அவளுடைய பெயர் என்ன? ஆபிகாயில், முரடனான ஒரு மனிதன் இருந்தான். அவனுக்கு ஒரு நல்ல மனைவி இருந்தாள். அவன் மரித்துப் போனான். அபிகாயில் தாவீதை மணந்தாள். அவன் ஒரு ராஜா. ஆசாரியன் அல்ல. பாருங்கள்? என்வே அவன் அவளை விவாகம் செய்து கொள்ளலாம். ஆனால் ஒரு ஆசாரியன் அவ்வாறு செய்யலாகாது. ஏனெனில் அவள் ஏற்கனவே ஒரு மனிதனின் மனைவியாக வாழ்ந்து அவனால் தொடப்பட்டவள். எனவே அது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சபையின் கன்னித்தன்மைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. மணவாட்டி கலப்படமற்ற வார்த்தையாகத் திகழவேண்டும். ஒரு மார்பகம் இல்லாமல், வேறெங்காகிலும் கோளாறு கொண்ட ஒரு மணமகள் பரிபூரணமுள்ளவளாய் எப்படி இருக்க முடியும்? பார்த்தீர்களா? அப்படிப்பட்டவள் கிறிஸ்துவின் மணவாட்டியாக இருக்கப் போவதில்லை. அவள் பரிபூரணமானவள். அவள் வார்த்தையின் சகலமுமாக இருக்கிறாள். ஒரு வார்த்தையும் கூடஎங்கும் தவறாமல் இல்லை. 86கவனியுங்கள், அவர் அவளைத் தள்ளிவிடலாம். ஆனால் அவளோ அவரைத் தள்ளிவிடக் கூடாது. அவர் லூத்தர், வெஸ்லி, பெந்தெகொஸ்தேயினர் நாட்களில் அதை செய்து, அதை நிரூபித்தார். அவருடன் ஆவிக்குரிய இனச்சேர்க்கை கொண்டு, முன்னேறிச் சென்ற வார்த்தையின் பாகத்தினால் கர்ப்பமாக்கப்படவும், அவருடன் எந்த உறவு கொள்ளவும் அவர்கள் மறுத்த போது, அவர்களை அவர் தள்ளிவிட்டார். உங்களுக்கு விளங்குகிறதா? அவள் மறுத்தாள். கிறிஸ்து அவளுடன் இனிமேலும் விருப்பங்கொள்ள லூத்தரன் சபை மறுத்துவிட்டது. லூத்தரன்கள் மறுத்துவிட்டனர். இதை நான் கூற விரும்புகிறேன். (நீங்கள் எப்படியும் என்னை ஏதோ ஒரு பெயரினால் அழைக்கப் போகின்றீர்கள்.) இன்றைக்கும் அவர்கள் ஒவ்வொருவரும் அவ்வாறேயுள்ளனர். அவர்கள் அந்த வார்த்தையை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர். அவர்கள் கிறிஸ்துவை மறுக்கின்றனர். ஒரு மனிதனுக்கு அவனுக்குரிய குழந்தையை பெற்றெடுக்க மறுக்கும் எந்த ஒரு பெண்ணும் அவனுடைய மனைவியாயிருக்க உரிமையில்லை. ஆமென்! உங்களுக்கு நினைவிருக்கிறதா? ராஜாவை மணந்திருந்த ராணி ராஜாவுக்கு மறுப்பு தெரிவித்ததால், ராஜா வேறொருத்தியை - எஸ்தரை - மணந்து கொண்டான்... ராணி ராஜாவுக்கு முன்பாக வர மறுத்து, அவனுடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிய மறுத்தபோது என்ன நேர்ந்தது? தன் கணவனுக்கு மனைவியாயிருக்க மறுக்கும் எந்த ஸ்திரீக்கும் அது தான் நேரிடும். 87நாம் வாழும் இந்த காலத்தில் கர்ப்பமாக்கப்பட்டு இக்காலத்து பிள்ளைகளைத் தோன்றச் செய்ய மறுக்கும் சபைக்கும் அதுதான் நேரிடும். நாம் லூத்தரன்கள் அல்ல, வெஸ்லியன்கள் அல்ல, நாம் பெந்தெகொஸ்தேயினரும் அல்ல. நாம் இக்காலத்து தேவனுடைய பிள்ளைகளாக தேவனுடைய வார்த்தையினால் கர்ப்பமாக்கப்பட்டு, இக்காலத்து பிள்ளையாகிய வித்து பிள்ளையை தோன்றச் செய்கின்றவர்களாய் இருக்கவேண்டும். ஆமென். உங்களுக்கு விளங்குகிறது என்று நம்புகிறேன். அவளை கர்ப்பமாக்க முடியவில்லை. எனவே அவர் என்ன செய்தார்? தள்ளுதற் சீட்டை எழுதி அவளைத் தள்ளிவிட்டார். அது உண்மை. ஆனால் அவள் அவரைத் தள்ளிவிட துணிச்சல் கொள்ளக் கூடாது. அவர் அவளைத் தள்ளிவிட்டார். அவர் சரீரத்துக்கு தமது வார்த்தையை தொடர்ந்து வெளிப்படுத்தித் தந்து. அவரே அதை கூறி தம்மை உறுதிப்படுத்திக் கொண்டு வந்ததன் விளைவாக அவருடைய பிள்ளைகள் அவரைப் போலவே அதிகமதிகமாய் காணத் தலைப்பட்டனர். ஏனெனில் அது முழுவதுமாக முதிர்வடைந்து, அவர்கள் வார்த்தையின் பிள்ளைகளாக ஆகின்றனர் - ஸ்தாபன சபையின் பிள்ளைகள் அல்ல, வார்த்தையின் பிள்ளைகள். மணவாட்டி வார்த்தையின் அழகுள்ள சீமாட்டியாக, கலப்படமற்றவளாய், மனிதனால் உண்டாக்கப்பட்ட எந்த ஸ்தாபனங்களாலும், எந்த மனித தத்துவத்தினாலும் தொடப்படாதவளாய் இருப்பாள். அவள் தூய்மையுள்ள, கலப்படமற்ற வார்த்தையின் மணவாட்டியாகத் திகழ்வாள். ஆமென். தொலைபேசியில் இணைக்கப்பட்டுள்ள உங்களுக்கும் விளங்குகிறது என்று நம்புகிறேன். அவள் கர்ப்பமாக்கப்பட்ட தேவனுடைய குமாரத்தியாயிருப்பாள்! 88ஒரு ஸ்திரீ எவ்வளவு கனமுள்ளவளாய் இருக்க முடியுமென்று பாருங்கள் சபையானது எவ்வளவு பெரிதாக இருக்க முடியுமென்று பாருங்கள். ஆனால் அசுத்தம் அவளை எங்கு கொண்டு சென்றுவிட்டதென்று பார்த்தீர்களா? அப்படியிருக்க புறம்பேயுள்ள மற்ற ஸ்தாபன சபைகளுடன், இங்குள்ள இந்த சபையை ஒப்பிட முயல்கின்றீர்கள். நீங்கள் செய்ய முடியாது. தெருவிலுள்ள வேசியை ஜீவனுள்ள தேவனுடைய சபையுடன் ஒப்பிட முயல்கின்றீர்கள்; அல்லது நற்பண்பு கொண்ட பெண்மணியுடன் ஒரு வேசியை. அது ஏன் அப்படி இருக்கிறது - அது தேவனுடைய பிரமாணம், முரண்பாடுகளின் பிரமாணம் (Law of contrasts). இரவு என்று ஒன்று இராமல் போனால், பகல் வெளிச்சத்தின் அருமையை நாம் எப்படி அறிந்து கொள்ள முடியும்? மழை என்று ஒன்று இராமல் போனால், உலர்ந்த வான நிலையை நாம் எப்படி அனுபவிக்க முடியும்? அது போன்று, அசுத்தமான ஸ்திரீ இராமல் போனால் நற்பண்பு கொண்ட ஸ்திரீயை நாம் எப்படி மதிக்க முடியும்? 89அவர் தம்முடைய வார்த்தையை வெளிப்படுத்திக் கொண்டே சென்றார். அவர் வெளிப்படுத்தின விதத்தை கண்ட பிறகும். அவரைத் தள்ளி விட்டு வேறாருவனை மணக்க துணிச்சல் கொள்ளாதிருப்பீர்களாக. விவாகமும் விவாகரத்தும் என்னும் விஷயத்தில் கொண்டுள்ள இரு கருத்துகளுமே தவறு என்று வெளிப்படையாகின்றது. இந்த வழியில் அதை கருதினால், அது தவறாகிவிடுகின்றது. நீங்கள் மற்ற வழியில் அதை கருதினால், அது வாக்குத்தத்த்தை கடந்து சென்று விடுகின்றது. இதோ அந்த வாக்குத்தத்தம். இதோ அது இங்குள்ளது. வார்த்தை ஒன்றுக்கொன்று முரணாயிருக்காது. அது தொடர்ச்சியாக இருக்கவேண்டும். மத்தேயு 28:19 எவ்வாறு அப் 2:38 க்கு முரணாக அடையாமல் இருக்கிறதோ அவ்வாறு. ஸ்திரீகளாகிய உங்களில் சிலர், மனிதர்களாகிய உங்களில் சிலர் அதை ஆமோதிக்கவில்லையென்று நான் அறிகிறேன். அதை இப்பொழுது உங்களால் மறைக்க முடியாது. உங்களால் முடியவே முடியாது. இதை உங்களுக்கு காண்பிக்க விரும்புகிறேன். ''நீங்கள் உலகமெங்கும் போய், சகல ஜாதிகளுக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுங்கள்'', என்று மத்தேயு 28:19 கூறியிருக்க, வேதாகமம் காலத்திலும் அதற்கு பிறகும் முன்னூறு ஆண்டுகளாக நிசாயா ஆலோசனை சங்கம் வரைக்கும் ஞானஸ்நானம் ஒவ்வொரு நபரும் அதற்கு முரணாக இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றார்கள். அதன் பிறகு அவர்கள் கோட்பாட்டைக் கைக்கொள்ள ஆரம்பித்தனர். அதனால் என்ன வித்தியாசம்? அது வெளிப்படாமல் இருந்திருக்குமானால்... 90வேதாகமம் முழுவதுமே வெளிப்பாட்டை அடிப்படையாகக் கொண்டுள்ளதென்று உங்களுக்குத் தெரியுமா? அப்படித் தான் இந்த ஒன்றுக்கும் அந்த ஒன்றுக்கும் இடையேயுள்ள சத்தியத்தை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும், ஏனெனில் அது வெளிப்பாடு. எந்த ஒரு வெளிப்பாடும் வார்த்தையுடன் பொருந்த வேண்டும், அது வார்த்தைக்கு முரணாயிருக்கக் கூடாது. நீங்கள், ''அது எனக்குக் கிடைத்த வெளிப்பாடு எனலாம். அது வார்த்தைக்கு முரணாயிருக்குமானால், அது தேவனிடத்திலிருந்து கிடைக்கப் பெற்ற வெளிப்பாடு அல்ல. அது உண்மை. நீங்கள் மத்தேயு 16:18ஐ எடுத்துக் கொள்வீர்களானால், அவருடைய சபை முழு சபையும், வார்த்தையாகிய, தம்மைக் குறித்த ஆவிக்குரிய வெளிப்பாட்டின் மேல் கட்டப்படும் - அதாவது வார்த்தையின் மேல் - என்று இயேசு தாமே கூறியுள்ளதைக் காணலாம். “மேலும் நான் உனக்குச் சொல்லுகிறேன். நீ பேதுருவாய் இருக்கிறாய், மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார். இந்தக் கல்லின் மேல்..” அங்குள்ள என் கத்தோலிக்க நண்பர்கள் அது பேதுருவின் மேல் கட்டப்பட்டது என்று கூறுகின்றனர் என்று நானறிவேன். பேதுரு அப்போஸ்தலன் இன்னார் இன்னார் என்றும். அது அப்போஸ்தலர் பரம்பரையாயுள்ளதென்றும் அவர்கள் கூறுகின்றனர். அது இயேசு கிறிஸ்துவின் மேல் கட்டப்பட்டுள்ளதாக பிராடெஸ்டெண்டுகள் கூறுகின்றனர். நான் வித்தியாசமான கருத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்பதற்காக அல்ல, அவர் சொன்னதை நான் அப்படியே எடுத்துக் கொள்கிறேன். அவர், ''மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை. பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார். இந்தக் கல்லின் மேல் (வார்த்தை எதுவென்னும் ஆவிக்குரிய வெளிப்பாட்டின் மேல்) என் சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாசல்கள் அதை அசைக்கவே முடியாது'' என்றார். அவருடைய மனைவியை வேறெந்த மனிதனும் கவர முடியாது. “என் சபையைக் கட்டுவேன், பாதாளத்தின் வாசல்கள் அதை அசைக்கவே முடியாது.'' 91ஏதேன் தோட்டத்திலிருந்த காயீன் ஆபேல் இருவர்களில் காயீன் தன் சொந்த கருத்தைக் கொண்டிருந்தான். அவன். “தேவன் நல்ல தேவன். அவர் இயற்கையின் மேல் ஆதிக்கம் கொண்டுள்ளவர். எனவே அவருக்கு பீன்ஸ்களையும், உருளைக் கிழங்குகளையும், பூக்களையும் கொண்டு அழகான ஒரு பலிபீடம் (அதாவது ஒரு சபை) கட்டுவேன்” என்று எண்ணினான். அவன் முழங்கால்படியிட்டான். அவன் தேவனை விசுவாசித்தான்; அவன் கரங்களையுயர்த்தி தேவனைத் தொழுதுகொண்டு, இந்த பலியை செலுத்தினான். அவன் ஆபேல் செய்த பக்தியுள்ள ஒவ்வொன்றையும் செய்தான். ஆபேல் அதே விதமான பலிபீடத்தைக் கட்டினான். ஆனால் அவன் ஒரு ஆட்டுக்குட்டியை பலி செலுத்துவதற்காக கொண்டு வந்தான். பாவத்துக்குப் பரிகாரமாக அவன் பெற்றோர், ஏதேன் தோட்டத்தில் அவர்கள் போதிக்கப்பட்டபடி, கனியைப் புசித்திருக்க வேண்டுமென்று காயீன் எண்ணினான். ஆனால் ஆபேல், தெய்வீக வெளிப்பாட்டின் மூலம், இரத்தமே அதற்கு காரணமாயிருந்தது என்று அறிந்து கொண்டான். தெய்வீக வெளிப்பாட்டின் மூலம்! வேதாகமம் எபிரெயர் 12ம் அதிகாரத்தில் - இல்லை, 11ம் அதிகாரத்தில் - “விசுவாசத்தினாலே ஆபேல் காயீனுடைய பலியிலும் மேன்மையான பலியைத் தேவனுக்குச் செலுத்தினான்; அதினாலே அவன் நீதிமானென்று தேவன் சாட்சி கொடுத்தார்'' என்றுரைக்கிறது. அது சரியா? (சபையார் ''ஆமென்” என்கின்றனர்- ஆசி) ஆமென்! சகோதரனே, சகோதரியே, அது மிகவும் வெளிப்படையாய் உள்ளது, முழுகாரியமும் அங்குள்ளது. 92விவாகமும் விவாகரத்தும் என்னும் விஷயத்தில், அது வெளிப்பட வேண்டும். அது வெளிப்படும் வரைக்கும் உங்களால் அறிந்து கொள்ள இயலாது. ஆனால் இந்த கடைசி நாட்களில் - இந்த காலத்தில் - வேதத்தில் மறைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு இரகசியமும் வெளிப்படுத்தப்படும் என்று அவர் வாக்கருளியுள்ளார். எத்தனை பேருக்கு அது தெரியும்? வெளிப்படுத்தல் 10ம் அதிகாரம். மறைபொருளாயுள்ள எல்லா இரகசியங்களும் - விவாகமும் விவாகரத்தும் போன்ற எல்லா இரகசியங்களும் - மறைக்கப்பட்டிருந்த இரகசியங்களும் கடைசிகாலத்தில் வெளிப்படுத்தப்படும் என்று இயேசு வாக்களித்துள்ளார். அந்த சத்தமானது “டூஸ்ஸானுக்கு (Tucson) செல்” என்று கூறினதை இப்பொழுது நீங்கள் நினைவில் கொள்ளுங்கள். வானத்தில் தோன்றின அந்த தெய்வீகத் திறன் வாயந்த ஒளியை; அங்கே நின்றிருந்த அந்த ஏழாம் தூதன்; திரும்பி வந்தது, மற்றும் ஏழு முத்திரைகள் திறக்கப்படுதல் உங்களுக்கு நினைவிலிருக்கிறதா? என்ன சம்பவித்தது என்பதை கவனியுங்கள். அது உண்மையாகும். இப்பொழுது, கேளுங்கள்! உங்களுக்கு உணவு உண்ண நேரமாகிவிட்டது என்றறிவேன். ஆனால் நான் நன்றாக உண்டு கொண்டிருக்கிறேன். (சபையார் ''ஆமென்“ என்கின்றனர் - ஆசி ) 93கவனியுங்கள், ஸ்திரீக்கு அவளுக்குரிய இடம் உண்டு. அவள் ஒரு இரத்தினம், பத்தாயிரம் மனைவிகளை - இல்லை, ஆயிரம் மனைவிகளைக் கொண்டிருந்த சாலொமோன், “மனைவியைக் கண்டடைகிறவன் நன்மையானதைக் கண்டடைகிறான்” என்று கூறியுள்ளான். குணசாலியான ஸ்திரீ அவனுடைய கிரீடத்தில் இரத்தினமாக விளங்குகிறாள் என்றான் அவன். அது கனமானது, ஆனால் அநீதியுள்ளவளோ அவன் இரத்தத்தில் தண்ணீராயிருக்கிறாள். அது அவன் வாழ்க்கை! அவன், “ஆயிரம் பேரில் ஒரு நீதிமானைக் காணலாம் (சாலொமோன் அவ்வாறு கூறினான்), ஆனால் ஆயிரம் ஸ்திரீகளில் நீதியுள்ள ஒருத்தியைக் காண முடியாது'' என்றான். சாலொமோன் அவ்வாறு கூறினான். இது எப்படியென்று கவனியுங்கள். ஸ்திரீயே, பார், நீ ஒரு இரத்தினம் - நீ இரத்தினமாயிருக்க விரும்பினால், ஆனால் அந்த விருப்பம் உன்னில் இருக்க வேண்டும். இயேசு குறிப்பிட்ட விவாகமும் விவாகரத்தும் எதற்காக என்று உன்னால் காணமுடிகிறதா? அது ஏனென்றால், உன் இனம் பாவம் அனைத்திற்கும் காரணமாயிருந்தது. அதன் காரணமாகத் தான் பல பெண்களை மனம் புரிந்து கொள்ளுதல், விவாகரத்து போன்றவை நுழைந்தன. ஆதியில் அது அப்படியிருக்கவில்லை, அப்பாலுள்ள அந்த உலகத்திலும் அது அப்படியிருக்காது. 94யாக்கோபைப் பாருங்கள். அவன் மூலம் கோத்திரப் பிதாக்கள் தோன்றினர். அவனுக்கு குறைந்தது பன்னிரண்டு மனைவிகள் இருந்தனர். அவன் இரு சகோதரிகளை மணந்தான். அவர்களைத் தவிர அவனுக்கு வைப்பாட்டிகள் இருந்தனர். (அவன் அந்த பெண்களுடன் வழக்கமான சட்டத்தின்படி வாழ்ந்தான்). இந்த கோத்திரப்பிதாக்கள் அந்த வைப்பாட்டிகளுக்குப் பிறந்தனர். அது சரியா? வார்த்தை வேறுபாடின்றி செல்லும்படி நீங்கள் செய்ய வேண்டும். ஓ, நான் இதைக் குறித்து அநேக பக்கங்கள் எழுதி வைத்திருக்கிறேன். குருவானவர் எவரும் இதன் பேரில் என்னைக் கேள்வி கேட்பாரானால், நாம் ஒன்று கூடி இதைப் பற்றி பேசலாம். ஆனால் அவர் ஆவிக்குரிய தன்மை எதையாகிலும் பெற்றிருப்பாரானால், இது உண்மையென்பதை கண்டுகொள்வார். அதைக் குறித்து எந்த கேள்வியும் இருக்காது. குணசாலியான ஸ்திரீ நன்மையானவள். அது எனக்குத் தெரியும். உண்மையான ஸ்திரீகளின் மூலம் அதை நானறிவேன். நான் உண்மையான, உத்தமமான ஸ்திரீகளை சந்தித்திருக்கிறேன். அவர்கள் இவ்வுலகில் உள்ள நல்ல மனிதனைப் போலவே மிகவும் நல்லவள். அவள் ஒரு உபபொருளாக, அவனுடைய ஒரு துண்டாக இருக்கிறாள். விழுந்து போதலில் அவன் அவளுக்குச் செவி கொடுத்தான். அவன் வெறும்... அவள் அவனுடைய ஒரு பாகம். ஆனால் அது அவளைப் பொறுத்தது. அவள் உண்டாக்கப்பட்டுள்ள உருவமைப்பில் அவள் அசுத்தமாயிருக்கலாம். அதை மறுக்கவோ அல்லது ஏற்றுக் கொள்ளவோ அவளுக்கு உரிமையுண்டு. ஆதியில் இருந்த மூல சுபாவத்திற்கு அது முரணாயிருந்தது. பாருங்கள்? ஆனால் அது தான். 95இப்பொழுது 12 மணியாகின்றது. இங்கு எழுதி வைத்துள்ள சிலவற்றை விட்டு விட்டு இன்னும் சில நிமிடங்கள் மாத்திரமே பேசுவேன். உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். இப்பொழுது, ஞாபகம் கொள்ளுங்கள், இதை என்னுடைய குழுவுக்கு மாத்திரம் கூறுகிறேன். தொலைபேசியில் இணைக்கப்பட்டவர்களுக்கு; இதை என்னை பின்பற்றுகிறவர்களுக்கு மாத்திரம் கூறுகிறேன். இந்த செய்தி அவர்களுக்கு மாத்திரமே. இங்கு நான் என்ன கூறப்போகிறேன் என்றால். எந்த ஒரு போதகரும் - அவர் அவருடைய மந்தையின் மேய்ப்பன்: அவர் என்னவேண்டுமானாலும் செய்யட்டும். அது அவருக்கும் தேவனுக்குமிடையேயுள்ள ஒன்று. எந்த குருவானவரும், எந்த போதகரும்; சகோதரனே, அது உம்மைப் பொறுத்தது. நான் ஜெபர்ஸன்வில்லில் தான் பேசிக்கொண்டிருக்கிறேன். இந்த ஓரிடத்தில் மாத்திரமே நான் இதை பேசுவேன். ஏனெனில் இது என் சொந்த மந்தை. என்னை இந்த மந்தையின் மேல் கண்காணியாக பரிசுத்த ஆவியானவர் நியமித்துள்ளதாக என்னிடம் கூறப்பட்டது. அவர் இதற்கு என்னை பொறுப்பாளியாக வைப்பார். இந்த என் ஜனங்களை நான் தேசம் முழுவதிலுமிருந்து கிறிஸ்துவினிடம் வழி நடத்தினேன். சிறு பிள்ளைகளே, உங்களுக்குதவி செய்ய நான் இங்கிருக்கிறேன். நான் உங்கள் நண்பன். உங்களுக்கு எதிராக நான் பேசுவதாக நீங்கள் நினைக்கலாம்; உங்கள் நன்மைக்காகவே இதைக் கூறுகிறேன். உங்களை நேசிக்கிறேன். அப்படியில்லையென்றால் தேவன் என்னை நீயாயந்தீர்ப்பார். நான் உங்களை நேசிக்கிறேன் என்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். 96இது மிகவும் கடினமான ஒரு செயல். இதை எப்படி எடுத்துரைப்பதென்று எனக்குத் தெரியவேயில்லை. என் சபையில் ஆண்களும் பெண்களும் உட்கார்ந்து கொண்டிருக்கும் போது, அதுவும் அவர்களில் சிலர் இரண்டு அல்லது மூன்று முறை விவாகம் செய்தவர்களாக இருக்கும்போது, நான் என்ன செய்வேன்? நல்ல மனிதர்கள், நல்ல ஸ்திரீகள். ஆனால் குழப்பமடைந்தவர்கள். அதை செய்தது எது? தவறான உபதேசம், நிச்சயமாக. கர்த்தருக்கு காத்திருப்பதில்லை. “தேவன் இணைத்தவர்களை மனுஷன் பிரிக்காதிருக்கக் கடவன்.....” மனிதன் இணைத்தவர்களையல்ல. தேவன் இணைத்தவர்களை. அது உன் மனைவி என்று தேவனிடத்திலிருந்து நேரடியாக நீ வெளிப்பாட்டை பெறும் போது, அவள் உன் ஜீவியகாலம் முழுவதும் உன்னைச் சேர்ந்தவள். பாருங்கள்? ஆனால் மனிதன் இணைத்தவர்களை எவருமே பிரித்துவிட முடியும். ஆனால் தேவன் இணைத்தவர்களை தொடுவதற்கு எந்த மனிதனும் துணிச்சல் கொள்ளாதிருப்பானாக! “தேவன் இணைத்தவர்களை மனிதன் பிரிக்காமலிருக்கடவன்'' என்று அவர் கூறினார். பாதி குடித்த மாஜிஸ்திரேட்டோ அல்லது தேவனுடைய வார்த்தை அங்குள்ளபோது கோட்பாடுகள் எழுதப்பட்ட புத்தகத்தைக் கொண்டவராய், அவர்கள் இவ்வுலகில் என்ன வேண்டுமானாலும் செய்ய அனுமதிக்கும் பின் வாங்கிப் போன போதகர் இணைத்தவர்களைக் குறித்து நான் கூறவில்லை. பாருங்கள்? தேவன் இணைத்தவர்களைக் குறித்து தான் நான் கூறுகிறேன். 97இதை நான் உங்களிடம் கூறுகிறேன். உங்களிடம் கூறுவதை குறித்து நான் மிகவும் கவனமுள்ளவனாயிருக்கிறேன். ஜனங்களாகிய உங்களிடம் நான் கடினமுள்ளவனாக இருக்க வேண்டும் என்னும் எண்ணம் எனக்கில்லை. என் போதகர் சகோதரர்களே, உங்களிடம் கடினமாக இருக்க நான் எண்ணம் கொள்ளவில்லை. ஆனால் அது என் கரங்களில் ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளது என்னும் உணர்வுள்ளவனாக, அதற்கு நான் உத்தரவாதமுள்ளவனாயிருக்கிறேன்... அதை கூறாமல் எனக்குள் வைத்திருக்கவும் முடியாது. அதே சமயத்தில் அதை எவ்வாறு எடுத்துரைப்பது என்றும் எனக்குத் தெரியவில்லை. எனக்குத் தெரியும். இந்த ஒலிநாடா... ஓ, என்னே! நான் கேள்விகளுக்கு பதிலளிக்க ஆயத்தமாக வேண்டும். இந்த அலுவலகம் திறந்தே இருக்கவேண்டும். ஏனெனில் அங்கு தான் கேள்விகள் வந்தடையும். பாருங்கள்! சர்ப்பத்தின் வித்து என்பதன் பேரில் கேள்விகள் எழுந்தது போல். ஆனால் அது முற்றிலும் உண்மை என்று நிரூபிக்கப்பட்டது. நான் செய்தித் தாள்களிலிருந்து பிரதிகள் எடுத்து வைத்தவை என்னிடம் இங்குள்ளன. அதில் பெண்கள்... சில பெரிய சபைகளில், ஒரு பாம்பு ஒரு பெண்ணின் கால்களில் மேல் ஊர்ந்துசெல்லும் அந்த மூலபடம் உள்ளது.... அது எப்படி அவளைச் சுற்றி செல்கிறது! அந்த பெரிய பாம்பு அவளுடைய உடலைச் சுற்றிக் கொண்டிருக்கும்போது, மனிதனால்அளிக்க முடியாத எல்லா விதமான உணர்ச்சிகளும் அவளுக்கு ஏற்படுகின்றது. அது முற்றிலும் உண்மை. அது நாளடைவில் மோசமாகிக் கொண்டே செல்கின்றது. அது அப்படித்தான் மோசமாகிக் கொண்டே செல்லும். சர்ப்பமானது - அது சர்ப்பமாக ஊர்ந்து கொண்டிருக்கும் நிலையில் அவளுடன் உடலுறவு கொண்டிருக்க முடியாது. ஆனால் ஞாபகம் கொள்ளுங்கள்.... 98அன்றொரு நாள் எனக்கு வாக்குவாதம் உண்டாயிற்று. வாக்குவாதம் அல்ல, அசெம்பிளி ஆப் காட் சபையைக் சேர்ந்த ஒரு போதகர், என் கூட்டாளி, ''நீங்கள் கூறுவது தவறு'' என்றார். நான், “இருக்கலாம், அதில் என்ன தவறுள்ளது என்று என்னிடம் கூறுங்கள்'' என்றேன். அவர் கூறினார். அவர் தொடர்ந்து அதைக் குறித்து பேசத் தொடங்கினார். முதலாவதாக என்ன தெரியுமா, அவர் குழப்பமடைந்தார். அவர் ஒன்றைக் கூறினார். அவர், “சகோ. பிரன்ஹாமே, அந்த இனம் எங்கே? தேவன் ஒவ்வொரு இனத்திலும் ஒவ்வொன்றைப் படைத்ததாக கூறியுள்ளாரே. மனிதனுக்கும் மிருகத்துக்கும் இடையே ஒரு இனம் இருந்ததாகவும், விஞ்ஞானம் இப்பொழுது அதை கண்டுபிடிக்க முடியவில்லையென்றும் நீர் கூறின அந்த இனம் எங்கே? அது இவ்வுலகில் உள்ளதா? அது மனிதக் குரங்களா?'' என்றுகேட்டார். இல்லை, மனித குரங்கின் இரத்தம் ஸ்திரீயுடன் கலவாது. வேறெந்த மிருகமும் அவளுடன் கலவ முடியாது. இல்லை, முடியவே முடியாது. அவ்வாறே மனிதனுடைய விந்து (Sperm) வேறெந்த பெண் இனத்தோடும் சேராது. அது முடியாது. அப்படியானால் அந்த குறிப்பிட்ட மிருகம் எங்கே? தேவன், “ஒவ்வொன்றும் அதனதன் இனத்தை பிறப்பிக்கக்கடவது'' என்றாரே. நான் ஒரு நிமிடம் அமைதியாயிருந்தேன். அப்பொழுது பரிசுத்த ஆவியானவரின் இனிமை என்னிடம் ''அது இங்குள்ளது என்று சொல்“ என்றார். நான் முதலில், ''அது ஒருக்கால் அழிந்து போயிருக்கக் கூடும் (extinct) என்றேன்'' அவர், ''ஆனால், சகோ. பிரன்ஹாமே. அது.... நாம் வார்த்தையைக் குறித்து பேசிக்கொண்டிருக்கிறோம், இல்லையா?“ என்றார். நான், “ஆம் ஐயா. டைனோசார்கள் மற்றும் யானை போன்ற மாபெறும் விலங்கள் (mamoths) போன்ற இராட்சத மிருகங்கள் அழிந்து போயின என்று அவர்கள் கூறுகின்றனரே, அது போன்று இதுவும் அழிந்திருக்கக்கூடும்'' என்றேன். அவர், “சகோ. பிரன்ஹாமே, நாம் வார்த்தையின் நிரூபணத்தைக் குறித்து பேசிக் கொண்டிருக்கிறோம். பாவம் இங்குள்ளதென்றால், மூல பாவமும் இங்கிருக்க வேண்டுமே'' என்றார். நான், ''கர்த்தராகிய இயேசுவே, ''நீங்கள் மனிதருக்கு முன்பாக வரும்போது என்ன பேசுவோமென்று கவலை கொள்ளாதிருங்கள். அது அந்நேரத்தில் உங்களுக்கு அருளப்படும்'' என்று கூறினீரே, கர்த்தாவே, இப்பொழுது நான் என்ன கூறுவேன்?'' என்றேன். அவர், ''அது இங்குள்ளதென்று அவரிடம் சொல்'' என்றார். (மேடையின் மேல் தரிசனங்களைக் காண்பது போல்). நான், அது எங்குள்ளதென்று அறியாமலே, “அது இங்குள்ளது” என்று சொன்னேன். அவர், “எங்கே ?'' என்றார். நான் நினைப்பதற்கு முன்பாகவே அவர், ''அது சர்ப்பம்'' என்றார். 99அதுதான் அது. அது இனி ஒருபோதும் மிருகம் அல்ல. அது சபிக்கப்பட்டு, தன் வாழ்நாள் முழுவதும் வயிற்றினால் நகர்ந்து செல்லவேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டது. அது இங்குள்ளது. அது சரியா? (சபையார் “ஆமென்'' என்கின்றனர் - ஆசி) அது இப்பொழுதும் முன் செய்த செயலைப் புரிகிறது. அதே பாவத்தை அது ஒரு ஸ்திரீயை சுற்றிக் கொண்டு செய்கிறது - ஒரு மனிதன் செய்வது போல். அவளுக்கு அந்த உணர்ச்சிகள் உண்டாகும்போது, எந்த மனிதனும் அவளுக்கும் கொடுக்கக்கூடிய உணர்ச்சிகளைக் காட்டிலும் அது சிறந்ததாயுள்ளது. அப்போது இவளுக்கு கண்ணின் கருவிழி வெண்மையாக மாறும் (wall-eyed) நிலை உண்டாகின்றது. இங்கு நான் நிறுத்திக் கொள்கிறேன். ஏனெனில் ஆண்களும் பெண்களும் கலந்த கூட்டமாக இது உள்ளது. நான் ஆண்களை மாத்திரம் ஒன்று கூட்டி, அவர்களிடையே இதைக் குறித்து அதிகமாக பேசுவோம். தாள்கள் அனைத்தும் இப்பொழுது என் கைகளில் உள்ளன. இன்று காலை அதைக் குறித்து பேச எண்ணினேன். நான் முழு நாளும் எடுத்துக் கொள்ளலாமென்று நினைத்தேன். ஆனால் இதை கூறி இப்பொழுது முடித்து கொள்கிறேன். 100இது என் சபைக்கு மாத்திரமே - என் சபை மாத்திரம் அல்ல..., என்னை விசுவாசித்து என்னைப் பின்பற்றும் சிறு மந்தை உள்ளதே; இது அவர்களுக்கு மாத்திரமே. அன்றொரு நாள், நான் எதை உங்களிடம் கூறினாலும் அது கர்த்தர் உரைக்கிறதாவது என்பதாக அவரிடத்திலிருந்து வர வேண்டும் என்று அறிந்தவனாய், அவர் அதை எனக்கு வெளிப்படுத்தித் தந்தபோது, அதற்கு ஆதாரமான வேத வசனங்களும் எனக்குக் கிடைக்கப்பெற்றன. நான், “கர்த்தராகிய தேவனே, இதை எப்படி என் சபைக்கு எடுத்துக் கூறுவேன்? இதன் விளைவாக அநேக பிரிவினைகள் ஏற்பட வழியுண்டே. ஆண்கள் முற்றத்திலும் மற்றவிடங்களிலும் உட்கார்ந்து கொண்டு, ''அவளை விட்டுவிடலாமா?'' என்றும். ஸ்திரீகள், என் கணவரை விட்டுவிடலாமா?” என்றும். ஸ்திரீகள், ''என் கணவரை விட்டுவிடலாமா?'' என்றும் சிந்திக்கத் தொடங்கிவிடுவார்களே, கர்த்தாவே நான் என்ன செய்வேன்?'' என்று முறையிட்டேன். ஏதோ ஒன்று என்னிடம், “மலைக்கு போ, நான் உன்னிடம் பேசுவேன்'' என்றது. நான் மலையின் மேலிருந்த போது... டூசானில் அவர்கள் அதை பார்த்துக் கொண்டிருந்தனர் என்று நான் அறியவில்லை. ஆசிரியைகள் தங்கள் பள்ளிக்கூடப் பிள்ளைகளை என் சிறு பெண் பிள்ளையையும் மற்றவர்களையும் அறையிலிருந்து வெளியே அழைத்து, “மலையின் மேல் பாருங்கள். நெருப்பு உமிழ்கிறது போல் காணப்படுகின்ற சொகுசாவின் நிறம் கொண்ட மேகம் மேலே சென்றும் கீழே வருவதும், மேலே சென்றும் கீழே வருவதுமாயுள்ளது'' என்றனர். 101திருமதி ஈவான்ஸ், இங்கிருக்கிறீர்களா? ரொனி இங்கிருக்கிறாயா? நான் மலையிலிருந்து கீழே இறங்கி வந்து பெட்ரோல் நிறைக்கும் இடத்தை அடைந்தபோது (அங்குள்ள ஈவான்ஸின் பெட்ரோல் நிறைக்கும் இடம்), இந்த வாலிப பையன் என்ன கூறப்போகிறான் என்று அறிவதற்கு முன்பே - அவன் கூறினது என்னை வியப்பில் ஆழ்த்தியது. அவன் “சகோ. பிரன்ஹாமே, நீங்கள் மலையின் மேல் இருந்தீர்கள் அல்லவா?'' என்றான். நான், “ரொனி, நீ என்ன கூறுகின்றாய்? இல்லை” என்றேன் (பாருங்கள்? அவன் என்ன செய்கிறான் என்று பார்ப்பதற்காக. அநேக முறை காரியங்கள் நிகழ்கின்றன). அவைகளை நான் ஜனங்களிடம் கூறுவது கிடையாது. அது என்னவென்றால், அவை நிகழ்வதை அதிகமாக நீங்கள் காணும்போது, அது வழக்கமான ஒன்றாகிவிடுகிறது. பாருங்கள்? நான் ஜனங்களிடம் கூறுவது கிடையாது. நான், “ரொனி, நீ என்ன....” என்றேன். அவன், ''நீங்கள் எங்கே இருந்தீர்கள் என்பதை நான் உங்களுக்கு காண்பிக்க முடியும். நான் அம்மாவை அழைத்தேன். நாங்கள் இருவரும் நின்று கொண்டு, வானத்தில் தொங்கிக் கொண்டிருந்த அந்த மேகம் மேலும் கீழும் செல்வதை கவனித்தோம். “சகோ. பிரன்ஹாம் அங்கு மேலே எங்கோ ஓரிடத்தில் உட்கார்ந்து கொண்டிருக்க வேண்டும் அது தேவன் அவருடன் பேசிக் கொண்டிருப்பதாகும் என்று நான் சொன்னேன்'' என்றான். நகரத்திலுள்ள ஜனங்கள் எல்லோருமே அதை கண்டனர், மேகங்கள் இல்லாத பிரகாசமான ஒரு பகல் வேளையில், இந்த பெரிய சொகுசாவின் நிறமுள்ள மேகம் புனலை (funnel) போன்று கீழே இறங்கி வந்து மறுபடியும் மேலே சென்று விரிவடைந்தது. 102நண்பர்களே (நான் முடிக்கப்போகிறேன். இதன் பிறகு நீங்கள் வீடுகளுக்குச் செல்லாம் ). நான் இப்பொழுது கூறப் போவது, அந்த நேரத்தில் எனக்கு வெளிப்படுத்தப்பட்ட ஒன்றாகும். எனவே அதை கேட்கத்தவறாதீர்கள். எங்களைப் பின்பற்றுகிறவர்களுக்கு மாத்திரமே - என்னையும் இந்த செய்தியையும் பின்பற்றுகிறவர்களுக்கு மாத்திரமே - இதைக் கூறுகிறேன், வெளியிலுள்ளவர்களுக்கு அல்ல, இது தேவனுக்கு முன்பாக என்னைக் குறித்து சாட்சி கொடுக்கும். இது இந்த குழுவிற்கு மாத்திரமே. வேதசாஸ்திரம் தவறாக வியாக்கியானம் செய்யப்பட்டதன் விளைவாக நாம் இந்த குழப்பத்தில் அகப்பட்டுக் கொண்டுவிட்டோம். அது சரியா? அதன் விளைவாகத்தான் பெண்களாகிய நீங்கள் இரண்டாம் முறை விவாகம் செய்து கொண்டீர்கள். ஆண்களாகிய நீங்கள் தவறாக வியாக்கியானம் செய்யப்பட்ட வேத சாஸ்திரத்தின் விளைவாக. அவர் என்னிடம் கூறின ஒன்றை இப்பொழுது உங்களுக்குக் காண்பிக்க விரும்புகிறேன். நமது சிருஷ்டி கர்த்தராகிய தேவன் இவ்வுலகில் இருந்த போது (இயேசு கிறிஸ்துவாக), இந்த கேள்வி அவரிடம் கேட்கப்பட்டது. எகிப்திலிருந்து இஸ்ரவேல் புத்திரரை விடுவித்து வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு அவர்களைக் கொண்டு செல்வதற்காக அனுப்பப்பட்ட அவருடைய விடுவிக்கும் தீர்க்கதரிசி (மோசே) ஜனங்கள் அந்நிலையில் இருக்கக் கண்டு, அந்த சூழ்நிலையின் காரணமாக தள்ளுதற் சீட்டை எழுதிக் கொடுக்க அனுமதித்தான் என்று இயேசு கூறினார். மோசே, அவன் அப்படி செய்வானாக'' என்றான். தள்ளுதற் சீட்டை எழுதிக் கொடுக்கக் கூற ஜனங்களிடம் அனுப்பப்பட்ட தீர்க்கதரிசியாக மோசேயை தேவன் அனுமதித்தார். 1031 கொரிந்தியர் 7 ம் அதிகாரம் 12-ம், 15-ம் வசனங்களில் புதிய ஏற்பாட்டின் தீர்க்கதரிசியாகிய பவுல் இதே விதமான சூழ்நிலை தன் சபையில் இருக்கக் கண்டு . “கர்த்தர் அல்ல. நானே சொல்லுகிறதாவது” என்றான். அது சரியா? விவாகரத்து சூழ்நிலை காரணத்தால். ''ஆதிமுதலாய் அப்படியிருக்கவில்லை'' ஆனால் மோசே அவ்வாறு கூற அனுமதிக்கப்பட்டான், அது நியாயமானது என்று தேவன் அங்கீகரித்தார். பவுலுக்கும் கூட, அவன் தன் சபையை அந்நிலையில் கண்டபோது, உரிமையளிக்கப்பட்டது. இதை நீங்கள் உண்மையென்று நம்பி, இது தேவனிடத்திலிருந்து வந்ததென்று விசுவாசியுங்கள், அவருடைய மேகமும், என்னை இவ்வளவு தூரம் கொண்டு வந்துள்ள அவருடைய செய்தியும் காண்பிக்கும் உறுதிப்படுதலை ஆதாரமாகக் கொண்டு, மலையின் மேல் தேவன், என்னை அதே காரியத்தை செய்யவும், நீங்கள் இப்பொழுது இருக்கிற விதமாகவே இருந்து, இனிமேல் அப்படி செய்யாதிருக்கும்படி உங்களுக்கு உத்தரவு கொடுக்க அனுமதிக்கமாட்டாரா என்ன உங்கள் மனைவிகளுடன் சென்று சமாதானமாயிருங்கள். ஏனெனில் காலதாமதமாகிவிட்டது. கர்த்தருடைய வருகை சமீபமாயுள்ளது. உறவுகளை முறித்து போடுவதற்கு நமக்கு நேரமில்லை. அதை மறுபடியும் செய்ய துணிச்சல் கொள்ளாமலிருங்கள்! நான் என் சபைக்கு மாத்திரமே இதை கூறுகிறேன். நீங்கள் விவாகம் செய்து கொண்டிருந்தால் - ஒரு தெய்வீக வெளிப்பாடாகிய இதை நான் கூறத்தக்கதாக, அந்த மலையின் மீது, தேவன் எனக்கு அதை சாட்சியாக கொடுத்தார், ஏனென்றால் ஏழு முத்திரைகளின் திறக்கப்படுதலால்தான், மேலும், இது தேவனுடைய வார்த்தையில் இருக்கின்ற ஒரு கேள்வியாகும். அவர்கள் இப்பொழுதுள்ள விதமாகவே வாழ்ந்து இனி பாவஞ் செய்யாதிருப்பார்களாக. 104ஆதிமுதலாய் அப்படியிருக்கவில்லை. அது உண்மை . அப்படி யிருக்கவில்லை, முடிவிலும் அப்படியிருக்காது! ஆனால் நவீன சூழ்நிலையில், தேவனுடைய ஊழியக்காரன் என்னும் முறையில் - என்னை அவருடைய தீர்க்கதரிசியென்று அழைத்துக்கொள்ள மாட்டேன். அதற்கென்று நான் அனுப்பப்படாவிட்டால், தீர்க்கதரிசி வரும்போது, அவருக்கென்று ஒரு அஸ்திபாரம் இருக்கத்தக்கதாக அதை போட்டுக்கொண்டிருக்கிறேன். எனவே நவீன சூழ்நிலையில், உங்கள் மனைவிகளுடன் இப்பொழுது வீடு சென்று வாழ்க்கை நடத்தும்படி உங்களுக்கு கட்டளையிடுகிறேன். அவளுடன் நீங்கள் மகிழ்ச்சியாயிருந்தால், அவளுடன் வாழ்ந்து குழந்தைகளை தேவ பக்தியில் வளர்ப்பீர்களாக! ஆனால் நீங்கள் மறுபடியும் அதை செய்வீர்களானால், தேவன் உங்கள் மேல் இரக்கமாயிருப்பாராக! அப்படிப்பட்ட ஒன்றை செய்யாதிருக்கும்படி உங்கள் பிள்ளைகளுக்கு போதியுங்கள். அவர்களை தேவ பக்தியில் வளர்ப்பீர்களாக! நீங்கள் அந்த விதமாக இப்பொழுது இருப்பதால், நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த கடைசி சாயங்கால நேரம் வரைக்கும் அப்படியே இருந்து, கிறுஸ்துவின் தேவன் நமக்கு வைத்திருக்கும் பரம அழைப்பின் பந்தயப் பொருளுக்காக இலக்கை நோக்கிக் தொடருவோம். அங்கு எல்லாமே கைகூடும். உங்களை இன்றிரவு காணும் வரைக்கும் தேவனாகிய கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. நாம் ஜெபம் செய்வோம். 105கர்த்தராகிய தேவனே, உமக்கு நன்றி சொல்லுகிறோம். உமக்கு ஸ்தோத்திரத்தை ஏறெடுக்கிறோம். மோசேயை அனுமதித்த மகத்தான யேகோவா இன்றும் மாறாதவராயிருக்கிறீர். உம்முடைய ஊழியக்காரனாகிய மோசே ஜனங்களிடம் என்ன கூறினான்? தேவனே, அவர்கள் தள்ளுதற் சீட்டை எழுதிக் கொடுக்கக் கூறும்படி அவனை அனுமதித்தீர். மோசே பழைய ஏற்பாட்டை எழுதினது போல், அந்த மகத்தான அப்போஸ்தலனாகிய பவுல் புதிய ஏற்பாட்டை எழுதினான். மோசே நியாயப்பிரமாணத்தையும் நியாயப்பிரமாணத்தின் யுகத்தையும் எழுதி வைத்தான். அநேக தீர்க்கதரிசிகளின் வார்த்தைகள் அதில் இடம் பெற்றன. ஆனால் மோசேயோ நியாயப்பிரமாணத்தை எழுதினான். அவர்களுடைய இருதயக் கடினத்தினிமித்தம், அவர்கள் தள்ளுதற் சீட்டை எழுதி தள்ளிவிடலாமென்று கூறும்படி நீர் மோசேயை அனுமதித்தீர். அந்த மகத்தான பரிசுத்தவானும், புதிய ஏற்பாட்டை எழுதினவனுமான் பவுல், “இந்த சூழ்நிலையில் நான் சொல்லுகிறதாவது கர்த்தர் அல்ல'' என்கின்ற உறுதியான வலியுறுத்தலையும் கூற முடிந்தது. 106கர்த்தராகிய தேவனே, உலகத்தின் முடிவு காலத்தில் இன்றும் அவ்வாறேயுள்ளது. நாங்கள் இங்கு தேவனுடைய இரக்கத்தின் கீழ் இருந்து கொண்டு விரைவில் உம்முடைய சமூகத்தில் நாங்கள் பதில் கூற வேண்டுமென்று அறிந்திருக்கிறோம். கர்த்தாவே, நீர் எங்களுக்கு எத்தனையோ நன்மைகளை செய்திருக்கிறீர். இது உம்மிடத்தில் இருந்து வந்ததென்று ஜனங்கள் அதை இறுகப் பற்றிக் கொள்வார்கள் என்று உறுதி கொள்கிறேன். இங்கு உட்கார்ந்திருப்பவரில் அநேகர் சுழல் காற்றில் கர்த்தருடைய ஏழு தூதர்கள் இறங்கி வந்த அடையாளத்தை மலையின் மேல் கண்டு, இன்று அதற்கு சாட்சிகளாயிருக்கின்றனர். அங்கு ஏழு இரகசியங்கள் திறக்கப்பட்டு வெளிப்படுத்தப்பட்டன. அந்த அதே தூதன், அதே திரையில், இது வெளிப்படுத்தப்பட்ட அந்த நாளில், அதே மலையின் மேல். தேவனே, இந்த கிருபையை தேவன் அவர்களுக்கு அளித்துவிட்டார் என்று நன்றியுள்ளவர்களாக ஜனங்கள் வீடு செல்லும்படி வேண்டிக் கொள்கிறேன். கர்த்தாவே, உமது அனுமதியைப் பெற்று அதை நான் உரைத்தேன். உமது அனுமதியைக் பெற்றே இதை நான் உரைத்தேன். உமது அனுமதியைக் பெற்றே இதை கூறினேன். ஜனங்கள் நன்றியுள்ளவர்களாயிருந்து, இந்த பாவத்தை மறுபடியும் செய்யாதிருப்பார்களாக. எந்த பாவத்தையும் அவர்கள் செய்யாமல், உம்மை முழு இருதயத்தோடும் நேசிக்க அருள் புரியும். கர்த்தாரவே, இந்த குடும்பங்களுக்கு நீர் மகிழ்ச்சியளித்து, அவர்கள் வளரவும், பிள்ளைகளை தேவபக்தியில் வளர்க்கவும் கிருபையருளும். 107கர்த்தாவே, என் இருதயத்திலிருந்த செய்தி அளிக்கப்பட்டுவிட்டது. எனக்கு செய்யத் தெரிந்த எல்லாவற்றையும் நான் செய்துவிட்டேன். அநேக வாரங்களாக, மணிக்கணக்காக சாத்தான் என்னுடன் போராடினான். எனக்கு உறக்கமேயில்லை. கர்த்தாவே, இதை நான் ஜனங்களுக்கு கட்டளையிடுகிறேன். அவர்கள் இதை ஆராய்ந்து பார்த்து, சென்று, உமக்காக வாழ்வார்களாக! கர்த்தாவே இதை அருளும். என் தோளின் மேலிருந்த பாரம் போய்விட்டது. அவர்கள் உம்முடைய கரங்களில் உள்ளனர். அவர்களை ஆசீர்வதிக்குமாறு வேண்டிக்கொள்கிறேன். கர்த்தாவே, வியாதிப்பட்டவர்களுக்காகவும் அவதியுறுபவர்களுக்காகவும் இங்கே வைக்கப்பட்டுள்ள அந்த கைக்குட்டைகளை ஆசிர்வதிப்பீராக. இந்த இரவு மிகவும் மகத்தான, மிகவும் வல்லமையுள்ள இரவுகளில் ஒன்றாகத் திகழ்ந்து, எல்லோரும் சுகமடைவார்களாக. கர்த்தாவே, அதை அருளும். எங்கள் அனைவரையும் ஒருமித்து ஆசீர்வதியும். 108சிருஷ்டிப்பின் தேவன் ஆதிமுதற்கொண்டு என்ன நடந்ததென்று காண்பித்து, இக்கடைசி நாட்களில் நாம் அடைந்துள்ள இந்த குழப்பமான சூழ்நிலையில் நமக்கு மறுபடியும் கிருபையை அருளினபடியால், நாங்கள் சமாதானத்துடனும் சந்தோஷத்துடனும் வீடு செல்ல அருள்புரியும், ஓ, மகத்தான நித்திய தேவனே! இதற்காக நாங்கள் எவ்வளவாய் உமக்கு நன்றி செலுத்துகிறோம். எங்கள் இருதயங்கள் சந்தோஷத்தினால் களி கூர்ந்து, உமக்கு விரோதமாக பாவம் செய்வதற்கு எங்களுக்கு வேறெந்த வாஞ்சையும் எழாமலிருப்பதாக. இயேசுவின் நாமத்தில். ஆமென். நேசிக்கிறேன் (அவரை நீங்கள் ஏன் நேசிக்கக் கூடாது?) நேசிக்கிறேன். முந்தி அவர் என்னை நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்தில் போதகர்கள் விளங்கிக் கொள்ளும்படி இதை இப்பொழுது கூறுகிறேன்: இது என் செய்தியைப் பின்பற்றுகிறவர்களுக்கு மாத்திரமே. ஓ, நீங்கள் மகிழ்ச்சியாயிருக்கிறீர்களா? நான் உங்களிடம் உண்மையைக் கூறினேன். அது முழுவதும் கர்த்தர் உரைக்கிறதாவது. இப்பொழுது நாம் எழுந்து நின்று, நமது கரங்களையுயர்த்தி, ''நான் அவரை நேசிக்கிறேன்'' என்னும் பாடலை மறுபடியும் பாடுவோம். அவருடைய கிருபைக்காக அவரை நேசிக்கிறேன்; அவருடைய இரக்கத்துக்காக அவரை நேசிக்கிறேன்; அவருடைய வார்த்தைக்காக அவரை நேசிக்கிறேன். கர்த்தருடைய வார்த்தை தீர்க்கதரிசிகளுக்கு வந்தது. நான் அவரை நேசிக்கிறேன் வாருங்கள், சகோதரனே (சகோதரன் பிரன்ஹாம், ஆராதனையை ஜெபத்தில் முடிக்கும் பொருட்டு ஒரு சகோதரனை அழைக்கின்றார் - ஆசி ) நான் அவரை நேசிக்கிறேன்....